தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

6.25 pm

இன்றைய தரிசன நேரம் கேள்வியுடன் துவங்கியிருக்கிறது...

"நம் சக்தி முழுவதும் சிவனை நோக்கி செலுத்துவது எப்படி?" என்ற கேள்வியை தியான அன்பர் சத்குருவிடம் கேட்க...

சத்குரு உரையிலிருந்து....

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்களுக்கு தெரியாததை எப்படி சொல்லிக் கொடுப்பது. உங்கள் போரானந்தத்தையே நீங்கள் சிவனுக்கு கொடுத்தால் அவனுக்கு என்ன கிடைக்கப் போகிறது?

உங்கள் சக்தி முழுவதும் ஒரே திசையில் செலுத்த வேண்டியது மிக அவசியம். உங்கள் மனது ஒரு பக்கமும், உங்கள் வேட்கை மற்றொருவரிடத்திலும், உங்கள் உணர்வு வேறு திசையிலும் இருந்தால் அதனை ஒரே திசையில் செலுத்த முடியுமா என்ன? ஒரு நட்சத்திரம் ஐந்து முனை கொண்டதாய் இருந்தால் அதனால் ஏதாவதொரு திசையில் நகர இயலுமா என்ன? நீங்கள் வளர வேண்டுமென்றால், உங்களைச் சார்ந்த அத்தனையும் ஒரே திசையில் செல்ல வேண்டியது மிக அவசியம். ஓ! நான் ஒரு திசையில் செல்ல நான் காசிக்கு பயணப்பட வேண்டுமா? இல்லை, நீங்கள் உள்நிலை நோக்கி நகர வேண்டும். உள்நிலை என்பது திசையல்ல அது ஒரு பரிமாணம். நீங்கள் மற்றொரு பரிமாணத்திற்குள் நுழைய வேண்டுமென்றால் நீங்கள் உள்நோக்கி நகர வேண்டும்.

உங்களிடம் இல்லாததை மற்றவருக்கு வழங்க முடியுமா? ஆனால் பெரும்பாலான மக்கள் தங்களிடம் இல்லாததை கடவுளுடன் பகிர்ந்து கொள்ள விழைகின்றனர். சிவன் தன் பக்தர்கள் தனக்கு அன்பாக அர்ப்பணிக்கும் ஒரு காய்ந்த போன சருகினாலும் இன்புறுகிறான் என்று சொல்லப்படுகிறது. இந்த உவமை சொல்ல வருவதெல்லாம் முழுமையாக எதை வழங்கினாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதைத்தான். உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை முழுமையாய் வழங்குங்கள். பரிபூரணமாய் வழங்குங்கள். உங்களிடம் இருப்பதென்ன என்பது முக்கியமல்ல, வழங்குவதை பரிபூரணமாய் வழங்குங்கள்.

7.08 pm

சத்குரு பரிட்சை பயத்தை எப்படி எதிர்கொள்வது? என ஒரு குழந்தை கேட்க, சமூகத்தின் மனப்பான்மையை பற்றி பேசிய சத்குரு, இந்த நோக்கத்தில் நம் அணுமுறையில் தேவைப்படும் மாற்றத்தை பற்றி விளக்கினார்.

7.11 pm

எனக்கு தெரிந்த எய்ட்ஸ் நோயாளி தான் இறக்கப் போகும் நேரத்தைச் சொல்லி அதன்படியே இறந்து போனார், இது எப்படி சாத்தியம்? என வேலூரிலிருந்து வந்திருந்த தியான அன்பர் ஒருவர் கேட்க...

மனிதன் மலர அவனுக்குள் ஒரு விதை அவசியம். ஆனால் அந்த விதை விதைக்க நாம் நேரம் ஒதுக்குவதில்லையே! இந்த விதை முளைத்து வளர்ந்துவிட்டால் அது பிரம்மாண்டமாய் இருக்கும். நம்மில் பலரும் விதையை வாங்கிக் கொள்கிறார்கள் ஆனால் அதனை கவனிக்காமல், வளர விடாமல் செய்து விடுகிறார்கள். என்ன பிரயோஜனம்? வளராத, மலராத விதையினால் என்ன பிரயோஜனம்?

"நான் நிலையில்லாதவன்" என்ற விழிப்புணர்வு நமக்குள் மலர்ந்துவிட்டால் விதை மலர்ந்துவிடும். சிவன் போய் மயானத்தில் அமர்ந்தான், எதற்கு? நாம் நிலையில்லாதவர்கள் என்று நமக்கு உணர்த்தத்தான். விதை மலர்வதற்கான சூழ்நிலையை உருவாக்குங்கள் அனைத்தும் சாத்தியமே!

7.24 pm

இத்தனை கேள்விகள் இங்கு கேட்கப்பட்டாலும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எனக்கு முக்திதான் வேண்டும்? என ஒரு பெண் தியான அன்பர் எழுந்து கேட்க.

மூன்று நாட்களாவது ஈஷா யோகா மையத்தில் வந்து தங்குங்கள், உங்கள் முக்தியை பார்த்துக் கொள்ளலாம்" என்று அருள்மழை பொழிந்தார் சத்குரு.