தரிசனம் காண்போருக்கும் உண்டு, காணாதவர்க்கும் உண்டு. இதோ இந்த வலைப்பக்கத்தின் மூலம் உங்கள் இல்லத்திலேயே இன்று மாலை தரிசனம் தரவிருக்கிறார் சத்குரு.

மாலை 6.20 திற்கு துவங்கும் தரிசன நேரத்தில் நடைபெறும் நிகழ்வுகளை, சத்குரு உரையிலிருந்து சில துளிகளை, பொதுமக்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த சுவாரஸ்ய பதில்களை, இங்கே உங்களுக்காக பதிவேற்றவுள்ளோம்! தொடர்பில் இருங்கள்…

மார்கழியின் மென்மை பனிபோர்த்திய பசுமை
இனிமை நிறைந்த காலை, இதமான மாலை என
இந்த மாதத்தில் மலர்வது மலர்கள் மட்டுமல்ல, மனிதனும் தான்
மார்கழியின் ஆன்மீகத்தன்மையைப் பற்றி சத்குரு இன்று விரிவாகப் பேசினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"மார்கழி இந்த மாதம் மாதங்களில் எல்லாவற்றிலும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இது நம்மை சமநிலைப்படுத்துவற்கான காலம். பூமி சூரியனிற்கு மிக அருகில் இருக்கும் காலமிது. இம்மாதத்தில், பூகோளத்தின் தெற்குப் பகுதி சூடாகவும், வடக்குப் பகுதி குளுமையாகவும் இருக்கும்.

இந்த மாதத்தில் பெண்கள் ஆண்கள் செய்வதையும், ஆண்கள் பெண்கள் செய்வதையும் செய்து தங்களை ஒரு சமநிலைக்கு எடுத்து வரும் சாதனா நம் கலாச்சாரத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கும் வழக்கத்தைப் பார்த்தால் ஆண்கள் பக்தியாக பஜனைகள் பாடுவதிலும் பெண்கள் வடிவியல் ரீதியாக கோலங்கள் இடுவதையும் நாம் பார்க்க முடியும். மேலும் இந்தக் காலகட்டத்தில் வளர்ச்சி விகிதமும் சற்றே குறைவாக இருப்பதாலும், கீழ்நோக்கி நம் சக்தி இழுக்கப்படுவதாலும் மங்களமான காரியங்களையும் தமிழ்நாட்டில் தவிர்க்கின்றனர்.

உடலும் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக இம்மாதத்தில் ஆன்மீக ரீதியில் பல சாதனைகளை உருவாக்கி வைத்தனர். இந்தச் சமயத்தில் கருவுருதலும் தவிர்க்கப்பட்டு பிரம்மச்சரிய விரதம் வழங்கப்பட்டது. மலைகளுக்குச் சென்று விரதங்கள் பூணும் காலமாக இது உருவாக்கப்பட்டது. இது ஆன்மீக வளம்பெறும் காலம். யோகமும் இந்தக் காலத்தை ஒருவர் பயன்படுத்திக் கொள்வதையே விரும்புகிறது," என்றவர் தமிழ்நாட்டில் மார்கழி மாதத்தின்போது வழக்கில் இருக்கும் சில பழக்க வழக்கங்களை மேற்கோள் காட்டி அதன் விஞ்ஞானத்தையும் அழகுடன் விளக்கினார்.

கோவிலில் புளிய மரம் எதற்கு? என சிவாங்கா சாதனா செய்த ஒருவர் கேள்வி எழுப்ப...

"உடலில்லா உயிர்கள் அதிக உயிர் நடமாட்டமில்லா புளிய மரத்தில் இருப்பதை விரும்புகின்றன. அம்மரத்தில் இரவுப் பொழுதுகளில் கரியமில வாயு அதிகமாக வெளியேற்றப்படுவதால் அங்கு பறவைகள் இரவில் தங்குவதில்லை அதனால் அங்கு உடலில்லா இந்த உயிர்கள் அங்கு இருக்கின்றன. குறிப்பாக கோவில் போன்ற சக்தி வாய்ந்த சூழ்நிலையில் இதுபோன்ற அமைப்பு இருக்கும்போது இவ்வுயிர்கள் அங்கு அதிகமாக ஈர்க்கப்படுகின்றன. இதனால்தான் மாதத்தின் சில நாட்களில் பெண்களை கோவில்களுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்கிறோம். இதுபோன்ற உயிர்கள் அங்கிருக்கும்போது அவர்களின்பால் ஈர்க்கப்படலாம் என்பதால்தான்,"

என்று உடலில்லா உயிர்களின் சாம்ராஜ்ஜியத்திலிருந்து சில அத்தியாயங்களை நமக்கு புரட்டிக் காட்டினார் சத்குரு.

கருவறையிலிருந்து கல்லறை சுழற்சி எதற்காக, இந்த படைத்தலின் நோக்கம் என்ன என்று ஒருவர் கேள்வி எழுப்ப...

சம்சாரா என்றால் சுழற்சி - குடும்ப சுழற்சி. சம்சாரத்திலிருந்து சன்யாசத்திற்கு நகர்வதே விடுதலைக்கான பாதை. இந்த உடல் சார்ந்த பரிமாணம் சுழற்சிக்கு உரியது, உயிர் சார்ந்த பரிமாணத்திற்கு சுழற்சி என்பது கிடையாது. நீங்கள் இந்த சுழற்சியிலிருந்து விடுதலை பெற வேண்டுமென்றால் நீங்கள் அதிலிருந்து வெளியே வரவேண்டும். ப்ரகிருதி, சக்தி என்றால் படைப்பு; புருஷா என்றால் ஒன்றுமில்லாதன்மை. இதனையே யோகத்தில் ஷி-வா அல்லது ஷுன்யா என்கிறோம்.
எதுவொன்று சுழற்சியில் இருக்கிறதோ அதுவொன்றே உடலில் இருக்க முடியும், எதுவொன்று சுழற்சியை தாண்டிவிட்டதோ அதை நிர்வாணம் அல்லது முக்தி என்கிறோம். அந்த உயிர் சம்சார சாகரத்தை கடந்துவிட்டது என்கிறோம்.

படைப்பின் நோக்கம் என்ன என்று நீங்கள் கேட்டால் என்னால் கதை சொல்லத்தான் முடியும். அதுவே சத்குரு இந்த சுழற்சியிலிருந்து எப்படி விடுபடுவது என்று கேட்டால் என்னால் வழி சொல்ல முடியும்,"

என்று தேடுதலில் உள்ளவருக்கும் படைத்தலைப் பற்றி கேள்வி எழுப்புபவருக்கும் உள்ள வித்தியாசத்தையும், ஒரு குரு ஒருவருக்கு அளிக்கக்கூடிய உறுதுணையையும் அழகாக உணர்த்தினார்.

ஷாம்பவி செய்தால் எனக்கு கண்ணீர் வருகிறதே என புதிதாக ஷாம்பவி கற்ற சீனத்தை சேர்ந்தவர் ஒருவர் கேட்க...

நீங்கள் இப்போதுதான் மனிதராக இருக்கிறீர்கள் என்று நகைச்சுவை ததும்ப பதிலளித்து விடை பெற்றார் சத்குரு.