இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

6:30

நிலவொளிக்கு ஒளிகூட்டும் வண்ணம் சத்குரு வந்து அமர, ஈஷா இசைக்குழு ஷம்போ மஹாதேவ பாடலை இசைத்தது.

6:40

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஹட யோகா ஆசிரியர் பயிற்சி இன்னும் மூன்று நாட்களில் நிறைவடைகிறது. ஹட யோகா என்பது மனிதன் பிரபஞ்சத்தின் மீதியுடன் இணக்கமாக இருப்பது பற்றியது. படைத்தவனின் தன்மை படைப்பிலும் இருக்கிறது. சந்திரன் மற்றும் சூரியனின் சுழற்சி மனிதனின் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. சந்திரனின் சுழற்சி 28 நாட்களாக இருக்கிறது. சூரியனின் சுழற்சி 12¼ வருடங்களாக இருக்கிறது. மனிதன் இந்த சூரியன் மற்றும் சந்திரனின் சுழற்சியுடன் இணக்கமாக இருந்தால்தான், ஒருவர் குறைந்தபட்ச உராய்வுடன் இருக்கமுடியும்.

ஒருவர் இந்த சுழற்சியைத் தாண்டி நேராக நடைபோட விரும்பினால் ஆன்மீகப் பாதையை தேர்ந்தெடுக்கிறார். ஆனால் பொருள்தன்மை என்பது சுழற்சியான தன்மையில் மட்டுமே இருக்கமுடியும். மிகச்சிறிய வட்டத்தில் நீங்கள் இருந்தால் இந்த சுழற்சியில் சிக்கியிருப்பீர்கள். இதில் மிகப்பெரிய வட்டத்தில், விளிம்பில் இருந்தால், சூரியனின் சுழற்சியுடன் இணக்கமாக இருந்தால், ஒருநாள் இந்த சுழற்சியை உடைத்திட முடியும். இந்த உடல் என்பதை ஒரு சுவர் போல வைத்திருந்தால் இதை கடக்கமுடியாது. உடலை ஒரு கதவு போல வைத்திருந்தால், நாம் வெளியே நடந்துசெல்லமுடியும். சூர்ய க்ரியா பயிற்சி இந்த திசையில் ஒரு சக்திவாய்ந்த படி.

7:01

குரு சிஷ்ய உறவில் யார் இதை முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்க, “யாருக்குத் தேவை இருக்கிறதோ அவர்தான் இதை நடத்தவேண்டும். ஒரு குரு யாரை வழிநடத்துவது வழிநடத்தாமலிருப்பது என்று பிரித்துப்பார்ப்பதில்லை. அவர் அனைவரையும் அனைத்தையும் உயிராகவே பார்க்கிறார். ஒருவரை உயர்வாகப் பார்த்தாலும் மிகைப்படுத்திப் பார்ப்பீர்கள். தாழ்வாகப் பார்த்தாலும் எதிர்மறையாக மிகப்படுத்திப் பார்ப்பீர்கள். யோகா முழுவதும் உள்ளதை உள்ளபடி பார்ப்பது பற்றியது. குரு என்பவர் அனைத்தையும் ஒரேவிதமாகப் பார்க்கிறார், யாருக்குத் தேவையிருக்கிறதோ அவருக்குத் தேவையானதைச் செய்கிறார்.” என்று சத்குரு பதிலளித்தார்.

7:15

லிங்கபைரவி யந்த்ராவை ஏன் இந்தியர்கள் மட்டுமே அதிகம் வைத்திருக்கிறார்கள், இது கலாச்சாரம் சம்பந்தப்பட்டதா என்று ஒரு அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் கேட்க, “அமெரிக்கர்கள் நிறையபேர் யந்த்ரா வைத்திருக்கிறார்கள். யந்த்ரா என்பது மனிதர்களுக்காக உருவாக்கப்பட்டது. அதற்கான தேவை உள்ளவர்கள் வைத்துக்கொள்ளலாம்.” என்று சத்குரு கூறினார்.

7:30

ஒரு துள்ளலான பாடலை ஈஷா இசைக்குழு இசைக்க, சம்ஸ்க்ருதி குழந்தைகள் ஆடத்துவங்க, சிறிது நேரம் எழுந்துநின்று கைதட்டியபடி மெட்டுப்போட்டுவிட்டு விடைபெற்றுச்சென்றார்.