இங்கே கோவை ஈஷா யோகா மையத்தில், சில நூறு பேர் சத்குருவின் தரிசனத்தில், அவர் அருளில் திளைக்க காத்திருக்கிறோம். உங்களுக்கும் அந்தப் பட்டியலில் சேர விருப்பமா? இதோ இந்த நேரலை வர்ணனையில் எங்களுடன் இணைந்திருங்கள். மாலை 6.20 மணிக்கு துவங்கும் தரிசன நேரம் முழுமையாக உங்கள் கணினித் திரையில் விரிகிறது...

6:25

பனிமழையில் நனைந்தபடி சத்குருவின் வருகையை எதிர்பார்த்து ஏங்கியிருந்தோரின் தாகம் தணிய அருள்மழையாய் வந்து அமர்ந்தார் சத்குரு.

.6:30

இப்போதுதான் இன்சைட் (Insight) நிகழ்ச்சி நிறைவடைந்திருக்கிறது. தொழிலதிபர்களுக்கு நாங்கள் தொழில்செய்வது குறித்து வழிநடத்தினோம். இந்தியாவின் பூம்புகார் நகரில் பல்லாயிரம் ஆண்டுகளாக மிக உயிர்ப்பான வர்த்தகம் நடந்துவந்துள்ளது. கடந்த 250 வருடங்களில் நம்மிடமிருந்து எல்லாம் திருடப்பட்டதால் பல வளங்கள் தொலைந்துவிட்டது. இந்தியாவின் வர்த்தக உலகில் இந்த நிகழ்ச்சி பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் தொழில் முறைகள் 100 வருடங்களுக்கு முன்பு வெள்ளையர்களால் உலகம் களவாடப்பட்டபோது உருவாக்கப்பட்டது. இது மாறவேண்டும், தொழில் என்பது இருதரப்பினருக்கும் பலனளிக்கும் விதமாக இருக்கவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

6:40

மனித விழிப்புணர்வு பொருளாதாரம் செல்லும் திசையை நிர்ணயிக்கவேண்டும், ஆனால் இப்போது இது தலைகீழாக நிகழ்கிறது, பொருளாதாரமே உலகை வழிநடத்துகிறது. தொழிலதிபர்கள் தங்கள் தனிப்பட்ட நலனைப் பற்றி மட்டுமே சிந்திப்பதை விடுத்து, உலகம் முழுவதன் நலத்தையும் அவர்கள் மனதில்கொள்ளும் விதமாக அவர்களின் கண்ணோட்டத்தை மாற்றுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாக இருக்கிறது.  இந்த விதத்தில் இந்நிகழ்ச்சி அற்புதமாக செயல்பட்டுள்ளது.

6:55

கேள்வி: இராமாயனத்தில் வரும் சீதைக்கும் மஹாபாரதத்தில் வரும் திரௌபதிக்கும் இடையிலான வித்தியாசமென்ன?

சத்குரு: காலத்தில் முதலில் நிகழ்ந்தது இராமாயனம், அதற்குப் பிறகு நிகழ்ந்தது மஹாபாரதம். சீதா என்பவள் பண்பட்ட ஒரு பெண், திரௌபதி என்பவள் கட்டுப்பாடுகளுக்குள் அடங்காத ஒரு பெண். சரித்திரத்தைப் பார்த்தால், மிக மோசமான விஷயங்கள் சீதாவிற்கு நடந்தது. அப்போதும் எந்த ஒரு சூழ்நிலையிலும் அவள் பழிவாங்குவதைப் பற்றி பேசவில்லை.

திரௌபதி முற்றிலும் மாறுபட்டவள், அவளுக்கு கேடு விளைவைத்தவர்களின் இரத்தத்தைப் பார்க்கத் துடித்தாள். அவளின் அபரிமிதமான உணர்ச்சிப்பெருக்கு போருக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது. அவள் உணர்ச்சிகளாலே அவள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகினாள்.

சீதா அனைத்தையும் பொறுத்துக்கொள்வதாக இருந்தபோதும் பெரும் துன்பங்களுக்கு ஆளாகினாள். ஒருவிதமாகப் பார்த்தால், சீதா தன் உணர்ச்சிகளை தன்கட்டுக்குள் வைத்திருந்தாள், திரௌபதியோ காடைப் போல கட்டுக்கடங்காமல் இருக்க விரும்பினாள். இது சரி, தவறு என்பது பற்றியல்ல, இது அவர்கள் இருந்த விதம், அவ்வளவுதான்.

ஒருவர் இருக்கும் விதத்திற்கு ஏற்ப விளைவுகளை சந்திக்கவேண்டும். தலைகுனிந்து செல்பவர்கள் தங்கள் இலக்கை அடைவார்கள். அகங்காரத்தில் இருப்பவர்களோ சூழ்நிலையின் பின்னால் சென்று சிக்கிக்கொள்வார்கள்.

07:10

கேள்வி: அலுவலகங்களில் சிலர் வழிநடத்தும்போது எல்லாம் சரியாகவே நிகழ்கிறது, சிலர் வழிநடத்தும்போது எல்லாம் போராட்டமாக இருக்கிறது. இதை எப்படி கையாள்வது?

சத்குரு: தலைவருக்கு இருப்பது பதவியும் சக்தியும் மட்டுமல்ல, பெரும் பொறுப்பும் கூடவே இருக்கிறது. தொழிலாக இருந்தாலும், வேறு எதுவாக இருந்தாலும், தலைவர்கள் தனியாகவே இருக்கிறார்கள். அவருக்கு கீழே இருப்பவர் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள வாய்ப்பில்லை. ஒருசில தகுதிகளாலே அவர் அந்த பதவிக்கு வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அலுவலக மேலாளர் செய்யும் எல்லாவற்றையும் பற்றி கேள்விகள் கேட்பதை விடுத்து, அவர் செயல்களுக்கு எப்படி ஒத்துழைப்பது என்று பாருங்கள்.

7:35

ஏகாதசியின் பசி பறந்தோட, பார்த்தவிழி பிரிக்க வழியின்று பின்தொடர, மெல்ல விடைபெற்றுச் சென்றார் சத்குரு.