“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” - சத்குரு

என் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சியால்தான், அதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தாக்குப் பிடிப்பதற்கு என் உடலும், என் மனமும் தயாராக இருந்தன.
“எனை உடையாமல் காத்த ஹடயோகா!” - சத்குரு!, Enai udaiyamal katha hata yoga - sadhguru
 

சத்குரு:

இந்த முப்பது வருடங்களில் நாம் மிக நீண்ட பாதையைக் கடந்து வந்துள்ளோம். முப்பது வருடங்களுக்கு முன், அன்றொரு நாள் நிகழ்ந்த ஒரு நிகழ்வு, இத்தனை வருடங்களுக்கு உத்வேகம் கொண்டுள்ளது. அந்த கணத்தில் திடீரென்று அந்த அனுபவம் நிகழ்ந்தபோது நான் அதனை எதிர்கொள்ளும் அளவிற்குத் தயார்நிலையில் இல்லை. நான் அதற்கு முன்னர் எல்லாவற்றையும் கேள்வி கேட்பவனாக, கடவுள் உட்பட எதையுமே நம்பாதவனாக இருந்தேன். அதனால் அந்த கணத்தில் அது ஒரு திடீர் நிகழ்வாகத் தோன்றியது. தொடர்ந்து வந்த இரண்டு வாரங்களுக்குள், எனக்குள் நினைவுகள் அலையலையாய் பொங்கத் துவங்கின. அந்த நினைவலைகள் மிகப் பிரமாண்டமானதாக, என்னை முற்றிலும் மூழ்கடிப்பதாக, சமாளிப்பதற்குக் கடினமானவையாக இருந்தன. நினைவுகளின் கனத்தால் என் மனமே உடைந்து சிதறிவிடும் அளவுக்கு, அவை மிக அதிகமாக இருந்தன. அந்த அனுபவத்தை வார்த்தைகளால் விவரிப்பது கடினம்.

என் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சியால்தான், அதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தாக்குப் பிடிப்பதற்கு என் உடலும், என் மனமும் தயாராக இருந்தன.

இப்போது அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும்போது, என் பதினோராவது வயதிலிருந்து ஹடயோகா பயிற்சியை நான் தவறாமல் செய்து வந்தது குறித்து, நான் மிகுந்த நன்றியுணர்வு கொள்கிறேன். ஏனென்றால் அந்த ஹடயோகப் பயிற்சியால்தான், அதுபோன்ற ஓர் அனுபவத்தைத் தாக்குப் பிடிப்பதற்கு என் உடலும், என் மனமும் தயாராக இருந்தன. அந்த அனுபவம் நிகழ்ந்தபோது நான் ஹடயோகா செய்திருக்கவில்லை என்றால், அது என்னை உடைத்து நொறுக்கியிருக்கும். ஹடயோகப் பயிற்சியால் என் உடலும், மனமும் அதைத் தாங்கி நின்றன.

உங்கள் உடல் உங்களிடம் இருக்கும் ஒரு கருவி. இதை நீங்கள் உணவுப்பசியோடு, பாலுறவுக்கான பசியோடு மட்டும் வைத்திருக்கலாம். அல்லது உயர் பரிமாணத்திற்கான பசியோடும் வைத்திருக்கலாம். உடல் போதிய தயார்நிலையில் இருந்தால், உயர் அனுபவங்கள் வரும்போது அதை ஆனந்தமாக ஏற்றுக் கொள்வீர்கள். இல்லையென்றால், மிக உன்னதமான விஷயம் உங்களை வந்தடையும்போது, அதை நீங்கள் தவிர்த்துவிடுவீர்கள். காரணம், உங்கள் உடலும் மனமும் அந்த சாத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்குத் தயார்நிலையில் இல்லை. யோகப் பயிற்சிகள், உயர்பரிமாணங்களுக்கான சரியான உள்சூழலை உருவாக்கும்! உள்நிலைப் பயணத்திற்கு உங்களைத் தயார் செய்யும்!

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1