சத்குரு:

பிரம்மச்சரியம் என்றால், சம்சார சுகத்தில் ஈடுபடாத நிலையென்று மட்டும் அர்த்தமல்ல!

பொதுவான நல்வாழ்வினைத் தேடும் மக்கள் யோகா செய்து தங்கள் வாழ்க்கை முறையினை எப்பொழுதும்போல இயல்பாய் தொடர்வதில் தவறொன்றுமில்லை. ஆனால், தன் வாழ்க்கை முக்கியமில்லை, வாழ்வின் அடிப்படையும், அதற்கு அப்பால் உள்ளவற்றையும் உணர்ந்துகொள்வது மிக மிக முக்கியம் என ஒருவர் எண்ணும்போது, பிறர் வாழ்வதுபோலவே அவரையும் வாழக் கட்டாயப்படுத்தினால் அது முறையல்ல! அவருக்கு அவ்வாழ்க்கை நரகம்போல் ஆகிவிடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சந்தோஷம், ஆனந்தம், அமைதி இவை யாவையும் வெளியே தேடுவதில் அர்த்தமில்லை என்பதை உணரத் துவங்கிய ஒரு மனிதரது வாழ்வில்தான் துறவறம் தோன்றும்.

தன் வாழ்க்கையில் தனிமையில் நடைபோட வேண்டும் என்று விரும்புபவரை, அந்தப் பாதையில் செல்ல விரும்பாத இன்னொருவருடன் சேர்ந்து நடையிடக் கட்டாயப்படுத்தினால், இருவருக்குமே அது சித்திரவதையாகிவிடும்.

அதேசமயத்தில், திருமண வாழ்க்கை வாழவேண்டும் என நினைப்பவருக்குத் துறவற தீட்சை வழங்கினால் அது மற்றொருவிதமான சித்திரவதையாகிவிடும். சந்தோஷம், ஆனந்தம், அமைதி இவை யாவையும் வெளியே தேடுவதில் அர்த்தமில்லை என்பதை உணரத் துவங்கிய ஒரு மனிதரது வாழ்வில்தான் துறவறம் தோன்றும். உள்முகமாகத் திரும்புவதுதான் ஒரே வழி என்பதைப் புரிந்துகொண்டவர், அந்தப் பாதையில் செல்லாவிட்டால், அவருக்கும் அவரைச் சுற்றியுள்ள பிற மனிதர்களுக்கும் வேதனைதான்.

அனைவரும் மாம்பழங்களை உண்கிறோம், ஆனால் நம்மில் எத்தனை பேர் மாமரங்களை நட்டு, அதை வளர்த்து, அதில் வரும் கனிகளை உண்கிறோம்? யாரோ ஒருவர் நட்ட மரத்திலிருந்து வரும் கனிகளைத்தான் பலரும் உண்கிறார்கள். ஆயிரம் மக்கள் உள்ள ஒரு சமூகத்தில், யாரோ ஒரு பத்து பேர் மாமரங்களை வளர்த்துப் பராமரிக்க வேண்டியிருக்கிறது. அதைப்போலவே, ஒரு சிலர் பிரம்மச்சரியப் பாதையில், துறவறப் பாதையில் செல்வது அவசியமாய் இருக்கிறது. பிரம்மச்சாரி பிரம்மன் என்றால் தெய்வீகம், சர்யா என்றால் பாதை.

நீங்கள் தெய்வீகத்தின் பாதையில் இருந்தால், நீங்கள் பிரம்மச்சாரிதான். ஒரு பிரம்மச்சாரி பலவற்றையும் தியாகம் செய்கிறார், துறக்கிறார். அவருக்கு வாழ்க்கை சுகங்கள் மறுக்கப்படுகிறது என்று பலரும் நினைக்கிறார்கள். அது நிஜமே அல்ல! யாரோ ஒருவர் தன் உடையை மட்டும் மாற்றி தன்னை பிரம்மச்சாரி எனச் சொல்லிக் கொண்டால், அவர் வாழ்க்கை சுகங்களை இழந்து தவிக்கிறார் என்று சொல்வதில் உண்மை உள்ளது. ஆனால், தெய்வீகத்தின் பாதையில் உண்மையாய் நடையிடுபவருக்கு, உலகம் அளிக்கும் அற்ப சுகங்கள் முற்றிலும் அர்த்தமற்றவையாக இருக்கும். உங்கள் உயிரின் உள்நிலையிலான சுகங்களை நீங்கள் சுவைத்துவிட்டால், வெளியிலிருந்து கிடைக்கும் சுகங்கள் முற்றிலும் அர்த்தமற்றவை ஆகிவிடும்.

பிரம்மச்சாரியாய் ஆவது என்றால், உங்கள் இயல்பிலேயே நீங்கள் பேரானந்தத்தில் இருப்பது என்று அர்த்தம். நீங்கள் திருமணம் செய்திருந்தாலும் பிரம்மச்சாரியாய் இருக்கலாம். இது முற்றிலும் சாத்தியம்.

அப்படியென்றால், எல்லோரும் பிரம்மச்சாரி ஆக வேண்டுமா? இல்லை. வாழ்க்கை முறையில் எல்லோரும் பிரம்மச்சாரி ஆக வேண்டிய அவசியமில்லை. ஆனால், உள்நிலையில் அதைப்போல் இருக்கலாம். பிரம்மச்சரியம் என்றால், சம்சார சுகத்தில் ஈடுபடாத நிலையென்று மட்டும் அர்த்தமல்ல. அந்தப் பாதையில் இருப்பவருக்கு உருவாக்கப்படும் உறுதுணையான சில அம்சங்களில் அதுவும் ஒன்று.

பிரம்மச்சாரியாய் ஆவது என்றால், உங்கள் இயல்பிலேயே நீங்கள் பேரானந்தத்தில் இருப்பது என்று அர்த்தம். நீங்கள் திருமணம் செய்திருந்தாலும் பிரம்மச்சாரியாய் இருக்கலாம். இது முற்றிலும் சாத்தியம். நீங்கள் உங்கள் கணவரிடமிருந்தோ மனைவியிடமிருந்தோ சந்தோஷத்தைப் பிழிந்தெடுக்க முயலவில்லை. இது இப்படித்தான் இருக்க வேண்டும். உலகம் முழுவதும் பிரம்மச்சாரியாய் இருக்க வேண்டும். அனைவரும் தங்கள் இயல்பிலேயே ஆனந்தமான மனிதராக இருக்கவேண்டும். இரு மனிதர்கள் ஒன்று கூடினால், அவர்களுடைய ஆனந்தத்தை இருவரும் பகிர்ந்துகொள்ளுமாறு இருக்க வேண்டும். ஒருவரிடமிருந்து மற்றொருவர் பிழிந்தெடுப்பதாய் இருக்கக்கூடாது.