போதையுண்டு, தள்ளாட்டம் இல்லை!

ஆனந்தத்தைத் தேடும் இளைஞர்கள், மதுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையிலோ தலைவலியும் சேர்ந்து வந்துவிடுகிறது. இங்கே, பக்க விளைவில்லாத போதைப் பொருள் பற்றியும் கடவுளிடம் மனுக்கள் கொடுத்து தொந்தரவு செய்பவர்கள் குறித்தும் சத்குரு பேசுகிறார்.
 

ஆனந்தத்தைத் தேடும் இளைஞர்கள், மதுவைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால் மறுநாள் காலையிலோ தலைவலியும் சேர்ந்து வந்துவிடுகிறது.இங்கே, பக்க விளைவில்லாத போதைப் பொருள் பற்றியும் கடவுளிடம் மனுக்கள் கொடுத்து தொந்தரவு செய்பவர்கள் குறித்தும் சத்குரு பேசுகிறார்.

Question:சிலவகை தியானங்கள் மது அருந்தியது போன்ற போதையைத் தருகின்றனவே?

சத்குரு:

பொதுவாக போதை தரும் பானங்களைக் குடித்தால், உடலும், மனமும் தங்கள் கட்டுப்பாட்டை இழந்துவிடும். தியானங்கள் தரும் போதை அப்படியல்ல. வெளியேயிருந்து எதையோ எடுத்து நீங்கள் அருந்துவதில்லை. உங்கள் உள்ளேயிருக்கும் உயிர்ச் சக்தியை நீங்கள் விரும்பி, அருந்துகிறீர்கள்.

தியானத்தினால் உள்ளே போதையாகவும் வெளியே உறுதியாகவும் இருக்க முடியும்.
தியானத்தினால் உள்ளே போதையாகவும் வெளியே உறுதியாகவும் இருக்க முடியும். இன்னும் சில தியானங்கள் மூலம் உள்ளுக்குள் உயிர்ச் சக்திக்கு முழு போதையும் வெளியே பாறை போன்ற அமைதியும்கூட ஏற்படுத்த முடியும். பாறை என்றால், உறைந்துபோன பாறை அல்ல. நினைத்த மாத்திரத்தில், உயிர்த்து எழுந்திருக்கக்கூடிய பாறை!

Question:என் பெற்றோரை மிகவும் நேசிக்கிறேன். தங்கைகளுக்குத் திருமணம் முடித்து வைத்து அனைத்து குடும்பப் பொறுப்புகளையும் விருப்பத்துடன் செய்கிறேன். ஆனால் எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லை. கோவிலுக்குச் சென்று வழிபடுவதுமில்லை. இப்படியிருப்பது தவறானதா?

சத்குரு:

கோயில்களுக்கு வந்து அதைக் கொடு, இதைக் கொடு என்று கேட்கும் பக்தர்களைக் கண்டு கடவுள்கள் களைத்துப் போயிருக்கிறார்கள். நீங்கள் அநாவசியமாகத் தொந்தரவு செய்யவில்லை என்று கடவுள்கள் சந்தோஷமாகத்தான் இருப்பார்கள்.

கோயில்களைப் பற்றியோ, கடவுளைப் பற்றியோ கவலைப்படாமல், நீங்கள் செய்வதைத் தொடர்ந்து செய்யுங்கள்.