பல மாநிலங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள், பல உடைகள், பல உணவு வகைகள்... இவையெல்லாம் இணைந்து வாழ முடியுமா? இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் விதமாய், உலகின் கலாச்சார பெட்டகமாய் உயிர்பெற்று வாழ்ந்து கொண்டிருக்கிறது பாரதம். இதோ பாரதத்திற்கு சத்குருவின் வாழ்த்துச் செய்தி!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இந்தியா...

எண்ணிலடங்கா மொழிகள், இனங்கள், கலாச்சாரங்கள், மதங்கள், பாரம்பரியங்கள், பழக்கவழக்கங்கள் என எல்லாமே இந்தியாவில் இருப்பதையே பெருமிதம் கொள்ளச் செய்பவை. ஆனால், இவையே தேசத்தின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவையாக ஆகிவிட்டன.

ஒரு தேசத்தின் அடையாளமும் மதிப்பும் உருவாக்கப்படுவதும் பாதுகாக்கப்படுவதும், அங்கு வாழும் மக்களின் ஒருமை உணர்வில்தான் உள்ளது. எனவே அவர்களுக்குள் ஓர் ஆழமான பிணைப்பைக் கொண்டு வராமல் தேசத்தை ஒற்றுமையாக்க முயன்றால், அது குழப்பத்துக்கும் கொடுங்கோன்மைக்குமே வழிவகுக்கும்.

நூற்றுக்கணக்கான வருடங்களாக அந்நியர்களின் படையெடுப்பும் ஆக்கிரமிப்பும் இந்தியாவை இருளில் மூழ்கச் செய்திருந்தாலும், மிகக் கவனமாக உருவாக்கப்பட்டிருந்த ஆன்மீக முறைகள் இந்நாட்டு மக்களிடம் ஆழமாக வேரூன்றி அவர்களிடம் அமைதியும், நிறைவும், இணக்கமும் இருக்கும்படியான பலனை விளைவித்தன.

இந்த தேசம் இன்னும் புதிய சாத்தியங்களை நோக்கி நகரட்டும்!

Love & Grace