பகவத் கீதை... நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன?
முழுமையான விழிப்பு உணர்வுடன் வாழ்ந்தால், கிருஷ்ணன் சொன்னதைத் தான் செய்வீர்கள். மனித சக்தியை முழுமையாக செயல்பட விட்டால், கிருஷ்ணன் சொன்னதை விடக் கூட சிறப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால், அவன் சொன்ன வார்த்தைகளை உங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டு வாழப் பார்த்தால், வேறெங்கோ போய்ச் சேர்வீர்கள்.
 
பகவத் கீதை... நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்ன? , Bhagavad gita - nam purinthukolla vendiyathu enna?
 
Question:“கீதையில் ‘நீயாக எதையும் செய்யவில்லை. உன்மூலம் நான் தான் எல்லாவற்றையும் நடத்திக் கொள்கிறேன்’ என்று பொருள் படும்படி கிருஷ்ணர் சொல்லியிருக்கிறாரே, அப்படியானால், எதுவும் நம் கையில் இல்லையா?”

சத்குரு:

நம் தேசத்தில் பல சீரழிவுகளுக்குக் காரணம் பகவத் கீதையைத் தவறாகப் புரிந்து கொண்டவர்கள் தான். தவறாகப் புரிந்து கொண்டதோடு நிற்காமல், கிருஷ்ணனே வந்து அவர்களிடம் சொன்னது போல், அதைப் பிரச்சாரம் செய்து பரப்பி மக்கள் மனதில் நிறைய குழப்பத்தை உண்டு பண்ணி விட்டார்கள். ‘ஆயிரம் பேரைக் கொன்றாலும், தப்பில்லை. ஏன் என்றால், கொன்றவன் நீ இல்லை. கிருஷ்ணன் தான்’ என்ற ரீதியில் அர்த்தம் சொல்லி மக்கள் மனதில் வன்முறையை விதைத்து விட்டவர்கள் இவர்கள். வார்த்தைகளை வைத்து விளையாடுவதற்காகச் சொல்லப்பட்டதல்ல கீதை.

முழுமையான விழிப்பு உணர்வுடன் வாழ்ந்தால், கிருஷ்ணன் சொன்னதைத் தான் செய்வீர்கள். மனித சக்தியை முழுமையாக செயல்பட விட்டால், கிருஷ்ணன் சொன்னதை விடக் கூட சிறப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால், அவன் சொன்ன வார்த்தைகளை உங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டு வாழப் பார்த்தால், வேறெங்கோ போய்ச் சேர்வீர்கள்.

அர்ப்பணிப்போடு கீதையைப் புரிந்து கொள்ளாதவர்கள் மத்தியில் இந்த வார்த்தைகளால் சிக்கல்கள் தாம் உருவாகுமே தவிர, தேவையான மாற்றம் எதுவும் நிகழாது.

நீங்கள் என்ன முட்டாள்தனம் செய்தாலும், அது கடவுளின் விருப்பம் என்று அவன் மீது பழியைப் போடுவது எந்த விதத்தில் நியாயம்?

கிருஷ்ணன் புத்திசாலித்தனமாக வாழ்ந்தான், மறுக்கவில்லை. ஆனால், உங்கள் மூளையை அடகு வைத்து விட்டு, நீங்கள் ஏன் கிருஷ்ணனின் மூளையைப் பயன்படுத்தி வாழப் பார்க்கிறீர்கள்?

முழுமையான விழிப்பு உணர்வுடன் வாழ்ந்தால், கிருஷ்ணன் சொன்னதைத் தான் செய்வீர்கள். மனித சக்தியை முழுமையாக செயல்பட விட்டால், கிருஷ்ணன் சொன்னதை விடக் கூட சிறப்பாகச் செயல்படுவீர்கள். ஆனால், அவன் சொன்ன வார்த்தைகளை உங்கள் இஷ்டத்துக்கு அர்த்தம் பண்ணிக் கொண்டு வாழப் பார்த்தால், வேறெங்கோ போய்ச் சேர்வீர்கள்.

தயவு செய்து கீதையை விட்டு விடுங்கள். உங்கள் மூளையைப் பயன்படுத்துங்கள். இதயத்தை கவனியுங்கள். உங்களைப் புரிந்து கொள்ளுங்கள்.

  0 Comments
 
Login / to join the conversation1