நகைச்சுவை உணர்வுடன் கூடிய குட்டிக் கதைகள் எப்போதும் தனி சுவைதான்! அந்த வகையில், இந்த குட்டிக்கதை ஒரு விழிப்புணர்வு செய்தியையும் தாங்கியபடி சுவைகூட்டுகிறது!

சத்குரு:

ஒருநாள் இரண்டு பேர் இரயில் நிலையத்தில் சந்தித்தனர். ஒருவர் மிகவும் சோர்ந்திருந்தார். சோர்ந்தவரைப் பார்த்து இன்னொருவர் கேட்டார், “என்ன ஆயிற்று உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கிறீர்கள்?”

சோர்ந்தவர் சொன்னார், “நான் என்னத்தை சொல்றது... என்னோட முதலாவது மனைவி புற்றுநோயால் இறந்து போனார். என்னோட இரண்டாவது மனைவி யாரோ ஒருவருடன் சென்றுவிட்டார். என் மகன் என்னைக் கொலை செய்ய முயற்சித்ததால் சிறையில் இருக்கிறான். என் 14 வயது மகள் வாயும், வயிறுமாய் இருக்கிறாள். என் வீடு இடிவிழுந்து நொறுங்கிப் போனது. எனக்கு எய்ட்ஸ் இருக்கிறது என்று டாக்டர்கள் சொன்னார்கள். ஷேர் மார்க்கெட்டில் நான் போட்ட பணமெல்லாம் தொலைந்து போனது.”

அடுத்தவர் சொன்னார், “அய்யோ, ரொம்ப துரதிர்ஷ்டவசமான பல விஷயங்கள் உங்களுக்கு நடந்திருக்கிறதே... உங்கள் தொழில் என்ன?

சோர்ந்தவர் சொன்னார், “நான் அதிர்ஷ்டக்கல் விற்பவன்.”

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.