அசைவ உணவை தொடர்ந்தால் மனித பாரம்பரிய பதிவுகள் சிக்கலாகுமா?
மஹாவீரர் “நீங்கள் தொடர்ந்து விலங்கின் இறைச்சியை உட்கொண்டு வந்தால் விலங்கைப் போலவே ஆகிவிடுவீர்கள்” என்றார். அதற்காக நீங்கள் இன்று ஆட்டிறைச்சியை உட்கொண்டால் நாளைக்கு ஆடு போலத் தோற்றமளிப்பீர்கள் என்று பொருளல்ல.
 
அசைவ உணவை தொடர்ந்தால் மனித பாரம்பரிய பதிவுகள் சிக்கலாகுமா? , Asaiva unavai thodarnthal manitha parampariya pathivugal sikkalaguma
 

சத்குரு:

உணவு முறைகள் பற்றி பலரும் என்னிடம் சந்தேகம் கேட்பதுண்டு. என்ன வகை உணவுகளை சாப்பிடலாம்? ஆன்மீகப் பாதையில் இருப்பவர்களுக்கு அசைவ உணவு ஆகாதா? கடல்வாழ் உயிரினங்கள் மட்டும் விதிவிலக்கா? தாவரங்கள்கூட உயிர்கள்தானே? அதை மட்டும் கொல்லலாமா? இப்படி நிறைய கேள்விகள்.

மஹாவீரர் “நீங்கள் தொடர்ந்து விலங்கின் இறைச்சியை உட்கொண்டு வந்தால் விலங்கைப் போலவே ஆகிவிடுவீர்கள்” என்றார். அதற்காக நீங்கள் இன்று ஆட்டிறைச்சியை உட்கொண்டால் நாளைக்கு ஆடு போலத் தோற்றமளிப்பீர்கள் என்று பொருளல்ல.

இங்கு நாம் பேசுவது வன்முறை பற்றியல்ல. இப்போது நமக்கிருக்கும் கேள்வியெல்லாம், தேவையான அளவு மட்டும் வன்முறை நிகழ்த்துகிறீர்களா, அல்லது எல்லை தாண்டிப் போகிறீர்களா என்பதுதான். வன்முறையில்லாமல் இங்கு யாரும் வாழ முடியாது. ஒவ்வொரு சுவாசமுமே வன்முறைதான். நீங்கள் வெட்டுவது ஆப்பிளாக இருந்தாலும், கேரட்டாக இருந்தாலும், கோழியாக இருந்தாலும், ஆடாக இருந்தாலும், அது வன்முறைதான். ஒவ்வோர் உயிருக்குமே இந்த உலகிலேயே மிகவும் விலைமதிப்பு உடையது அதனுடைய உயிர்தான். “நாம் எடுப்பது ஓர் ஆட்டின் உயிரைத்தானே” என்று நீங்கள் நினைக்கலாம். ஓர் ஆடு ஒருபோதும் அப்படி நினைப்பதில்லை. அது நடக்கிற நடையைப் பார்த்தால், உலகிலேயே மிக முக்கியமான உயிர் தான்தான் என்பது போலிருக்கும்.

யோகமரபில் வெவ்வேறு உயிரினங்களை ஒன்றாகக் குறிக்கும் போது ஜீவராசிகள் என்போம். வெவ்வேறு பரிணாம நிலைகளில் ஒன்றுபோல் உள்ள உயிர்கள் என்பது இதன் பொருள். அவை வெவ்வேறு விதமான உணர்நிலையில் உள்ளன. நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ, அது பரிணாமத்தின் தொடக்கப் படிநிலைகளில் உள்ளவையாக இருக்க வேண்டும், அத்தகைய நிலையில் இருப்பவை தாவரங்கள். ஒரு விலங்கை உண்ண வேண்டுமென்றால் நாம் கடல்வாழ் உயிரினங்களை பரிந்துரைக்கிறோம். காரணம், அவை விலங்கு வடிவத்தின் தொடக்க நிலையில் இருப்பதுதான். பரிமாண தன்மையில், மனிதனுக்கு வெகு தொலைவில் இருப்பவை கடல்வாழ் உயிரினங்கள். மனிதர்களுக்கு மிக அண்மையிலிருப்பவை பாலூட்டிகள் என்பதால் அவற்றை உண்ண வேண்டாமென்று சொல்லப்படுகிறது.

ஓர் ஆட்டை சாப்பிட்டால் ஆரோக்கியமாவீர்கள் என்று நீங்கள் கருதும் பட்சத்தில் ஏன் ஒரு மனிதரை சாப்பிடக்கூடாது? ஒரு வேளை, உங்கள் ஆரோக்கியம் இன்னும் மேம்படலாம். உங்களைப் போலவே இருப்பதால் நீங்கள் நர மாமிசம் சாப்பிடுவதில்லை. உயிர்த்தன்மையில் ஒருவிதமான ஞாபகத் தன்மை குறிப்பிடத்தக்க அளவில் படிந்திருக்கிறது. உங்கள் மூதாதையர்கள் மீண்டும் உயிர் பெற்றெழுந்தால், கடந்த பத்து தலைமுறைகளிலிருந்து ஐந்நூறு பேரில், இருபத்தைந்து பேராவது அச்சு அசலாய் ஒரே மாதிரி தோன்றுவார்கள். ஏனெனில் அந்த ஞாபகத்தன்மை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

இருக்கிற ஜீவராசிகளிலேயே மனித உயிர்தான் மிகவும் சிக்கலானது. பரிணாமப் படிநிலைகள் நிகழ நிகழ, ஞாபகத்தன்மை மேலும் சிக்கலாகி அதன் கட்டமைப்பு மேலும் நுட்பமாகிறது. உங்களை ஒத்த விலங்குகளையோ உயிர் இனங்களையோ நீங்கள் சாப்பிட்டால், அதனுடைய ஞாபகத்தன்மையும் மனிதர்களுடையதைப் போலவே இருப்பதால், நீங்கள் என்ன செய்தாலும் உங்களால் அந்த உணவை ஜீரணிக்க முடியாது. ஒரு தாவரத்தை நீங்கள் சாப்பிட்டால் ஏறக்குறைய 100% ஜீரணமாகிறது. ஏனென்றால், அதன் ஞாபகத்தன்மையை நீக்கிவிட்டு உங்கள் ஞாபகத்தன்மையைப் புகுத்துகிறீர்கள்.

ஒரு விலங்கை உண்ண வேண்டுமென்றால் நாம் கடல்வாழ் உயிரினங்களை பரிந்துரைக்கிறோம். காரணம், அவை விலங்கு வடிவத்தின் தொடக்க நிலையில் இருப்பதுதான். பரிமாண தன்மையில், மனிதனுக்கு வெகு தொலைவில் இருப்பவை கடல்வாழ் உயிரினங்கள். மனிதர்களுக்கு மிக அண்மையிலிருப்பவை பாலூட்டிகள் என்பதால் அவற்றை உண்ண வேண்டாமென்று சொல்லப்படுகிறது.

இரண்டு உயிரணுக்களுடன் தொடங்கியதுதான் உங்கள் உடம்பு. அவை இவ்வளவு மடங்குகளாகப் பெருகியுள்ளன. ஆனாலும் அதே தன்மைகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன. இந்நிலையில் சிக்கலான ஞாபகத் தன்மை கொண்ட விலங்குகளை நீங்கள் சாப்பிட்டுக் கொண்டேயிருந்தால் உங்கள் ஞாபகத் தன்மையை உங்கள் உடல் மேல் புகுத்தும் ஆற்றல் உங்களுக்குக் குறைந்து கொண்டே போகிறது. ஓர் ஆட்டின் உயிருக்கு எந்த மதிப்பும் இல்லையென்று நீங்கள் கருதக்கூடும், ஆனால் வாழ்வின் அடிப்படையை பொறுத்தவரை, அது உண்மையில்லை. அது நிச்சயமாக உங்களைப் போன்ற ஓர் உயிர்தான். ஆட்டின் உடலை அறுத்துப் பார்த்தால் அதன் ஜீரண உறுப்புகள் சிறுநீரகங்கள் எல்லாம் உங்களுடையதைப் போலவே இருப்பதைக் காண்பீர்கள்.

நீங்கள் உட்கொண்ட உணவின் தொகுப்பே உங்கள் உடல். அந்த உணவில் உங்கள் சம்ஸ்காரங்களைப் (பதிவுகள்) புகுத்தி உங்களுடையதாக்கிக் கொள்ள நீங்கள் எண்ணினால் அந்த உணவின் ஞாபகத்தன்மை குறைவாக இருக்க வேண்டும். அந்த உணவின் சம்ஸ்காரம் கூடக் கூட, உங்கள் இயல்புகளை நீங்கள் இழப்பீர்கள். சிக்கலான ஞாபகத்தன்மை கொண்ட உணவை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டால், உங்களை ஊடகமாகக் கொண்டு பாயும் 25,000 ஆண்டுகாலப் பாரம்பரியத்தின் தனித்தன்மைகள் வீணாய்ப் போகும்.

ஒரு பண்பாட்டையும் நாகரீகத்தையும் உருவாக்கக் காரணமே அது ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கும் சென்று சேர வேண்டும் என்பதுதான். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் வழி வகுப்பறைகள் மட்டுமல்ல. மரபணுக்களும்தான். இதை இன்று எத்தனையோ ஆய்வுகள் நிறுவுகின்றன. இதை நாம் சம்ஸ்காரங்கள் என்று சொல்லி வருகிறோம். சம்ஸ்காரம் என்றால், சொல்லித் தராமலேயே உங்கள் வழியாகப் பாய்கிற நாகரீகத்தின் சாரம் என்று பொருள். இதை ஒவ்வொரு தனிமனிதரிடமும் நீங்கள் காண இயலும். ஒரேவிதமான வெளிச்சூழலில் இரண்டு மனிதர்கள் வாழ்ந்தாலும் ஒருவர் இன்னொருவரிடமிருந்து வேறுபடுகிறார். அதிக சிக்கலான ஞாபகத்தன்மை கொண்ட உணவுகளை நீங்கள் தொடர்ந்து உட்கொண்டால், உங்கள் வழியாக இந்த தனித்தன்மை வெளிப்படுவதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வரும்.

‘நாம் எடுப்பது ஒரு கோழியின் உயிரைத்தானே’ என்று நீங்கள் நினைக்கலாம். ஒரு கோழி ஒருபோதும் அப்படி நினைப்பதில்லை. அது நடக்கிற நடையைப் பார்த்தால், உலகிலேயே மிக முக்கியமான உயிர் தான்தான் என்பது போலிருக்கும். இதை 2600 ஆண்டுகளுக்கு முன்னர் மஹாவீரர் “நீங்கள் தொடர்ந்து விலங்கின் இறைச்சியை உட்கொண்டு வந்தால் விலங்கைப் போலவே ஆகிவிடுவீர்கள்” என்றார். அதற்காக நீங்கள் இன்று ஆட்டிறைச்சியை உட்கொண்டால் நாளைக்கு ஆடு போலத் தோற்றமளிப்பீர்கள் என்று பொருளல்ல. குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, நீங்கள் உட்கொள்ளும் உணவின் தன்மை, உங்கள் ஞாபகத்தன்மையில் ஒரு தடுமாற்றத்தை ஏற்படுத்திவிடும். மிகக் குறைவான ஞாபகத்தன்மை கொண்ட உணவை நீங்கள் உட்கொண்டால், உங்கள் உடல், உங்கள் ஞாபகத்தன்மை, உங்கள் மரபணுக்கள் ஆகியவை, தங்கள் தனித்தன்மையை வெளிப்படுத்தி அந்த உணவிலும் உங்கள் தன்மையைப் பதித்துவிடுகின்றன. சிக்கலான ஞாபகத்தன்மை கொண்ட உணவுகளை உட்கொண்டு நீங்கள் வாரிசுகளை உருவாக்கினால், உங்களின் அடுத்த தலைமுறை தடுமாற்றத்திற்கு உள்ளாகும். ஏனென்றால், குறைவான ஞாபகத்தன்மை கொண்ட உணவை உட்கொண்டால் உங்கள் ஞாபகத்தன்மை அடுத்த தலைமுறைக்குள் பதியும் அளவுக்கு, அதிகப்படியான ஞாபகத்தன்மை கொண்ட உயிரை நீங்கள் உண்ணும்போது, உங்கள் ஞாபகத்தன்மையின் சுவடு அடுத்த தலைமுறைக்குள் பதியாது.

மனிதர்களைப் போலவே உணர்ச்சிகளும் எண்ணங்களும் கொண்ட விலங்குகளை நீங்கள் புசித்தால் அது ஏறக்குறைய நரமாமிசம் சாப்பிடுவது போலத்தான். இது சமயம் சார்ந்தோ ஒழுக்கவியல் சார்ந்தோ சொல்லப்படுவதல்ல. உங்கள் இருப்பின் தன்மை எப்படி செயல்படுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்த இருத்தலியல் மற்றும் விஞ்ஞானபூர்வமானது. ஆழமான உணர்ச்சிகளும் குவியலான ஞாபகத்தன்மையும் கொண்ட இறைச்சியை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மனிதத்தன்மையின் அடிப்படைக் கூறுகளை நீங்கள் இழந்து விடுவீர்கள்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1