ஈஷாவில் சாதகர்கள் தங்கள் ஆன்மீக பயணமானது துரிதகதியில் நிகழ்வதாக உணர்கிறார்கள். ஆனால், அந்த தீவிரம் எப்போதும் மகிழ்ச்சியாக மட்டுமே இல்லாமல், சிலநேரங்களில் வலியாகவோ கூட இருக்க நேர்கிறது. இதற்கான காரணத்தையும், ஈஷாவில் சாதகர்கள் மேற்கொள்ளும் ஆன்மீகப் பயணம் எத்தகையது என்பதையும் சத்குரு விவரிக்கிறார்.

சத்குரு:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆன்மீக நெறிமுறையின் அம்சங்களில் ஒன்று, உங்கள் வாழ்வை துரிதகதியில் முன்னோக்கிக் கொண்டு செல்வதாகும். பரிணாமத்தின் போக்கு விரிவுபடுத்தப்படுகிறது. அவ்வாறு செயல்படுகையில், உங்கள் மகிழ்ச்சி, உங்கள் வலி, உங்கள் துன்பம் எல்லாமே தீவிரமாகிறது. சில ஆன்மீகப் பயிற்சிகள் வழியாக உங்கள் சக்திநிலையை குறிப்பிட்ட திசை நோக்கிச் செலுத்துகிறீர்கள். நீங்கள் இங்கு வழங்கப்படும் க்ரியா பயிற்சிகளை மேற்கொள்ளும்போது, உச்சமானது எதுவோ, அதை நோக்கி உங்கள் சக்திநிலையைச் செலுத்துகிறீர்கள்.

வீட்டிலோ, வீதியிலோ, மலையிலோ, காட்டிலோ, நகரிலோ, ஆசிரமத்திலோ, உங்களுக்கு எங்கே பொருந்தி வருகிறதோ அங்கே வாழுங்கள். நீங்கள் வாழ்கிற இடத்துக்கும், உங்கள் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

அவ்வாறு செய்யும்போது உங்கள் உடல், உங்கள் மனம், உங்கள் உணர்ச்சிகள் ஆகியவை ஒத்துழைத்து நேர்க்கோட்டில் இருப்பது முக்கியம். உங்கள் சக்திநிலை ஒரு திசையிலும், உங்கள் உடல், மனம், உணர்ச்சிகள் ஆகியவை இன்னொரு திசையிலும் சென்றால், அது பெரிய போராட்டமாகிவிடும்.

நீங்கள் என்னுடன் வந்து அமர்கையில் வளர விரும்புகிறீர்கள் என்று கருதிக் கொள்கிறேன். உங்கள் சக்திநிலையை உச்சமான ஒன்றை நோக்கிச் செலுத்தும்போது, உங்கள் உடலும் மனமும் உணர்ச்சிகளும் அதே திசை நோக்கி செல்வதை நீங்கள்தான் உறுதி செய்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் உங்கள் பயணம் மகிழ்ச்சியானதாக அமையும். இல்லையென்றாலும், உங்கள் பயணம் நிகழுமென்றாலும், அலறிக் கொண்டும், அழுது கொண்டும் அந்தப் பயணத்தை மேற்கொள்வீர்கள்.

சிறிய விஷயங்களில் உங்கள் மனதளவிலும் உணர்ச்சியளவிலும் சிக்கிப் போகாதீர்கள். அதற்காக உங்கள் குடும்பத்தை விட்டுவிட்டு வர வேண்டுமென்று பொருளல்ல. வீட்டிலோ, வீதியிலோ, மலையிலோ, காட்டிலோ, நகரிலோ, ஆசிரமத்திலோ, உங்களுக்கு எங்கே பொருந்தி வருகிறதோ அங்கே வாழுங்கள். நீங்கள் வாழ்கிற இடத்துக்கும், உங்கள் ஆன்மீகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை.

உங்கள் வலியோ, மகிழ்ச்சியோ அல்லாது நீங்கள் அனுபவிக்கும் எதுவோ தீவிரமாகிறதென்றால், நீங்கள் கருணையால் ஆட்கொள்ளப்படவில்லை என்று பொருளல்ல. ஆன்மீக வளர்ச்சி தொடங்கி விட்டதென்று பொருள். அதுதான் கருணையின் வெளிப்பாடு.

உங்கள் வலியோ, மகிழ்ச்சியோ அல்லாது நீங்கள் அனுபவிக்கும் எதுவோ தீவிரமாகிறதென்றால், நீங்கள் கருணையால் ஆட்கொள்ளப்படவில்லை என்று பொருளல்ல. ஆன்மீக வளர்ச்சி தொடங்கி விட்டதென்று பொருள். அதுதான் கருணையின் வெளிப்பாடு.

கருணையென்றால் உங்களை எப்போதும் இனிமையாக நடத்துவதல்ல, உங்களைத் துரிதப்படுத்துவது, எங்கேயும் ஓய்ந்து அமர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்வது. நீங்கள் ஆறுதலை மட்டும் எதிர்பார்த்து வந்திருந்தால் இவையெல்லாம் தேவைப்பட்டிருக்காது. அழகான பல பொய்களைச் சொல்லியிருப்போம். ‘கடவுள் உங்களைப் பார்த்துக் கொள்வார்’... ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்பது போன்ற பொய்களை ஏறக்குறைய எல்லா சமயங்களும், சமூகங்களும் நீண்ட காலமாகவே சொல்லி வருகின்றன.

உங்கள் சக்திநிலை எப்போதும் ஆன்மீகப் பாதையில்தான் செல்கிறது. அதே பாதையில் உங்கள் உடலும் மனமும் உணர்ச்சிகளும் செல்வதற்கான எளிய பயிற்சியை உங்களுக்குச் சொல்லித் தர நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறோம்.

உங்கள் சக்திநிலை பரிணாமப் போக்கின்படி மெதுவாக மேல்நோக்கிச் செல்லக் கூடியது. அதையும் துரிதப்படுத்தியிருக்கிறோம். ஆன்மீகப் பாதையில் நுழைவதற்கு முன்னரும் உங்களுக்குத் துன்பங்கள் இருந்தன. ஆனால், நீங்கள் அவற்றை உணரவில்லை. ஏனென்றால், நீங்களே நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்தீர்கள். இப்போது அது துரிதமாக்கப் பட்டிருப்பதால், உங்களால் உணர முடிகிறது. ஏனெனில், உங்கள் வாகனத்தின் ஒவ்வொரு சக்கரமும் ஒவ்வொரு திசையில் செல்ல முயற்சிக்கிறது.