அன்றாடப் பிரச்சனைகளுக்கு யார் காரணம்?
 
 

ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 11

“வாழ்க்கைனாலே பிரச்சனைதானப்பா...?!” என்று பொதுவாக மக்கள் பேசிக்கொள்வதைப் பார்க்கிறோம். இதில் உண்மை உள்ளதா? வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கு என்ன காரணம்? பிரச்சனைகள் குறித்தும், அவற்றை எதிர்கொள்வது குறித்தும் சத்குருவின் கருத்தை இப்பதிவில் தெரிந்துகொள்ளலாம்!

சித்தார்த் எங்களுடைய தினசரி வாழ்க்கையில், பல பிரச்சனைகள் எங்களுக்கு ஏற்படுகிறது. ஒவ்வொருவரும் பல இழுபறிகளை எதிர்கொள்கிறோம். எப்படி நாங்கள் ஒரு ஆனந்தமான மனநிலையை அடைவது?

சத்குரு:

அன்றாட வாழ்க்கை என்பது பிரச்சனை இல்லை. வாழ்க்கையில் பல சூழ்நிலைகள் நிகழும். சிலவற்றை கையாள நமக்கு தெரிகிறது, சிலவற்றை கையாள நமக்கு தெரிவதில்லை. தொடர்ச்சியாக ஆராய்ந்து கொண்டு, புதிய சூழ்நிலைகளில் துணிகரகமாக எதிர் கொண்டிருந்தால், கையாள தெரியாத சூழ்நிலைகள் மேலும், மேலும் ஏற்படும். இது போல கையாள தெரியாத சூழ்நிலைகளை அதிகமாக எதிர்கொண்டால், வாழ்கையை துணிச்சலாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். இல்லையென்றால் எல்லைகளுக்குள் தேங்கி போய் விடுவீர்கள், வாழ்க்கை சலித்து போகும்.

"குடும்பத்தை விட்டு, வேலையை விட்டு தனியே ஒரு அறையில் இருங்கள் எத்தனை பிரச்சனை இருக்கிறது என்று பாருங்கள்"

எனவே அன்றாட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. உங்கள் உடலை, உங்கள் மனதை, உங்கள் உணர்ச்சிகளை, உங்கள் உயிர் சக்தியை எப்படி கையாள்வது என்று உங்களுக்கு தெரியவில்லை. குடும்பத்தில், வேலையில் பிரச்சனை என்று சொல்லிக்கொண்டு வருபவர்களிடம் நான், "குடும்பத்தை விட்டு, வேலையை விட்டு தனியே ஒரு அறையில் இருங்கள் எத்தனை பிரச்சனை இருக்கிறது என்று பாருங்கள்" என்பேன். தனியே இருக்கும் பொழுது உங்களுக்கு பிரச்சனை என்றால் நீங்கள் சரி இல்லை என்றுதானே அர்த்தம். இதை நிச்சயம் நீங்கள் சரி செய்ய வேண்டும். தனியே இருக்கும் பொழுது ஆனந்தமாகவும், வேறு ஒருவரோடு இருக்கும் பொழுது கஷ்டமாகவும் உணர்ந்தால், அந்த மனிதர்தான் பிரச்சனை. ஆனால் தனியே இருக்கும் பொழுது துன்பமாக உணர்ந்தால் நீங்கள்தானே பிரச்சனை.
எனவே அன்றாட பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை. இந்த ஒரு நபரை (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) சரி செய்யாமல், மற்ற அனைத்தையும் சரி செய்ய நினைக்கிறோம்.


அடுத்த வாரம்...

கிரிக்கெட், ஹெலிகாப்ட்டர், ரேஸ் கார் இப்படி பல விஷயங்களை சத்குருவை செய்ய வைப்பது எது? அடுத்த வாரம் தெரிந்து கொள்ளலாம்.

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1