ஒரு ஹீரோ... ஒரு யோகி... பகுதி 12

‘குறிப்பிட்ட சில செயல்களை ஆன்மீகத்தில் உள்ளவர்கள் செய்யக் கூடாது!’ என்ற மனநிலையை பெரும்பாலான மக்கள் கொண்டுள்ளனர். ஆன்மீகத்தில் இருப்பவர்கள் பலகீனமானவர்களாக காட்சியளிக்க வேண்டுமென்றும் பலர் எண்ணுகிறார்கள். இந்த மனநிலையின் அபத்தத்தை சுட்டிக்காட்டுகிறது சத்குருவின் இந்த பதில்!

Question: நீங்கள் ஒரு ஆன்மீக குரு என்பது என்னை மிகவும் வசீகரிக்கிறது. பலரும் தங்களது வாழ்வு உங்களால் நல்ல வண்ணம் மாறி இருக்கிறது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். அதே சமயம் நீங்கள் ராக் ஸ்டார் போலவும் இருக்கிறீர்கள். ஒரு சமயம் ஏரோப்ளேனில் இருந்து குதிக்கிறீர்கள், ஹெலிகாப்ட்டர் ஒட்டுகிறீர்கள், பந்தய கார் ஒட்டுகிறீர்கள், கிரிக்கெட் விளையாடுகிறீர்கள். நீங்கள் முயற்சித்துப் பார்க்காதது எதுவும் இல்லை என நினைக்கத் தோன்றுகிறது. உங்களை தூண்டுவது எது?

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு:

ஆன்மீகம் என்பது ஒரு விதமான பலகீனம் என்ற மிக தவறான புரிதல் இருக்கிறது. மக்கள் முதலில் நினைப்பது என்னவென்றால் குறிப்பிட்ட சில விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டால் ஆன்மீகத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்கிறார்கள்.. கார் ஓட்டுவது, ஹெலிகாப்ட்டர் ஓட்டுவது இவை மிக எளிதான விஷயங்கள். இவற்றை யார்வேண்டுமானாலும் செய்ய முடியும்.

நீங்கள் ஆன்மீக ஆற்றலோடு இருந்தால் உடல், மனம், உணர்ச்சி என அனைத்து நிலைகளிலும் ஆற்றலோடு இருப்பீர்கள்.

ஆனால் ஆன்மீகம் என்பது உங்களை இயங்கச் செய்யும் செயல்முறை, பலவீனமாக்கும் செயல்முறை அல்ல! நீங்கள் ஆன்மீக ஆற்றலோடு இருந்தால் உடல், மனம், உணர்ச்சி என அனைத்து நிலைகளிலும் ஆற்றலோடு இருப்பீர்கள். ஆன்மீகம் என்று சொன்னால் வெளியே இருக்கும் ஏதோ ஒன்றை பற்றியது அல்ல, இங்கே உள்ளே இருக்கும் ஒன்றை பற்றி பேசுகிறீர்கள். மேம்போக்காக வாழ்வை வாழாமல், அதன் ஆழத்துக்குள் சிறிது செல்கிறீர்கள்.

இது (தன்னை சுட்டி காட்டி) பிரபஞ்சத்தின் மிக சிக்கலான ஒரு வடிவமைப்பு. இது போல சிக்கலான, நுட்பமான தொழில்நுட்பம் இந்த பூமியில் இல்லை. இதை எந்த அளவு நீங்கள் உபயோகிக்கிறீர்கள்?. அளவற்ற இந்த திறனை பெரும்பாலான மனிதர்கள் வெறும் ஒரு சதவிகிதம் மட்டுமே உபயோகப்படுத்துகின்றனர்.

எனவே எல்லா சமயங்களிலும் நான் மோட்டார் சைக்கிள் ஒட்டிக்கொண்டோ, எரோப்ளேனில் இருந்து குதித்துக் கொண்டோ இருப்பதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது என்னால் முடிந்ததை செய்து விடுகிறேன். இந்த விஷயங்கள் ஏன் பெரிதுபடுத்தப்படுகிறது என்றால் ஆன்மீகம் என்பது குறைபாடு என்ற புரிதல் எப்பொழுதும் இருப்பதால்தான்!


அடுத்த வாரம்...

சத்குருவின் மரபு பல நூறு ஆண்டுகள் தொடர எந்த விதமான முயற்சிகள் நடைபெறுகிறது? அடுத்த வாரம் அறிந்து கொள்வோம்.

இத்தொடரின் பிற பதிவுகள்: ஒரு ஹீரோ... ஒரு யோகி...