அனாதி - ஆதியில்லா ஆனந்தம்

2010ஆம் ஆண்டு கோடை காலத்தில் அமெரிக்காவில் அமையப்பெற்ற ஈஷா மையமான ஈஷா இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்னர் சயின்ஸில், ஒரு 3 மாதகால நிகழ்ச்சியை சத்குரு நிகழ்த்தினார். 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சி ஆதியில்லாதது எனப் பொருள்படும் வகையில் ‘அனாதி’ என அழைக்கப்பட்டது!
 
 

‘அனாதி’ என்றால் ஆதியும் அந்தமும் அற்றது! 90 நாட்கள் நிகழ்ச்சியாக இருந்தபோதிலும் 200 சாதகர்கள் உடல், மனம் மற்றும் பிற சவால்களை எதிர்கொண்டு அனாதி நிகழ்ச்சியை எதிர்கொண்டனர். ஆனாதி என்பது எப்போதும் அங்கே இருப்பதுதான். நமக்கு இருக்கும் வாய்ப்பு என்னவெனில், நாம் அதில் விழிப்புணர்வுடன் நடைபோட்டு, அந்த வெள்ளத்தில் பயணிக்கலாம் அல்லது விழிப்புணர்வின்றி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படலாம்! படைத்தலின் அடிப்படைத் தன்மைக்கு எப்போதும் துவக்கமும் இல்லை; அதுபோல முடிவும் இல்லை!