காவேரி கூக்குரல்

காவேரி கூக்குரல் என்பது நம் தேசத்தின் உயிர்நாடிகளாக விளங்கும் நதிகளுக்கு புத்துயிரூட்ட மேற்கொள்ளப்படும் முன்னோடி இயக்கம்.

YousaveCauvery
wheat grass logo
 

ஒரு பிரச்சினை, இரு முகங்கள்

இன்று நாம் சந்தித்துவரும் இருபெரும் பிரச்சினைகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை

 
kaveri river depletion
 

காவேரி ஆறு வற்றிவருவது

 • கடந்த 70 ஆண்டுகளில் காவேரி ஆறு 40% வற்றிவிட்டது
 • காவேரி வடிநிலத்தின் 50% க்கும் மேற்பட்ட இடங்களில் நிலத்தடி நீர் பெருமளவில் குறைந்துள்ளது
 • வடிநிலத்தின் 87% மரப்போர்வை அகற்றப்பட்டுள்ளது
 • கோடைக்காலத்தில் காவேரி ஆறு கடலை சென்றடைவதற்கு முன்பே வற்றிவிடுகிறது.
 • ஆற்றின் வறண்ட மணற்படுகையைத்தான் வருடத்தின் பல மாதங்களில் கோடிக்கணக்கான மக்கள் காண்கின்றனர்
causes of farmer distress in india
 

விவசாயிகளின் துயரம்

 • தமிழ்நாடு மற்றும் கர்நாடக விவசாயிகளின் துயரமும் தற்கொலைகளும் தேசியளவில் பேசப்படும் தலைப்புச்செய்திகளாக ஆகியுள்ளன
 • தமிழகத்தில் 83% விவசாயிகளும், கர்நாடகத்தில் 77% விவசாயிகளும் கடன்பட்டு இருக்கிறார்கள்
 • 2019ல் தமிழகத்தின் 17 மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது
 • கடந்த 18 ஆண்டுகளில், 15 ஆண்டுகள் கர்நாடகத்தில் வறட்சியான ஆண்டுகளாக இருந்துள்ளன
 

எதனால் காவேரி வற்றிவருகிறது?

காவேரி வற்றிவருவதற்கும் விவசாயிகளின் துயரத்திற்கும் மூலகாரணம் ஒன்றுதான் – குன்றிவரும் மண்வளம்.

இந்தியாவிலுள்ள பெரும்பாலான நதிகளைப் போல், காவேரியும் காடுகளிலிருந்தே பிறக்கிறது. முன்காலத்தில் இருந்தே இப்பகுதியில் காடுகளும் மரங்களும் நிறைந்திருந்தது. விலங்குகளின் கழிவுகள் மூலமாகவும் தாவரக் கழிவுகள் மூலமாகவும் மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்தது.

இந்த உயிர்மப் பொருள் மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியை அதிகரித்து, அந்நீர் காவேரியில் ஓடுவதற்கு வழிசெய்தது. ஆனால் மக்கட்தொகை அதிகரித்து மரப்போர்வை குறையும்போது மண்ணிற்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. இப்போது மண்ணால் தண்ணீரை ஈர்க்க முடியாமல் போனதோடு மண்ணரிப்பு வேறு ஏற்படுகிறது.

இதனால் மண்ணின் வழியாக நதிக்கு நீர் கிடைக்காமல் போக, நதியும் வறண்டுபோகிறது.

soil erosion causes

இதற்கு ஒரு தீர்வுதான் உள்ளது

மண்தான் தீர்வு. மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் கிடைக்க வழிசெய்தால், மண் மீண்டும் செழிக்கும். அது மழைநீரை ஈர்த்து அந்நீர் காவேரியில் ஓட வழிசெய்யும். இது நதியின் சூழலியலை மேம்படுத்துவதோடு விவசாயியின் வருமானத்தையும் அதிகரிக்கும்.

மரங்கள் நடுவது தான் மண்வளத்தை மீட்க மிக சுலபமான, செலவுகுறைவான வழி.

 • அரசு நிலத்தில் நாட்டு ரக மரங்களை நடமுடியும்.
 • தனியார் விளைநிலங்களில் விவசாயிகள் வேளாண் காடுவளர்ப்புக்கு மாறமுடியும். வழக்கமான பயிர்களுடன் பழமரங்களையும் வெட்டுமரங்களையும் ஒரே விளைநிலத்தில் வளர்ப்பதுதான் வேளாண்காடுவளர்ப்பு.
YousaveCauvery
plantation of plants
 
காவேரி கூக்குரல் என்ன சாதிக்கும்?
seperator
 
 • காவேரி வடிநிலத்தைச் சுற்றி 242 கோடி மரங்கள் நடப்படும். முதல் கட்டத்தில், தமிழகத்திலும் கர்நாடகத்திலும் 73 கோடி மரங்கள் நடப்படும்
 • 5-7 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் 3-8 மடங்கு அதிகரிக்கும்.
 • இதன்மூலம் காவேரி வடிநிலத்தின் தண்ணீர் தக்கவைக்கும் ஆற்றல் 40% வரை அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது
 
replenish soil
மண்

மண்ணிற்கு ஊட்டச்சத்தும் உயிர்மச்சத்தும் கிடைக்க வழிசெய்தால், மண் மீண்டும் செழிக்கும். அது மழைநீரை ஈர்த்து அந்நீர் காவேரியில் ஓட வழிசெய்யும். இது நதியின் சூழலியலை மேம்படுத்துவதோடு விவசாயியின் வருமானத்தையும் அதிகரிக்கும்.

increase kaveri river water
நதி

காவேரி வடிநிலத்தின் தண்ணீர் தக்கவைக்கும் திறன் 40% வரை அதிகரிக்கும்

importance of agroforestry
விவசாயி

மரங்களிலிருந்து வரும் விளைச்சல் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். மரங்கள் இருந்தால் அது பயிர்களை அழிக்கும் பூச்சிகள் மற்றும் பிற தொல்லைகளைக் குறைக்கும். இதனால் மகசூல் பெருகும்
வருமானமும் அதிகரிக்கும்.

 
 

காவேரி கூக்குரல் இயக்கம் காவேரியின் கவலைக்கிடமான நிலை பற்றிய விழிப்புணர்வை ஆயிரமாயிரம் மக்களிடம் ஏற்படுத்தும். பல்லாயிரம் விவசாயிகளைத் தொடர்பு கொண்டு வேளாண் காடு வளர்ப்பு தரும் பலன்களை எடுத்துரைக்கும். அரசாங்கங்களுடன் செயல்பட்டு, விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்புக்கு மாறுவதற்குத் தேவையான உதவியை பெற்றுத் தரும்.

காவேரியின் அழைப்புக்கு சத்குரு பதிலளிக்கிறார்

வரும் செப்டம்பர் மாதத்தில் காவேரி கூக்குரல் இயக்கத்தை இரண்டு வார "மோட்டார் சைக்கிள் ராலி"யுடன் சத்குரு துவக்கி வைக்கிறார். கர்நாடகத்தில் உள்ள தலைக்காவேரியில் துவங்கி, தமிழகத்தின் கடலருகே இருக்கும் திருவாரூர் வரை சத்குரு மோட்டார் சைக்கிளில் பயணிக்கிறார். இப்பயணத்தின் போது பெரும் நகரங்களில் மாபெரும் நிகழ்ச்சிகளும், காவேரி ஆற்றங்கரைகளில் இருக்கும் சிற்றூர் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே நூற்றுக்கணக்கான நிகழ்ச்சிகளையும் சத்குரு நடத்தவிருக்கிறார்.

 

மேலும் விபரங்கள் அறிய...

 

நதிகளை மீட்போம்

seperator

இந்தியாவின் உயிர்நாடிகளான நதிகளை மீட்கவும், புத்துயிரூட்டவும் உருவானதுதான் நதிகளை மீட்போம் இயக்கம். 16.2 கோடி மக்களின் ஆதரவுடன் உலகிலேயே மிகப்பெரிய சுற்றுச்சூழல் இயக்கமாக இது வளர்ந்தது. நம் நதிகளின் கவலைக்கிடமான நிலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த, இந்தியாவின் பல மாநிலங்கள் வழியாக 9300 கி.மீ பயணத்தை தானே கார் ஓட்டிச் சென்று சத்குரு மேற்கொண்டார்.

நதிகளை மீட்பதற்கான 700 பக்கம் கொண்ட திட்டப் பரிந்துரையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்ளிடம் அக்டோபர் 2, 2017ல் சத்குரு அவர்கள் ஒப்படைத்தார். அத்தீர்வை பல மாநிலங்களிலும் செயல்படுத்தும் பணிகளில் இப்போது நதிகளை மீட்போம் இயக்கம் இறங்கியுள்ளது.