யந்திரமாய் வடிவெடுக்கும் தேவி

கண்கொட்டாமல் பார்க்கத் தூண்டும் அழகு, மனதில் அச்சாகப் பதியும் உருவம், கேட்பதை அள்ளிக் கொடுக்கும் கருணைமிக்க தேவி! லிங்கபைரவியின் அருள் உங்கள் இல்லத்திலும் யந்திர வடிவில் நிறைந்திட ஓர் அரிய வாய்ப்பு...
 

கண்கொட்டாமல் பார்க்கத் தூண்டும் அழகு, மனதில் அச்சாகப் பதியும் உருவம், கேட்பதை அள்ளிக் கொடுக்கும் கருணைமிக்க தேவி! லிங்கபைரவியின் அருள் உங்கள் இல்லத்திலும் யந்திர வடிவில் நிறைந்திட ஓர் அரிய வாய்ப்பு...

கருணைமிக்கவளாய், உக்கிர ரூபியாய், சக்தி வடிவாய் அமைந்திருக்கிறாள் லிங்கபைரவி. தாய்மையின் அம்சத்துடன், பெண் தன்மையின் பூரண வடிவாய் விளங்கும் லிங்கபைரவி, தனித்தன்மையும் பரிவும் கொண்டவள்.

நம் பாரம்பரியத்தில், சில பிரத்யேக பலன்களைப் பெற, யந்திரங்கள் வடிவமைக்கப்பட்டும் உருவாக்கப்பட்டும் வந்திருக்கின்றன. அந்த வகையில், இந்த லிங்கபைரவி யந்திரங்கள், மிகவும் தனித்துவம் வாய்ந்ததாக இருப்பதோடு தூய சக்திகளை நம்மை நோக்கி ஈர்ப்பதாயும் உள்ளது.

எங்கள் வீட்டில் தேவி யந்திரம்...

தேவியை தன் வீட்டில் ஓர் அங்கமாய் கொண்டிருக்கும் Dr. நடேஷ் சிதசனன், தேவி அவர் வீட்டில் இருப்பது எப்படி இருக்கிறது எனக் கேட்டோம்...

"எனக்கு தேவி யந்திரம் கிட்டியது ஒரு கனவு நனவானது போல இருக்கிறது. என்னுடைய கடுமையான தலைவலி கிட்டத்தட்ட முழுமையாக மறைந்து போனதுதான், நான் கண்ட முதல் மாற்றம். என்னுடைய உணர்ச்சி மற்றும் உளவியல் நிலையில் சமநிலை ஏற்பட்டுள்ளது.

பக்கத்து வீடுகளில் இருந்த மரங்களை விட, என் வீட்டில் நடப்பட்ட மரங்கள் வியக்கத்தக்க வகையில் வளர்ந்து மிகவும் செழிப்பாக இருக்கின்றன. குழந்தைகள் அமைதியாகவும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவும் இருப்பதை உணர்கிறேன். இந்த வாய்ப்பினை எனக்கு வழங்கிய சத்குருவுக்கு என்னுடைய நன்றி. அவர் எனக்கு அருளிய அனைத்து விஷயங்களுக்கும் நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்," என்கிறார் நன்றி பெருக.

தேவியை உங்கள் வீட்டிலேயே யந்திர வடிவில் வைத்துக்கொள்ள இதோ உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு. வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி சத்குரு முன்னிலையில் லிங்கபைரவி யந்திரம் வழங்கப்படுகிறது. யந்திரத்தை பெறும்போது சக்திவாய்ந்த யந்திர செயல்முறைக்கான தீட்சையை சத்குருவிடமிருந்து நீங்கள் நேரடியாகப் பெறலாம்.


தொடர்புக்கு:
94890 45133

இ-மெயில்: yantra@lingabhairavi.org

மேலும் தகவல் பெற...

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1