நுட்பமான அர்தத்தை உள்ளடக்கிய ஜென் கதைகளை மையமாக வைத்து தொகுக்கப்பட்ட நூல், ஜென்னல். ஈஷாவின் புதிய வெளியீடான இப்புத்தகத்தைப் பற்றி சில குறிப்புகள் இங்கே...


ஜென் கதைகளும் அதற்கு சத்குருவின் விளக்கங்களும் அடங்கிய ஜென்னல் என்ற நூல் தற்போது வெளியாகியுள்ளது. இந்நூல் சுபாவின் கைவண்ணத்தில் உருவாகியுள்ளது.

ஜென் என்றால் என்ன அல்லது ஜென் என்ற வார்த்தை எப்படி உருவானது?

த்யான் (தியானம்) என்பது பாரதத்திலிருந்து சீனாவுக்குப் போயிற்று. அங்கே அது திரிந்து 'ச்சான்' என்று அழைக்கப்பட்டது. அங்கிருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் போனபோது, ஜப்பானில் ஜென் என்று மருவி விட்டது.

நாம் இங்கே மக்களை தியானத்தில் ஈடுபடுத்துவதற்கு எவ்வாறு பலவிதமான பயிற்சி முறைகளை உருவாக்கியுள்ளோமோ, அதே போல் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலுடும் மக்கள் தங்களை தியானத்தில் ஈடுபடுத்திக் கொள்ள பலவிதமான பயிற்சி முறைகளை உருவாக்கினார்கள்.

ஜென் என்பது அடிப்படையில் தியானம். தியான மடங்கள் ஜென் மடங்களாயின. ஜென் பாதை என்பது தியானப் பாதை! எப்படி சிந்து என்பது இந்து என்றாகி, பிற்பாடு ஹிந்து என்று மருவி விட்டதோ, அப்படித்தான், த்யான், ஜென் ஆகிவிட்டது.

பொதுவாக ஜென் கதைகள் என்று சொல்லப்படுபவை நுட்பமான அர்த்தத்தை உள்ளடக்கியவை. மேலோட்டமாகப் படித்தால் உண்மையான உள் அர்த்தத்தைத் தவற விட்டுவிடுவோம். எனவே ஜென் கதைகளுக்கு சத்குருவிடமே அர்த்தம் கேட்டு இந்த நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஒரு ஞானியின் விளக்கத்துடன் புதிரான ஜென் கதைகளைப் படிப்பதென்பது மிகவும் விசேஷம்தான்!

கதைகள் அனைத்துமே அழகான கருத்துப் படங்களுடன் சுவையாக அமைக்கப்பட்டுள்ளன. எனவே ஜென் பற்றி எளிமையான முறையில் ஓரளவு முழுமையாகப் புரிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.

ஜென்னல்
ஆசிரியர்: சத்குரு
எழுத்தாக்கம்: சுபா
விலை: ரூ. 125/-
ஈஷாவின் புத்தக வெளியீடுகளைக் கூரியர் மூலம் பெற:
(0422) 2515415

இப்புத்தகத்தை ஆன்லைனில் பெற இங்கே க்ளிக் செய்யவும்
https://www.ishashoppe.com/downloads/portfolio/jennal/