கடந்த வாரத்தில் ஈஷாவில் நிகழ்ந்த சில சுவாரஸ்ய நிகழ்வுகளின் தொகுப்பு இங்கே!

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளின் மத்திய மண்டல சேனாதிபதிகள் சந்திப்பு!

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளின் மத்திய மண்டல சேனாதிபதிகள் சந்திப்பு!, Zero budget iyarkai vivasayigalin mathiya mandala senathipathigalin santhippu

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளின் மத்திய மண்டல சேனாதிபதிகள் சந்திப்பு!, Zero budget iyarkai vivasayigalin mathiya mandala senathipathigalin santhippu

ஈஷா பசுமைக்கரங்கள் திட்டத்தின் சார்பாக ஜீரோ பட்ஜெட் இயற்கை விவசாயிகளின் மத்திய மண்டல சேனாதிபதிகள் (சேலம், ஈரோடு, கரூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி) சந்திப்பு கோபி செட்டிபாளையம் அருகில் மேவாணி கிராமத்திலுள்ள திரு.செந்தில் குமார் அவர்களின் வேளாண் பண்ணையில் ஜூன் 25 அன்று நடைபெற்றது.

இயற்கை விவசாயிகள் 75 பேர் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். திரு.செந்தில் குமார் அவர்கள் தோட்டத்திற்கு வந்த அனைவரையும் வரவேற்று உபசரித்தார். ஸ்வாமி ஸ்ரீமுகா நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழி நடத்தினார்.

உபயோகா வகுப்பில் பாராளுமன்ற உறுப்பினர்!

கோவையில் உலக யோகா தினத்தைக் கொண்டாடும் விதமாக ஜூன் மாதம் முழுக்க உபயோகா வகுப்புகள் பள்ளிகள், கல்லூரிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் மக்கள் குடியிருப்புகள் என பல்வேறு இடங்களில் இலவசமாக வழங்கப்பட்டன. கொண்டாட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியாக ஜூன் 29ல் நிகழ்ந்த உபயோகா வகுப்பில், மாண்புமிகு பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஏ.பி.நாகராஜன் அவர்கள் கல்ந்துகொண்டார். ஐ.டி.ஐ மாணவர்கள் 300 பேரும் இந்நிகழ்ச்சியில் கல்ந்துகொண்டு உபயோகா கற்றுக்கொண்டனர். ஜூன் 1ஆம் தேதி துவங்கிய உபயோகா வகுப்புகள் கோவை நகரமெங்கும் 22000 மக்களுக்கும் மேலாக சென்றுசேர்ந்துள்ளது. கோவையை அடுத்த சூலூர் மில்ஸில் சுமார் 5000 பேருக்கு உபயோகா வழங்கப்பட்டுள்ளது.

10 வருடங்களை நிறைவு செய்த ஈஷா வித்யா!

ஈஷா வித்யா 10 வருடங்களை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளதை ஈஷா வித்யா பள்ளிகள் வெவ்வேறு விதமாகக் கொண்டாடி வருகின்றன. ஜூன் 28ஆம் தேதி தர்மபுரி ஈஷா வித்யா பள்ளியில் நடைபெற்ற விழாவில், பெற்றோர்கள் சந்திப்பு நிகழ்ந்ததோடு, தன்னார்வத் தொண்டகளும் அழைக்கப்பட்டிருந்தனர். மாவிலை தோரணம், மலர்கள், ரங்கோலி, ஃப்ளோர் ஆர்ட் போன்ற அலங்காரங்களால் பள்ளி முழுவதும் வண்ணக்கோலம் பூண்டிருந்தது. ஈஷா வித்யாவின் சாதனைப் பயணம், ஈஷா வித்யா துவங்கியதற்கான சத்குருவின் நோக்கம் ஆகியவற்றை விளக்கும் வகையில் வீடியோ காட்சி திரையிடப்பட்டது.