யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!
மஹாசிவராத்திரிக்கு முந்தைய 40/21/12/7/3 நாட்களுக்கு இந்த சாதனாவை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் மேற்கொள்ளலாம். தினமும் ஆதியோகியின் முன் சாதனா செய்வதோடு, ஆதியோகி சேவையில் தங்களை முழுமையாக இவர்கள் அர்ப்பணிப்பார்கள்.
 
சத்குரு இதுபற்றி பேசும்போது, “இது நாம் கரைந்து போவதற்கும், நம்மைவிட மிக உயரிய ஒன்றை உருவாக்குவதில் நமது பங்களிப்பை அளிப்பதற்குமான ஒரு வாய்ப்பு,” என்றார்.

அடுத்த சில நாட்களில் ஈஷா யோக மையத்தில் நடக்கவிருப்பதெல்லாம் நம் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நிகழக்கூடியதாகும். இதனை நிகழச் செய்வதில் உங்கள் பங்களிப்பை வழங்க விருப்பம் தெரிவிக்கும் அனைவரும் யோக வீரராக ஆக முடியும்.

40 நாள் யோக வீரா சாதனா மேற்கொள்ளும் இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளைல கடந்த மூன்று மாதமா ஷாம்பவி பயிற்சி செஞ்சு வர்றேன். ஆனா, இப்போ யோக வீரா தீட்சைக்கு அப்புறமா உணர்வதும், ஆதியோகி முன்னால ஷாம்பவிய உணர்வதும் வார்த்தைகளால விவரிக்க முடியாத அளவுக்கு இருக்கு. நான் ரொம்ப சுலபமா தீவிரமா இருக்கிறது எனக்கே ஆச்சரியமா இருக்கு.

- கிரண், ஹைதராபாத்

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

எனக்கும் மத்தவங்களுக்கும் இடையில எப்பவுமே ஒரு சுவர் எழுப்பி இருப்பேன். யோக வீரா தீட்சைக்கு அப்புறம் எல்லா மக்களோடவும் இயல்பா இருக்க முடியுது. என்னை சுத்தி இருக்கிற எல்லாத்திலேயும் ஆனந்தமா ஈடுபாட்டோட இருக்கறதா உணர்றேன்.

- காஞ்சனா சர்மா, நாக்பூர்.

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

ஆதியோகிக்கு முன்னாடி சாதனா செய்யும்போது, ஆனந்தத்துல வெடிக்கிற மாதிரி இருக்குது. எல்லா உயிர்களோடவும் எல்லா நிலையிலேயும் ஆனந்தமா, ஈடுபாட்டோட இருக்க முடியுது. வாழ்க்கை ரொம்ப சுலபமா நடக்குதுன்னு தோணுது.

- அங்கித் மோடி, மும்பை.

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

யோக வீரா - ஆதியோகியின் அருளில் கரைந்திட ஒரு மகத்தான வாய்ப்பு!, Yoga veera - adiyogiyin arulil karainthida oru magathana vaippu

சாதனா துவங்கும் நாட்கள்...

40 நாட்கள் - 16 ஜனவரி
21 நாட்கள் - 4 பிப்ரவரி
12 நாட்கள் 13 பிப்ரவரி,
7 நாட்கள் - 18 பிப்ரவரி,
3 நாட்கள் - 22 பிப்ரவரி

துவக்க நாளன்று காலை 10.45 மணிக்கு சாதனா துவங்கும்.

பதிவுசெய்ய: உங்கள் உள்ளூர் மைய ஒருங்கிணைப்பாளரை அணுகவும்.

ஆன்லைனில் முன்பதிவு செய்ய:
isha.sadhguru.org/yogaveera/

கேள்விகளை இ-மெயிலுக்கு அனுப்ப: yogaveera@ishafoundation.org

டமரு சேவை

பிப்ரவரி 24ம் தேதி நடைபெறவிருக்கும் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்களின்போது கிட்டத்தட்ட 5000 பேர் ஆதியோகிக்கு டமரு சேவை செய்ய இருக்கிறார்கள்.

ஆரத்தி சேவை

டமரு சேவையை போலவே தீப ஆரத்தியும் ஆதியோகி பிரதிஷ்டையின்போது நடக்கும். இதில் 10,000 பேர் ஈடுபட உள்ளனர்.

  0 Comments
 
Login / to join the conversation1