‘மாருதி காரை யார் ஸ்டார்ட் செய்தாலும் ஸ்டார்ட் ஆகிறதல்லவா?! அதுபோலத்தான் யோகாவும் அனைவருக்கும் வேலை செய்யும்!’ என சத்குரு சொல்வதுண்டு! அதனை உறுதிசெய்யும் விதமாக சென்னையில் நிகழ்ந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இங்கே பகிர்கிறார் ஒரு தன்னார்வத் தொண்டர்!

திருமதி. அபிராமி, சென்னை

abirami-akkaஅதிகாலை 5.30 மணிக்கு, சத்குரு சந்நிதியில் யோகாசன பயிற்சிகளுக்காக தியான அன்பர்கள் சிலர் கூடியிருந்தோம். நாங்கள் கற்றுக்கொண்ட அனைத்து பயிற்சிகளையும் திருத்திக்கொள்ள ஒன்றுகூடும் நாளினை "சாதனா தினம்" என்று நாங்கள் அழைக்கிறோம். அந்தந்த ஊர் மையங்களில் இது ஒவ்வொருமாதமும் நடக்கிறது. அனைத்து ஈஷா தியான அன்பர்களும் இதில் கலந்துகொள்ளலாம்..!

குருபூஜையுடன் பயிற்சிகளை துவக்குவது வழக்கம். குருபூஜை முடிந்து கண்திறந்தபோது மெல்லிய விளக்கு வெளிச்சத்தில் கறுப்பு அங்கியால் தன்னை முழுவதுமாக போர்த்தியபடி எங்களுடன் ஒருவர் கூடுதலாக வந்து அமர்ந்திருந்தார். கடந்த மாதசாதனா தினத்தன்று அவர் வந்திருக்கவில்லை என்பது நிச்சயமாக தெரியும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
எந்த நம்பிக்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் சரி், தன் அனுபவத்தில் இது சரியாக செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்தபிறகு மக்கள் எதையும் ஒதுக்குவதில்லை. நாம் நமது முழுதிறனுக்கு செயல்பட நமது உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலைகளை சீரமைக்கும் தொழில்நுட்பமே யோகா.

இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர் என்பதை அவரது அங்கி தெளிவுபடுத்தியது. மெல்ல எங்கள் அருகில் வந்தவர், தாம் மீண்டும் ஈஷா யோகா பயிற்சி துவங்க விரும்புவதாக தெரிவித்தார். மேற்கொண்டு வேறு எதுவும் கேட்காமல் பயிற்சிக்கான குறிப்புகளை அவருக்கு நாங்கள் சொல்லச் சொல்ல, 90 நிமிடங்களில் பயிற்சியை முழுமையாக சரிசெய்து, திருத்திக் கொண்டவர் மெல்ல தன்னைப்பற்றி பேசத் துவங்கினார்.

"எனக்கு மத ரீதியாக எதுவும் வேண்டாம். ஏற்கனவே நான் ஈஷா யோகா வகுப்பில் கலந்துகொண்டேன். சில வருடங்கள் பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தபின் எப்படியோ விட்டுவிட்டேன். பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தபோது நன்றாக இருந்தது. இப்போது IAS தேர்வில் கலந்துகொள்ள இருக்கிறேன்.

தேர்வுக்காக தயார்செய்து வருகிறேன். ஆனால், முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. எனது கணவர்தான், நான் ஈஷா யோகா பயிற்சிகளை செய்து வந்தபோது கவனமாகவும் சுறுசுறுப்பாகவும் இருந்ததை பற்றி குறிப்பிட்டு, மீண்டும் பயிற்சியை துவக்க தூண்டுகோலாக இருந்தார். இன்று அதிகாலை என்னை இங்கு கொண்டுவந்து விட்டவரும் அவர்தான்," என்று முடித்தார்.

அதிகாலை வேளையில் தெரியாத இடம் தேடி கண்டுபிடித்து, கணவன் மனைவி இருவரும் இதற்காக 5 மணிக்கு முன்பே எழுந்துவருவதை பார்த்தபோது... "தங்களுக்கு முறையான பலன்தரும் எந்த விஷயத்தையும் மக்கள் நிராகரிக்க மாட்டார்கள்," என்பது எனக்கு புரிந்தது.

யோகாவை பற்றிய பல தவறான கருத்துக்களை இன்று மட்டுமல்ல எல்லா காலங்களிலும் பலரும் பேசி வந்திருக்கிறார்கள்.

எந்த நம்பிக்கையை பின்பற்றுபவராக இருந்தாலும் சரி், தன் அனுபவத்தில் இது சரியாக செயல்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக பார்த்தபிறகு மக்கள் எதையும் ஒதுக்குவதில்லை. நாம் நமது முழுதிறனுக்கு செயல்பட நமது
உடல், மனம், உணர்ச்சி, சக்திநிலைகளை சீரமைக்கும் தொழில்நுட்பமே யோகா.

"யோகாவில் மதரீதியான அம்சம் எதுவும் இல்லை. கற்றுக்கொண்ட பயிற்சி உங்களுக்கு பலன்தந்தால் தொடர்ந்து செய்யுங்கள்.. இல்லையா, தூக்கி எறியுங்கள் அவ்வளவுதான்."

குறிப்புகளை சரியாக பின்பற்றி செய்தால் தொழில்நுட்பம் எப்போதுமே எல்லோருக்கும் வேலை செய்யும்..!

குறிப்பு:

ஈஷா யோகா வகுப்பு பற்றிய விபரங்களுக்கு: ishayoga.org