யக்ஷா 2018

ஈஷா யோக மையத்தில் யக்ஷா கொண்டாட்டங்கள் நேற்று துவங்கின, நம் தேசத்து கலைகளின் தூய்மை, தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து ஊக்குவிக்கும் விதமாக ஈஷா யோக மையத்தில் ஆண்டுதோறும் யக்ஷா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகிறது. 3 நாள் நிகழ்ச்சிகளில், நாட்டியம் மற்றும் இசைத்துறைகளில் பிரசித்திபெற்ற கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

ராக்கேஷ் சௌரசியா அவர்களின் புல்லங்குழல் இசை

முதல்நாளான நேற்று பிரபல புல்லாங்குழல் இசை கலைஞர் ராக்கேஷ் சௌராசியா அவர்களின் புல்லாங்குழல் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. இவர் பழம்பெரும் புல்லாங்குழல் கலைஞர் திரு. ஹரிபிரசாத் சௌராசிய அவர்களின் சகோதரர் மகனாவார். பல சர்வதேச விருதுகளை பெற்றிருக்கும் இவர் பல இசைத் தொகுப்புகளையும் வெளியீட்டுள்ளார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

மாலை 6:30 மணிக்கு துவங்கிய புல்லங்குழல் நிகழ்ச்சியில் ராக்கேஷ் சௌராசிய அவரது குழுவினருடன் இனிமையான இசை தொகுப்புகளை வழங்கினர். ஹிந்துஸ்த்தானி இசையை தனது பாணியில் வாசித்து பாற்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார், மெய்சிலிற்கும் வகையிலமைந்த அவரின் இசையை நூற்றுக்கணக்கான மக்கள் மெய்மறந்து ரசித்து மனமுருகிச் சென்றனர்.

நிகழ்ச்சி குறித்து சத்குரு கூறுகையில் ஒன்பதாவதது ஆண்டு யக்ஷா கொண்டாட்டங்கள், என்ன ஒரு அருமையான துவக்கம். காற்று எவ்வளவு பெரிய வேலைகளை செய்கிறது பாருங்கள், அது நம்மை உயிர்வாழச் செய்கிறது, ஒரு யோகிக்கு அது உலகத்துடனான தொடர்பு. ஆனால் வெகு சிலரால் மட்டுமே காற்றைவைத்து அற்புதமான இசையை உருவாக்க முடியும். திரு. ஹரிபிரசாத் சௌராசிய அவர்கள் உங்களை கண்டு மிகவும் பெருமை படுவார்கள் நாங்களும்தான், மிக்க நன்றி.

மூன்று நாள் யக்ஷா நிகழ்ச்சிகளில் இரண்டாம் நாளான இன்று பிரபல இசைப் பாடகர் திருமதி ஸ்ருதி சதோலிக்கர் கட்கர் அவர்கள் பங்குபெற்று பாடுகிறார்கள். இதை இணையதளத்திலும் நேரடியாக கண்டுகளிக்கலாம்.


குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.