ஈஷா ருசி

இந்த Weekend ற்கு எங்கு போகலாம், என்ன சமைக்கலாம் என்று குழம்பியிருக்கும் உங்களுக்கு, இங்கே சுவையான ஒரு டிபன் சூடான ஒரு காபி, சமைத்துவிட்டுச் சொல்லுங்கள்!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ராகி பாலக் அடை

தேவையானவை

பாலக்கீரை - 1 கட்டு
ராகி மாவு - 2 கப்
தோசை மாவு - 1 கப்
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கருவேப்பிலை - 1 ஈர்க்கு
முட்டைகோஸ் - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
கேரட் - 1 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை

  • பாலக்கீரையை நன்கு சுத்தம் செய்து வேகவைத்து அரைத்துக் கொள்ளவும்
  • இத்துடன் ராகி மாவு, தோசை மாவு, தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு சேர்த்து பொரிந்தவுடன் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
  • பின்னர் நறுக்கிய முட்டைகோஸ், கேரட் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
  • வதங்கியபின் மாவுடன் சேர்த்து கலக்கவும்.
  • மணி நேரம் கழித்து அடை வார்க்கலாம்.
  • சுவையான சத்துள்ள ராகி பாலக் அடை தயார்.

கோதுமை காபி

தேவையானவை
முழு கோதுமை - 500 கிராம்Coffee
மல்லி - 50 கிராம்
நாட்டுச் சர்க்கரை - சுவைக்கேற்ப

செய்முறை

  • முழு கோதுமையை (உமி நீக்கியது) காபி கொட்டை வறுப்பது போல நன்கு வாசனை வரும்வரை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.
  • அதில் சுவைக்கு கொஞ்சம் கொத்துமல்லி விதையையும் சேர்க்கலாம்.
  • மல்லியை சிவந்து மணம் வரும்வரை நன்கு வறுத்து கலந்துக் கொள்ள வேண்டும்.
  • இந்தப் காபி பொடியை இரண்டு ஸ்பூன் பால் அல்லது தண்ணீரில் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து பருகலாம்.
  • இது சுவையில் காபி போலவே இருக்கும். காபி குடிப்பதை விடமுடியாதவர்களுக்கு சிறந்த மாற்று வழி.
  • உடலுக்கும் ஆரோக்கியமானது.