“மனிதர்கள் தங்கள் வாழ்க்கையின்பால் அதீத உற்சாகத்தைக் கொண்டிருந்தால், அவர்கள் எவ்வழியிலாவது அனைத்திற்கும் ஒரு தீர்வைக் கண்டறிந்துவிடுவார்கள்” சத்குரு இப்படிச் சொல்வது நமது ஆர்வமும் உற்சாகமும் நம் வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்திச் செல்ல எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைக்கிறது.

தமிழகத்தின் பெரும்பான்மை சதவிகித மக்கள் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள்தான். அவர்களின் உற்சாகமும் உயிரோட்டமும் இன்று எந்த அளவில் உள்ளது என்று பார்த்தால், அது கேள்விக்குறியாகவே இருக்கிறது!

இன்று இந்தியா பொருளாதார அளவிலும் தொழில்நுட்ப வசதியிலும் பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. ஆனால், இந்தியாவின் நகர்புறங்களில்தான் இந்த வளர்ச்சியெல்லாம்! கிராமங்களில் இன்னும் களையிழந்துபோன வாடிய முகங்களையே பார்க்க முடிகிறது.

ஊட்டச்சத்து குறைபாடுகளாலும் ஆரோக்கிய பிரச்சனைகளாலும் உடல் அளவில் பலகீனமானவர்களாகவே பெரும்பான்மையான கிராம மக்கள் காணப்படுகிறார்கள். ஆனால், விளையாட்டு என வரும்போது அவர்கள் புத்துணர்ச்சி கொண்டு துள்ளி எழுகிறார்கள். கபடி, கிளித் தட்டு, கில்லித் தண்டு, சிலம்பம், எறி பந்து, உதை பந்து... தமிழகத்தில் இதுபோன்ற கிராமிய விளையாட்டுக்களும் கிராம மக்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தே இருந்ததை முந்தைய தலைமுறைகளில் பார்க்க முடிந்தது.

“நீங்கள் ஒரு பந்தை உதைக்கும்போது கடவுளுக்கு நெருக்கமாக இருக்கிறீர்கள்!” என சுவாமி விவேகானந்தர் கூறுகிறார். ஆம்! நாம் விளையாடும்போது நமது உடலும் மனமும் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதோடு நமக்குள் புதைந்துகிடக்கும் கொண்டாட்ட உணர்வும் வெளிப்படுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு இதுபற்றி கூறும்போது...

முதன்முதலில் இந்த விளையாட்டுகளில் கிராம மக்களை ஈடுபடுத்த முயன்றபோது ஜாதி ரீதியான சமூக ரீதியான வேறுபாடுகளால் அவர்களிடையே தயக்கங்கள் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. ஆனால் விளையாட்டு என வரும்போது அது அவர்களை எல்லைகளைக் கடந்து ஒன்றாக்கியது.

“நம் நாட்டில் 75 சதவிகிதம் மக்கள் கிராமத்தில் இருந்தாலும், அவர்களுக்கு தேவையான வசதி, தேவையான ஒரு மதிப்பு கிடைக்காததால் இவ்வளவு வருடங்களில் நம் தொன்மையான கலாச்சாரங்கள் நசிந்து போயுள்ளது!

விளையாட்டில் ஈடுபடும்போது ஒருவரின் உடலும் மனமும் வலிமையடைகிறது. இன்னும் ஒருபடி மேலே சொல்ல வேண்டுமென்றால் ஒரு விளையாட்டினை எப்படி விளையாட வேண்டுமென்று அறிந்துகொள்வதும் கூட ஆன்மீக செயல்முறையே! விளையாட்டு என்பது ஒருவர் தன் எல்லைகளைக் கடந்து இயங்குவதற்கான எளிய வழிமுறை.

கிராம மக்களின் வாழ்வை புத்துணர்வுகொள்ளச் செய்யும் நோக்கில் நாம் இந்த கிராம புத்துணர்வு இயக்கத்தின் மூலம் அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகளை ஆண்டுதோறும் நடத்தி வருகிறோம். முதன்முதலில் இந்த விளையாட்டுகளில் கிராம மக்களை ஈடுபடுத்த முயன்றபோது ஜாதி ரீதியான சமூக ரீதியான வேறுபாடுகளால் அவர்களிடையே தயக்கங்கள் இருந்ததைப் பார்க்கமுடிந்தது. ஆனால் விளையாட்டு என வரும்போது அது அவர்களை எல்லைகளைக் கடந்து ஒன்றாக்கியது.

பொதுவாக கிராமப்புறங்களில் 6 வயதிற்கு மேல் பெண் குழந்தைகளை விளையாட அனுமதிப்பதில்லை. ஆனால், இந்த இயக்கத்தின் மூலமாக 60 வயது பெண்மணிகளும் 70 வயது பெரியவர்களும் விளையாட்டில் ஈடுபடுவதைப் பார்ப்பது அற்புதமான ஒன்று! அவர்கள் இளம் வயதுடையவர்களுடன் போட்டி போட்டு வெற்றியும் பெறுகின்றனர்.
இந்த இயக்கத்தின் மூலம் நிகழும் இன்னொரு குறிப்பிடத்தகுந்த மாற்றம், கிராமத்து இளைஞர்கள் இதன்மூலம் தங்கள் உடல்திறனை மீட்டெடுக்க முன்வருகிறார்கள் என்பதுதான். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றிற்கு அடிமையாகி தங்கள் உடல் நலனை கெடுத்து வந்தவர்கள், திடீரென்று இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட, அந்த பழக்கங்களிலிருந்து மீண்டு, தங்கள் உடல்திறனை மேம்படுத்துகிறார்கள். போட்டிகளில் வெற்றிபெற வேண்டுமென்ற முனைப்பு அவர்களை அப்படி மாற்றுகிறது.

ஈஷாவில் துவங்கியுள்ள இந்த முதற்கட்ட முயற்சி இந்த நாடு முழுவதும் பரவ வேண்டும். விளையாட்டு என்பதை துவக்கப்புள்ளியாகக் கொண்டால், மனிதனின் பொருளாதார, சமூக, ஆன்மீக வளர்ச்சிகளையும் எளிதில் அடைந்துவிடலாம். அனைத்திற்கும் மேலாக, இந்த வாழ்க்கை எனும் விளையாட்டில்தான் ஒவ்வொரு மனிதனும் இருக்கிறார்கள் என்பது நிதர்சனமானது!”

கோவை கொடிசியாவில் நிறைவு விழா கொண்டாட்டம்!

இந்த ஆண்டு ஈஷா கிராமோத்சவ திருவிழாவின் மாபெரும் நிறைவு விழா கொண்டாட்டம் பல்வேறு கிராமிய கலைநிகழ்ச்சிகளுடனும் விளையாட்டுகளுடனும் கோவை கொடிசியா மைதானத்தில் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி நிகழவுள்ளது.

காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுப் போட்டிகள் மற்றும் வெற்றிக் கோப்பைக்கான இறுதிப் போட்டிகள் நிகழவுள்ளன. அதோடு, கிராமிய உணவுத் திருவிழாவும் சிறப்புற நடைபெறவுள்ளது.

சிறப்பு விருந்தினர்களாக கிரண்பேடி, மேதகு துணைநிலை ஆளுநர் புதுச்சேரி மற்றும் கர்னல் ராஜ்யவர்தன் ரதோர், மாண்புமிகு மத்திய தகவல் & ஒளிபரப்புத் துறை அமைச்சர் ஆகியோர் சத்குருவுடன் கலந்துகொள்கிறார்கள். அனைவரும் வருகை தந்து கிராமிய கலைகளையும் விளையாட்டுகளையும் மீட்டெடுப்போம்!

ஈஷா கிராமோத்சவம் பற்றி மேலும் அறிய: AnandaAlai.com/Gramotsavam