ஈஷா யோக மையத்தில் யக்‌ஷா நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டு வருகின்றன. நம் தேசத்து கலைகளின் தூய்மை, தனித்துவம் மற்றும் பன்முகத்தன்மையை பாதுகாத்து ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் இங்கு கொண்டாடப்படுகிறது. 3 நாள் நிகழ்ச்சிகளில், நாட்டியம் மற்றும் இசைத்துறைகளில் பிரசித்திபெற்ற கலைஞர்கள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்துவார்கள்.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த சூர்யகுண்டம் மண்டபத்தில் மாலை 6:30 மணிக்கு இந்த துவங்கியது. முதலில் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின் திருமதி. ஸ்ருதி சதோலிக்கர் கட்கர் அவர்களுக்கு மேடையில் ஈஷா யோக மையம் சார்பில் சால்வை போர்த்தி மரியாதை செய்யப்பட்டது.

அவர் கயல் இசை பாடல்களை தனக்கே உரிய பாணியில் தானே இசையமைத்த மெட்டுக்களுடன் பாடி அனைவருக்கும் ஆழந்த இசையனுபவம் வழங்கினார். தபேலா, சாரங்கி, ஹார்மோனியம் மற்றும் தம்புரா போன்ற மிகவும் நுட்பமான இசைக்கருவிகளுடன் தனது குழுவினருடன் அவர் பாடிய பாடல்கள் ஆன்மீக உணர்வை ஊட்டுவதாக இருந்தது. நூற்றுக்கணக்கான மக்கள் அவர் பாடிய பாடல்களை அமைதியாக கண்டு கேட்டு ரசித்தனர். அவரின் "ராக நந்த" பாடல் அனைவரையும் கவர்ந்த ஒன்றாக அமைந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

குறிப்பு:

மஹாசிவராத்திரி தினத்தன்று விழிப்பாய், தன் முதுகுத்தண்டை நேராய் வைத்திருக்கும் ஒருவருக்கு உடல் சார்ந்த மற்றும் ஆன்மீக ரீதியான பலன்கள் அபரிமிதமாக கிடைக்கிறது.

வெள்ளியங்கிரி மலைச்சாரலில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்தில், ஆதியோகியின் திருவருளுடன் தெய்வீக இரவான மஹாசிவராத்திரியைக் கொண்டாட சத்குரு உங்களை அழைக்கிறார்.

நாள்: பிப்ரவரி 13, 2018

நேரம்: மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை

இவ்வருட மஹாசிவராத்திரியில் என்ன ஸ்பெஷல்? தெரிந்துகொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள்.