"இன்னும் ஒரு மாதம் இருக்குது; இன்னும் 20 நாட்கள் இருக்குது..." என்று சொல்லி வந்த சென்னை ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், இப்போது "இதோ சத்குரு க்ளாஸ் வந்துருச்சு!" என்று உற்சாகத்தில் குதிக்கத் துவங்கியுள்ளனர். எப்படி இருக்குது சென்னை...? தன்னார்வத் தொண்டர்களின் பணிகளும் பகிர்தல்களும் உங்களுக்காக இங்கே!

சென்னையில் இப்போது டாக் ஆஃப் த சிட்டி "சத்குருவுடன் ஈஷா யோகா" தான். இது ஏதோ மிகைப்படுத்திச் சொல்லப்படும் வர்ணனையல்ல. நங்கநல்லூர் ஆஞ்சநேயரிடமே இதை நீங்கள் கேட்டுப் பார்க்கலாம்!

ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் சென்னையில், சத்குரு நிகழ்த்தும் யோகா வகுப்பிற்காக மேற்கொண்டுள்ள செயல்கள் நங்கநல்லூர் ஆஞ்சநேயரையும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாளையும், மயிலாப்பூர் கபாலீஷ்வரரையும் கூட சென்றடைந்துள்ளன.

வீடு வீடாகச் சென்று அழைப்பிதழ் கொடுப்பது, ஃபோன் மூலமும் குறுஞ்செய்தி மூலமும் நிகழ்ச்சி குறித்த தகவலைத் தெரிவிப்பது என முழு வீச்சில் செயல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், கோவில் வாசல்கள் அடையார் ஆனந்தபவன் மற்றும் பழமுதிர் நிலையங்கள் போன்ற வணிக வளாகங்களிலும் தற்காலிக தகவல் மையத்தை உருவாக்கி மக்களிடம் வகுப்பைக் கொண்டு சேர்க்கின்றனர் சென்னை தன்னார்வத் தொண்டர்கள்.

சனிக்கிழமை வந்தால் ஆனந்தம்...

சத்குருவுடன் ஈஷா யோகா வகுப்புக்காக நீங்க செய்ற செயல்கள் பத்திக் கொஞ்சம் பகிர்ந்துக்க முடியுமா எனக் கேட்டதும், சில நொடிகள் மௌனமாய் இருந்த நங்கநல்லூர் ஹரிப்ரியாவிடமிருந்து கண்ணீரும் வார்த்தைகளும் ஒன்றாக வழிந்தோடின.

"சத்குரு நேரடியா வந்து யோகா க்ளாஸ் எடுக்குறாருங்கற தகவல மட்டும் எவ்வளவு பேருக்கு முடியுமோ அவ்வளவு பேருக்கு நீங்க கொண்டு போய் சேருங்க; அவங்க க்ளாஸூக்கு வர்றது வராததப் பத்தி நீங்க கவலப்பட வேண்டாம்னு சத்குரு சொல்லியிருக்காங்க. இதான் ஏம் மனசில எப்பவுமே இருக்கு. என்னோட வேல தகவலக் கொண்டு போய் சேக்குறதுதான்," என்று கூறிய அவர், சனிக்கிழமைகளில் விழாக்கோலம் பூணும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் தகவல் மையத்தில் மக்களிடம் வகுப்பு குறித்த அறிமுகத் தகவலை மக்களுக்கு வழங்குகிறார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பக்தி சாதனா...

மயிலாப்பூர் சரோஜா, பக்தி சாதனாவைப் பற்றி பேச ஆரம்பித்தார்...

சென்னை வகுப்பிற்காக தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபடும் ஈஷா அன்பர்களுக்காக சத்குரு வழங்கியுள்ள அற்புதக் கருவிதான் இந்த "பக்தி சாதனா."

"காலை 5.30 மணிக்குள் எழுந்துவிட வேண்டும்; தொடர்ந்து குரு பூஜை செய்து அல்லது சத்குருவின் படம் முன்பு சில நிமிடங்கள் மௌனமாய் அமர்ந்து, பிறகு தவறாமல் யோகப் பயிற்சிகளையும் முடித்துவிட்டு அதன் பிறகே இந்த வகுப்புக்கான தன்னார்வத் தொண்டில் ஈடுபட வேண்டும். தினசரி குறைந்தது 10 பேரிடமாவது யோகா குறித்த நன்மைகளையும் மேலும் அதற்கான வாய்ப்பாக இந்த வகுப்பு குறித்தும், எடுத்துரைக்க வேண்டும்."

அனைத்து சென்னை மையங்கள் உட்பட, திருவண்ணாமலை, பாண்டி, வேலூர், விழுப்புரம், செஞ்சி, குடியாத்தம் போன்ற நகரங்களின் தன்னார்வத் தொண்டர்களையும் சேர்த்து மொத்தம் 500 பேருக்கும் மேல் இந்த பக்தி சாதனாவை மேற்கொண்டுள்ளனர்.

மெரினாவிற்கு அழகு சேர்க்கும் ஈஷா யோகா

மெரினா கடற்கரையில், காலை நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு ஈஷா யோகாவை அறிமுகப்படுத்துவதற்கான இன்னொரு செயல் இது. மெரினாவில் காந்தி சிலைக்கு பின்புறம் கூடும் நம் சென்னை தியான அன்பர்கள், "சத்குருவுடன் ஈஷா யோகா" என அச்சிடப்பட்ட டீ-சர்ட்டுகளுடன் பயிற்சியை மேற்கொள்கிறார்கள்.

தந்தனத்தம் என்று சொல்லியே ஈஷாவை பாட...

தெருக்கூத்து வடிவில் எப்போதும் ஈஷா யோகா வகுப்பை மக்களிடம் கொண்டு சேர்க்கும் "சென்னை கூத்து டீம்", இந்த முறை மேலும் சிறிது விரிவாகி, பல குழுக்களாக, தற்போது சென்னை முழுக்க களைகட்டுகிறார்கள். இம்முறை புதிதாக அறிமுகமாகியுள்ளது நம் பாரம்பரியக் கலை வடிவமான வில்லுப்பாட்டு.

சென்னை ஈஷாக்களுக்கு சில தகவல்கள்

சத்குரு நிகழ்த்தும் யோகா வகுப்பில் கலந்து கொள்பவர்களுக்கு மட்டுமல்லாமல் சென்னையிலுள்ள அனைத்து ஈஷா அன்பர்களுக்கும் இங்கே கொடுக்கப்படும் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாகும்.

சென்னை தி.நகரில் செயல்பட்டு வருகின்ற ஈஷா யோகா மையத்தின் சென்னை அலுவலகத்தில், காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை எப்போது வேண்டுமானாலும் யோகப் பயிற்சிகள் மற்றும் தியானம் மேற்கொள்ள முடியும். மேலும் ஈஷாவின் 'டிவிடி'க்கள் புத்தகங்கள் மற்றும் சத்து மாவு போன்ற ஈஷா ருசி பொருட்களையும் இங்கே வாங்கிக் கொள்ள முடியும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் தி.நகர் அலுவலகத்தில் "சாதனா நாள்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணிக்கு குரு பூஜையுடன் துவங்கி, யோகப் பயிற்சிகள் மேற்கொள்ளப்படுவதோடு, சத்குருவின் சத்சங்க வீடியோக்களும் ஒளிபரப்பப்படுகிறது. மேலும், அங்குள்ள ஈஷா யோகா ஆசிரியர்களிடம், பயிற்சிகளில் உள்ள சந்தேகங்களைக் கேட்டுத் திருத்திக் கொள்ள முடியும்.

தி.நகர் ஈஷா அலுவலக முகவரி:

No.81, பழமுதிர் நிலையம் எதிரில், மனோகரன் தெரு, சௌத் வெஸ்ட் போக் ரோடு, தி.நகர். 83000 11000/044 - 24333185
மேடவாக்கம், பழவந்தாங்கல், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள சத்குரு சந்நிதிகளை, அந்தந்த பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

மேடவாக்கம் சந்நிதி: பூங்கா நகர், முதல் தெரு, சந்தோஷ்புரம். செல்: 9444455478
பழவந்தாங்கல் சந்நிதி: No.7, 10வது தெரு, நேரு காலனி. 9444911747
திருவொற்றியூர் சந்நிதி: No.9, ஜி.பி. ரோடு, டோல் கேட், விக்கி டிராவல்ஸ் ப்ரிமிஸஸ். 9840042515

மேலும், செப்டம்பர் 13ம் தேதி சென்னை சத்குரு வகுப்பில் பங்கேற்கும் அனைவருக்கும் தங்கள் பயிற்சிகளின் சந்தேகங்களைத் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பாக, செப்டம்பர் 22ம் தேதி சென்னையில் மொத்தமுள்ள 22 ஈஷா மையங்களிலிருந்தும் தனித்தனியே மண்டபங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.


மேலும் விவரங்களுக்கு: 83000 11000/044 24333185