உயிர்நோக்கம் உயிர்ப்போடு ஆரம்பம்!!!

"உயிர்நோக்கம் - ஈஷாவின் புதிய 3 நாள் வகுப்பு". விரைவில் தொடங்கப்படவிருக்கும் ஈஷாவின் புதிய உயிர்நோக்கம் வகுப்பைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...
 

"உயிர்நோக்கம் - ஈஷாவின் புதிய 3 நாள் வகுப்பு". விரைவில் தொடங்கப்படவிருக்கும் ஈஷாவின் புதிய உயிர்நோக்கம் வகுப்பைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் இங்கே...

உயிரின் நோக்கம் பணம் சம்பாதிப்பதா, இன்பம் சுவைப்பதா, அறிவு சேர்ப்பதா, பசிக்கு உண்பதா, நேரத்திற்கு உறங்குவதா அல்லது எது நடந்தாலும், நடக்காமல் போனாலும், எனக்கென்ன என்று ஒதுங்கியிருப்பதா?

'உயிர் தான் நோக்கம்' என்று சொல்லிவிட்டார் சத்குரு.

இதில் எதுவுமே உயிரின் நோக்கம் இல்லையென்றால், எதுதான் உயிரின் நோக்கம்? என்று சத்குருவிடம் கேட்டதற்கு, 'உயிர் தான் நோக்கம்' என்று சொல்லிவிட்டார் சத்குரு.
13 நாள் வகுப்பில் பல்லாயிரம் பேரை அரவணைத்து, 7 நாள் வகுப்பில் பல லட்சம் பேரை அரவணைத்து, இன்று, 3 நாள் வகுப்பில் தமிழ்நாடு முழுவதிலும் இன்முகங்களை பரவச் செய்ய, சென்னையில் 'உயிர்நோக்கம்' வகுப்பை ஆரம்பிக்கச் சொல்லி பச்சைக் கொடி காட்டிவிட்டார் சத்குரு.

தமிழ்நாட்டின் சின்னத்திற்கு ஏற்ப, தமிழ்நாடே கோவிலாக மாறுவது நம் கையிலே இருக்கிறது. கோவிலின் மகிமை அங்கு வாழும் கடவுளை வைத்துதான் இருக்கும். கோவிலின் தெய்வம் சரியில்லை எனில், கோவிலே இல்லை. தமிழ்நாடே கோவிலாக வேண்டுமெனில், அதில் நடமாடும் தெய்வங்களாக ஒவ்வொரு மனிதனும் ஆகவேண்டும்.

ஒவ்வொரு மனிதனும் தெய்வமாய் பரிணமிக்கும் யோக அறிவியலின் சாரலில் உருவாகியிருக்கிறது, ஈஷா யோகாவின் 3-நாள் 'உயிர் நோக்கம்' வகுப்பு. இவ்வகுப்பில் மிக எளிய பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. இவ்வகுப்பின் முக்கிய அம்சம், சூறாவளியில் சிக்குண்டு திசைமாறிய ஆன்டெனா போல், வாழ்வில் ஸ்ட்ரெஸ், டென்ஷனில் சிக்கி தடுமாறும் நமக்கு, சரியான திசையை வழங்க வழிகாட்டியாய் 'உயிர்நோக்கம்' விளங்கும்.

மூன்றே நாள், ஒரு நாளிற்கு இரண்டே மணி நேரம் வகுப்பு. அங்கங்கு, வீட்டின் மாடிகளில், அலுவலக அறைகளில், பங்குபெறுவோரின் நேர வசதிக்கு ஏற்ப எங்கு வேண்டுமானாலும் வகுப்பை நிர்ணயித்து நிகழ்த்தலாம்.

போன வருடம் செப்டம்பரில் அறிவிக்கப்பட்டு, தேவையான ஏற்பாடுகள், ஆசிரியர் பயிற்சி எல்லாம் மே மாதம் நிறைவுபெற்று, ஜூலை 18ல் முழுமுதற் உயிர்நோக்கம் வகுப்புகள் சென்னையிலே ஆரம்பிக்கின்றன. இதற்கான செயற்குழுகூட்டம் சென்னை கோடம்பாக்கம் மீனாக்ஷி கல்லூரியில் 29ஜூன் ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை எங்கிலும் இருந்து வந்த தன்னார்வத் தொண்டர்கள் இவ்வகுப்பை தங்கள் ஏரியாக்களில் கொண்டு செல்ல மிகுந்த ஆர்வத்துடன் குழுமினர்.

ஆரம்ப கட்ட தகவல் அளிப்பு முடிந்த பின், சிற்சிறு குழுக்களாய் பிரிந்து நம் தன்னார்வத் தொண்டர்கள் இவ்வகுப்புகளை அவரவர் குடியிருக்கும் இடங்களில், வேலை செய்யும் இடங்களில் எப்படி எடுத்துச் செல்வது என்று கூடித் திட்டமிட்டனர். இக்கருத்துப் பரிமாற்றம், ஆரம்பித்த சூட்டில் சிறிதளவும் குறைவின்றி, இரவு 9:30 மணிவரை தொடர்ந்தது.

ஒரு மாதத்தில், சென்னையில் மட்டுமே 120 ல் இருந்து 250 உயிர்நோக்கம் வகுப்புகள் வரை எடுக்கும் ஆற்றல் இன்று நம்மிடம் இருக்கிறது. வந்திருந்த தியான அன்பர்களின் ஆர்வத்தைப் பார்த்தால், கூடிய சீக்கிரம் தெருவிற்குத் தெருவிலும் கூட உயிர்நோக்கம் வகுப்புகள் நிகழும் போலிருக்கிறது!!!

பூக்களெல்லாம் மலர்வதென்ன உயிர்நோக்கம் தானே...

ஜூலை 18, உயிர்நோக்கம் வகுப்பின் முதல் வகுப்புகள் நிகழும் காலநேர அட்டவணை:

இடம் நேரம் தொடர்புக்கு
அடையாறு காலை 10.30 - 12.30 8300032000
அண்ணா நகர் காலை 9 - 11 8300035000
குரோம்பேட் காலை 6 - 8 9894332174
கூடுவாஞ்சேரி காலை 6 - 8 & மாலை 6 - 8 98410 32312
மேடவாக்கம் மாலை 6 - 8 9994621662
நங்கநல்லூர் மாலை 6 - 8 8300034000
பெரம்பூர் மதியம் 2 - மாலை 4 & மாலை 6 - 8 8300036000
தாம்பரம் மாலை 6 - 8 9790843988
தி நகர் காலை 10 - 12 & மாலை 6 - 8 8300011000
வேளச்சேரி மாலை 6 - 8 9444062405
மைலாப்பூர் காலை 6.30 - 8.30 & மாலை 6.30 - 8.30 044-43535555

 
 
 
 
Login / to join the conversation1
 
 
6 வருடங்கள் க்கு முன்னர்

May I know the address of esha dhyanalinga?

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

Isha Yoga Center
Velliangiri Foothills, Semmedu (P.O.),
Coimbatore - 641 114, INDIA
Telephone: 91-422-2515345
Email: info@ishafoundation.org

Isha Yoga Center
No.81,Manoharan street,
South West Boag Road, (near Pazhamudhir Nilayam)
T.Nagar, Chennai - 600017, INDIA
Mobile: +91-8300011000
Telephone: +91-44-24333185
Email: chennai@ishafoundation.org

5 வருடங்கள் 11 மாதங்கள் க்கு முன்னர்

When at uyir nokkam salem,cm'7

5 வருடங்கள் 9 மாதங்கள் க்கு முன்னர்

sir ...please tell me isha yoga class address in guduvancherry with phone number??