சவாலான இந்நேரத்தில் சத்குரு தரிசன நேரலை

வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவத்தால் பல்வேறு பாதிப்புக்குள்ளாகி இருக்கும் மக்களுடன் இணைந்திருக்கும் வகையில், “சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்” என்ற தலைப்பில் இணையம் வாயிலாக தனது தரிசனத்தை நேரலையில் வழங்கினார் சத்குரு. தினமும் மாலை 6 மணியளவில் துவங்கும் இந்த நேரலை நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கானோர் இணைந்து, சத்குருவின் ஆழமிக்க உள்நிலை தரிசனங்களைப் பெற்று சவாலான இந்நேரத்தை சத்குருவின் அருளுடன் இலகுவாக கடந்து சென்றுள்ளனர். தற்போது இந்நிகழ்ச்சி வாரந்தோறும் வழங்கப்படுகிறது.

"சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்" தொடரில் நிகழ்ந்தேறிய சத்குரு தரிசன வீடியோக்களைக் காண இங்கே க்ளிக் செய்யுங்கள்

சிம்ம க்ரியா எனும் புதிய கருவி

கொரோனா வைரஸ் பெரும்பாலும் சுவாச மண்டலத்தையும் நுரையீரலையும் பாதிக்கக்கூடியது என்று அறியப்படுகிறது. ஒருவர் தனது சுவாச மண்டலத்தையும் நுரையீரல் திறனையும் மேம்படுத்திக்கொள்ளும் விதமாக, சிம்ம க்ரியா எனும் புதிய பயிற்சி ஒன்றை சத்குரு வழங்கினார். இணையம் வழியாக இலவசமாக வழங்கப்படும் இந்த பயிற்சியினை பொதுமக்கள் அனைவருமே பெற்று பலன் பெறலாம்.

கொரோனா சிகிச்சைக்காக ஈஷா மைய வளாகம்

கொரோனா தொற்றுநோய் சிகிச்சைக்காக தேவைப்பட்டால், ஈஷா யோக மைய வளாகத்தை அரசு பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அறிவிப்பினை சத்குரு வழங்கினார்.

சலுகை கட்டணத்தில் ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு

கண்ணுக்குத் தெரியாத எதிரியான வைரஸை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணியாற்றும் சுகாதார மற்றும் மருத்துவ பணியாளர்கள் & காவல்துறையினருக்கு இலவசமாக ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பொதுமக்கள் அனைவருக்கும் 50% சலுகை கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

IYO-Blog-Mid-Banner

கிராமப்புற சமூகங்களைக் காக்க ஈஷாவின் முயற்சிகள்

தொண்டாமுத்தூர் பகுதியின் சுற்று வட்டார கிராமங்கள் பலவற்றிலும் ஈஷா அவுட்ரீச் குழுவினர் வைரஸ் பரவலை தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து பொருளாதார நிலையில் பாதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான பழங்குடி மற்றும் கிராம மக்களுக்கு அன்றாடம் ஊட்டமிக்க உணவு மற்றும் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டும் நிலவேம்பு கசாயத்தை ஈஷா தன்னார்வலர்கள் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

உயிர்க்காக்கும் கருவிகள் வழங்கல்

கொரோனா பரவலைத் தடுப்பதற்காக களப்பணி ஆற்றும் அத்தியாவசிய துறை சார்ந்த அரசுப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் சானிட்டைசர்களை ஈஷா அவுட்ரீச் இலவசமாக வழங்கி வருகிறது.

மருத்துவ வல்லுனர்கள்களுடன் சத்குரு

மே 14ம் தேதியன்று அமெரிக்காவைச் சேர்ந்த Harvard Medical School, Stanford Medicine, UT Health San Antonio MD Anderson Cancer Center, Columbia University Irving Medical Centerஆகிய புகழ்பெற்ற மருத்துவ மையங்களின் மருத்துவ நிபுணர்களுடன் கோவிட் -19 நெருக்கடி காலத்தில் சுகாதாரத்துறை தலைமைகளில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து சத்குரு நேரலையில் கலந்துரையாடினார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தொழில் முனைவோருடன் கலந்துரையாடல்

மே 10 அன்று தொழில்முனைவோருக்கான நுட்பமான வழிகாட்டுதலை வழங்கும் விதமாக "Insights for Entrepreneurs" என்ற தலைப்பில் TiE குளோபல் நிறுவனத்துடன் சத்குரு நேரலையில் கலந்துரையாடினார்.

காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்

கடந்த மே முதல் வாரத்தில், அதிரடி மாற்றங்களையும் முன்னெடுப்புகளை செய்த 2 ஐபிஎஸ் அதிகாரிகளுடன், பேராசிரியர். பர்வீன் சுல்தானா நெறியாளராக பங்கேற்ற கலந்துரையாடலில், இந்த சவாலான சூழ்நிலையில், மக்கள் சந்திக்கும் பல்வேறு சூழ்நிலைகளை பற்றியும், காவல் துறையினர் தங்களை மேம்படுத்திக்கொள்வது பற்றியும் சத்குரு கலந்துரையாடினார்.

சுகாதார & மருத்துவ வல்லுநர்களுடன் சத்குரு

வைரஸ் தொற்றை எதிர்க்கும் போரில் முன்னணியில் இருக்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவிக்கும் விதமாக, கடந்த மே 6ம் தேதி சத்குரு ஆன்லைன் கலந்துரையாடலில் டாக்டர் ரெட்டியின் ஆய்வகங்களின் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் தனது உள்நிலைத் தெளிவுமிக்க கருத்துகளைப் பகிர்ந்துகொள்கிறார்.

மனித ஆற்றல் மேம்பாடு

மே 9 அன்று மாலை 3.30 முதல் 4.30 மணி வரை NHRD Network நிறுவனத்தின் நிர்வாகிகள் மற்றும் வல்லுனர்களுடன் "மனித ஆற்றலை ஆராய்தல்" என்ற தலைப்பில் "சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்" தொடரின் ஒரு பகுதியாக நேரலையில் இணைந்தார்.

கொரோனா நிதிக்காக சத்குருவின் ஓவியம்

ஈஷா அவுட்ரீச்சின் வைரஸைவெல்வோம்(#BeatTheVirus) நிவாரணப் பணிகளுக்கு நிதி திரட்ட உதவும் வகையில், "முழுமையாக வாழ!" என்ற தலைப்பில் சத்குரு வரைந்த ஓவியத்தின் ஏலம், கொடை உள்ளங்கள் வழங்கிய 4.14 கோடி ரூபாய் நன்கொடையுடன் நிறைவுக்கு வந்தது. தற்போது ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடியான சூழலில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சேவையாற்றும் தன்னார்வத் தொண்டர்களுக்கு இந்த தொகை உதவும்.

இந்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் சத்குரு

கடந்த ஏப்ரல் 25ம் தேதியன்று, சவாலான இந்நேரத்தில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களுடன் சத்குரு கலந்துரையாடியபோது, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பல்கலைக் கழகங்களின் பொறுப்பு பற்றியும், மேலும் பல்வேறு அம்சங்கள் பற்றியும் பேசப்பட்டன.

சத்குருவுடன் நடிகர் சந்தானம் கலந்துரையாடல்

கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் கலந்துரையாடலில் இணைந்த நடிகர் சந்தானம் சத்குருவுடன் அவர்கள், கொரோனா தொற்று பரவிவரும் சூழலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிப்பதற்கான ஆலோசனைகள் முதல் மரணம் பற்றிய கேள்விகள், ஈஷா மீதான சர்ச்சைகள் வரை பல்வேறு வகையான கேள்விகளை முன்வைக்க, சத்குரு தனது விரிவான பதில்களை வழங்கினார்.

இந்திய தொழிற்சாலை கூட்டமைப்புடன் சத்குரு

கடந்த ஏப்ரல் 23ம் தேதி, இந்திய தொழிற்சாலைகளின் கூட்டமைப்பான Confederation of Indian Industries ன் உறுப்பினர்களுடன் சத்குரு நேரலையில் இணைந்தார். சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு குறித்தும், இந்தியாவிற்கான வாய்ப்புகள் குறித்தும் இந்நிகழ்வில் கலந்துரையாடப்பட்டன.

சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆரோக்கியம்

கடந்த ஏப்ரல் 19ல், PGI மருத்துவர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்களுடன் இந்த சவாலான நேரத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றான “சுகாதாரப் பணியாளர்களுக்கான ஆரோக்கியம்” என்ற தலைப்பில் சத்குரு இணையத்தில் கலந்துரையாடினார்.

பாரதத்திற்காக ஒளிர்ந்த ஈஷா!

கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாக கோவை ஈஷா யோக மையத்தில் ஏப்ரல் 5 அன்று இரவு 9 மணிக்கு சத்குரு அகல் விளக்கு ஏற்றினார்.

இதையொட்டி, ஈஷாவிலுள்ள ஆசிரமவாசிகள் அனைவரும் தனித்தனியாக அகல் விளக்கு ஏற்றி தங்களின் தேசப்பற்றையும், ஒற்றுமையுணர்வையும் வெளிப்படுத்தினர்.

மேலும், உலக புகழ்பெற்ற ஆதியோகி முன்பும் பிரம்மாண்ட விளக்கு ஏற்றப்பட்டது.