42 நாட்கள் விரதமிருந்து வெள்ளியங்கிரிக்குப் புனிதப் பயணம் மேற்கொண்டுள்ள சிவாங்கா சாதகர்கள், பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஈஷா மையம் நோக்கி நடைபயணத்தை துவங்கியுள்ளனர். அவர்களின் நடைபயண விவரங்களையும், பயணத்தில் கண்ட காட்சிகளையும் இங்கே பதிகிறோம். சிவாங்கா பாத யாத்திரைக் குழுவில் நீங்களும் இணைந்துகொள்ள காத்திருக்கிறது ஒரு வாய்ப்பு. தொடர்ந்து படித்து தெரிந்துகொள்ளுங்கள்!


"சென்னையிலிருந்து கோயமுத்தூர் கிளம்புகிறேன்" என்று சொல்லியவுடன் எதிர்பக்கத்திலிருந்து, "ரயிலா இல்ல பஸ்ஸா" என்ற கேள்விதான் முதலில் வரும். நீங்கள் கொஞ்சம் வசதி படைத்தவராக இருந்தால் "எந்த ஃப்ளைட்" என்று கேட்பார்கள். ரயிலிலோ, பஸ்ஸிலோ அல்லது விமானத்திலோ பயணம் செய்ய வேண்டுமானால் முன்பதிவு செய்திருந்தால் போதும். சிலமணி நேரங்களில் வந்தடைந்து விடலாம். ஆனால், சென்னையிலிருந்து வெள்ளியங்கிரிக்கு நடந்து வரவேண்டுமென்றால் அதற்கு முன்பதிவு தேவையில்லை; ஆழமான பக்தியும், மன உறுதியும் போதும்.

யாத்திரை பற்றி சத்குரு பேசியதிலிருந்து...

"பல விஷயங்களுக்காக மக்கள் பயணம் செய்கிறார்கள். சிலர் தங்கள் தினசரி அலுவல்களில் இருந்தும், சிலர் தங்கள் குடும்பத்தின் தொந்தரவுகளில் இருந்து சிறிது விடுபட வேண்டும் என்றும் பயணம் செய்கிறார்கள். ஆனால் ஒரு புனித யாத்திரையின் நோக்கம் முற்றிலும் வேறுபட்டது. இது எதையோ அடையவேண்டும் என்றோ, எதையோ அறியவேண்டும் என்றோ, எதையோ பெறவேண்டும் என்றோ மேற்கொள்ளப்படுவது அல்ல. யாத்திரை என்பது உங்களைப் பணிவுள்ளவராக மாற்றும் ஒரு செயல்முறை.
2
3

இந்த விரிந்த பிரபஞ்சத்தில் நான் ஒரு தூசி என்று அறிந்துகொள்ளத்தான் இந்த பயணம். நாம் தூசு போன்றவர்தான். ஆனால் விருப்பத்துடன் இருந்தால், இந்த முழு உலகையும் நமக்குள் அடக்கிக் கொள்ளவும் முடியும்.

நீங்கள் உங்களைப் பற்றி மிகவும் பெரிதாக எண்ணிக் கொண்டிருந்தால் ஒரு கொள்ளைக்காரன் போலத்தான் வாழ்க்கை நடத்துவீர்கள். அதேசமயம், ‘நான் எவ்வளவு சிறியவன்’ என்று கவனித்து, நன்றியுணர்வுடன், வாழ்வின் ஒவ்வொரு அடியையும் மென்மையாக எடுத்து வைத்து நடந்தால், உங்கள் வாழ்வே ஒரு புனித யாத்திரையாக இருக்கும்."

சத்குருவின் இந்த வார்த்தைகளைத் தங்கள் அனுபவத்தில் உணர்ந்து பார்த்துவிடும் தீவிரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, தங்கள் நெஞ்சினில், எரியும் நெருப்பாய் பக்தியை ஏந்திக்கொண்டு பாத யாத்திரையாக வெள்ளியங்கிரி நோக்கி புறப்பட்டு விட்டனர் சிவாங்கா சாதகர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!

சென்னையிலிருந்து புறப்பட்டது பாத யாத்திரை குழு

9ஆம் தேதியன்று, சென்னை மாதவரத்திலுள்ள கைலாசநாதர் கோயிலில் சிறப்பு பூஜையை தரிசித்துவிட்டு, ஈஷா யோகா ஆசிரியர்கள் மற்றும் பிரம்மச்சாரிகள் முன்னிலையில் குரு பூஜை செய்தபின் சென்னையைச் சேர்ந்த 14 பேர் வெள்ளியங்கிரி நோக்கி பாத யாத்திரையைத் துவங்கினர். ஒரு நாளைக்கு 30 கி.மீ நடப்பது என்று தங்களுக்குள் இலக்கை நிர்ணயித்துக் கொண்ட இவர்கள், இலக்கில் பாதியைக் கடந்த பின்தான் மதிய உணவை உட்கொள்கின்றனர்.

ஸ்ரீ பெரும்புதூர், காஞ்சிபுரம், செஞ்சி போன்ற ஊர்களின் வழியே நடக்கும் சாதகர்களுக்கு அந்தந்த ஊர்களிலுள்ள தென்கயிலாயப் பேரவையின் தன்னார்வத் தொண்டர்கள் மட்டுமல்லாமல் ஊர்ப் பொதுமக்களும் சிறப்பான வரவேற்பு தருவதோடு, உணவும் வழங்கி உபசரிக்கின்றனர்.

'ஆம் நமச்சிவாய' எனும் மந்திரத்தை உச்சரித்தபடி, கண்களில் பக்தி எனும் நெருப்பு எரிய நடந்து வரும் சிவாங்கா சாதகர்களை காணும் மாத்திரத்தில், ரோட்டில் போகிறவர்களும் கூட வணங்கிச் செல்வதைக் காணும்போது பக்தி செய்யும் அற்புதத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!

அண்ணாமலையார் கோயிலில் சிவாங்காக்கள்!

12ஆம் தேதி, செஞ்சியிலிருந்து புறப்பட்ட சென்னை பாதயாத்திரைக் குழுவினர், பௌர்ணமி நாளான நேற்று (14ஆம் தேதி), திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, பின் மாட வீதியில் வலம் வந்தனர். பின்னர், சேலம் நோக்கி தங்கள் யாத்திரையை மேற்கொண்டுள்ளனர்..

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!

யாத்திரையில் நீங்களும் இணையலாம்!

19ஆம் தேதி, 12 மணியளவில் சேலம் சத்குரு சந்நிதிக்கு வந்து சேரும் சாதகர்களுடன், மேலும் சில சிவாங்கா சாதகர்கள் சங்கமித்து அவர்களுடன் பாதயாத்திரையை மேற்கொள்ளவிருப்பது குறிப்பிடத்தக்கது. பிப்ரவரி 24ம் தேதியன்று, கோவையை வந்தடையும் பாதயாத்திரைக் குழுவினருடன் பீளமேடு மணிமஹாலில் வைத்து கோவையைச் சுற்றுயுள்ள பகுதிகளிலிருந்து வரும் பல சிவாங்கா சாதகர்கள் பாதயாத்திரையில் இணைய உள்ளனர்.

நாகர்கோயிலிலிருந்து பாதயாத்திரைக் குழுவினர்

நாகர்கோயிலிலிருந்து வெள்ளியங்கிரியை நோக்கி 8 சிவாங்கா சாதகர்கள் பிப்ரவரி 12ஆம் தேதியன்று காலை, தங்கள் பாதயாத்திரையைத் துவங்கியுள்ளனர். முதன்முதலாக சென்ற ஆண்டு சிவாங்கா சாதனா மேற்கொண்ட நாகர்கோயிலைச் சேர்ந்த ஐந்துபேர் நடைபயணமாக வெள்ளியங்கிரியை அடைந்து தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். இந்த ஆண்டு அந்த 5 பேருடன் மேலும் மூன்று பேர் இணைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து வரும் சாதகர்களைப் போலவே இவர்களும் தன்னார்வத் தொண்டர்களின் ஊர்களில் தங்கி இளைப்பாறி விட்டு தங்கள் யாத்திரையைத் தொடர்கிறார்கள். திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், திருமங்கலம், ஒட்டஞ்சத்திரம் போன்ற ஊர்களின் வழியே வரும் இவர்களுடன், திருநெல்வேலி, சிவகாசி மற்றும் மதுரையைச் சேர்ந்த மேலும் சில சிவாங்கா சாதகர்கள் வழித்தடத்தில் யாத்திரையில் இணைய உள்ளனர்.

உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!
உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!உங்கள் ஊர் வழியே வரும் சிவாங்காக்கள்!

24ஆம் தேதியன்று கோவையில் சென்னை யாத்திரைக் குழுவினரும் நாகர்கோயில் சிவாங்காக்களும் சங்கமிக்க தன்னார்வத்தொண்டர்களால் சிறப்பு வரவேற்பு வழங்கப்பட உள்ளது.

சென்னை பாதயாத்திரைக் குழுவினருடன் அல்லது நாகர்கோயில் குழுவினருடன் பாத யாத்திரையில் நீங்களும் இணைய உங்களுக்கு விருப்பமிருந்தால் 8300015111 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இந்தத் தகவலை SMS, facebook போன்ற ஊடகங்களின் வழியே அனைவரும் பகிர்ந்துகொள்ளுங்கள்.