உங்க நிலம் சும்மா கிடக்குதா?
'பின்னால் உதவும்' என்று நாம் வாங்கிப் போட்டிருக்கும் ரியல் எஸ்ட்டேட் நிலங்கள், ஏன் இன்று சும்மா கிடக்க வேண்டும். சும்மா கிடக்கும் அந்த நிலங்களை உபயோகமான வகையில் பயன்படுத்துவது எப்படி என்று இங்கே அலசுகிறோம். உங்க கிட்ட ஏதாவது நிலம் சும்மா கிடக்குதா? இங்கே சில வழிகள் காத்திருக்கின்றன.
 
 

'பின்னால் உதவும்' என்று நாம் வாங்கிப் போட்டிருக்கும் ரியல் எஸ்ட்டேட் நிலங்கள், ஏன் இன்று சும்மா கிடக்க வேண்டும். சும்மா கிடக்கும் அந்த நிலங்களை உபயோகமான வகையில் பயன்படுத்துவது எப்படி என்று இங்கே அலசுகிறோம். உங்க கிட்ட ஏதாவது நிலம் சும்மா கிடக்குதா? இங்கே சில வழிகள் காத்திருக்கின்றன.

"சும்மா கிடந்த நிலத்தை கொத்தி; சோம்பல் இல்லாம ஏர் நடத்தி..." இந்த திரைப்படப் பாடல் விவசாயத்தின் அருமைகளையும் விவசாயிகளின் பாடுகளையும் பதிவு செய்யும் அழகான ஒரு பாடல். ஆனால் இன்றோ, விவசாயத்தின் நிலையும் விவசாயிகளின் நிலையும் கவலைக்கிடமான ஒரு சூழலில் உள்ளது.

ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டு வருடக் கணக்கில் தரிசாகக் உறங்கிக் கொண்டு கிடக்கும் உங்கள் ப்ளாட்களில் ஒரு ஆழ்துளை (Bore) கிணற்றை உருவாக்க வேண்டும்.

பெரிய பெரிய விவசாயக் குடும்பங்கள் பல, தங்கள் நிலங்களை ரியல் எஸ்டேட்காரர்களிடம் விற்று விட்டு நகரத்திற்கு நகர்ந்துவிட்ட நிலையில், இப்போது கலர் கலர் கொடிகள் ஒய்யாரமாய் பறந்தபடி, ஆங்காங்கே நடுகல்கள் முளைத்திருக்க, தரிசாய்க் கிடக்கின்றன பல ஹெக்டேர் விவசாய நிலங்கள்.

மழையில்லை; விலையில்லை; வருமானம் கட்டுபடியாகவில்லை எனப் பல்வேறு காரணங்களைச் சொல்லும் விவசாயிகள், அதுவரை அள்ளித் தந்த பூமியை தங்கள் சூழ்நிலை காரணமாக அரை மனதுடன் விற்று விடுகிறார்கள். வாங்கிப் போட்டால் பின்னால் நல்ல விலைபோகும் என்ற நோக்கத்துடன் மக்கள் அந்நிலங்களை சொத்துக்களாக வாங்கி வைத்துக்கொள்கின்றனர். இந்நிலை தொடர்ந்தால் பசுமை பூமியைப் பார்ப்பதென்பது நிறைவேறாக் கனவாகவே போய்விடும்.

நீங்கள் நினைத்தால் இதைச் செய்யலாம்!

இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் விவசாய நிலம் என்பது அரிதான காட்சிப் பொருளாக ஆகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. 'அப்படியானால் இந்நிலையை மாற்ற என்ன செய்ய வேண்டும்?!' இந்தக் கேள்வி உங்களுக்குள் எழுந்தால் இங்கே ஒரு வழி சொல்கிறோம்; செயல்படுத்திப் பாருங்கள். நீங்கள் நினைத்தால் இந்நிலையை நிச்சயம் மாற்ற முடியும்.
1
ரியல் எஸ்டேட்காரர்களிடமிருந்து வாங்கப்பட்டு வருடக் கணக்கில் தரிசாக உறங்கிக் கொண்டு கிடக்கும் உங்கள் ப்ளாட்களில் ஒரு ஆழ்துளை (Bore) கிணற்றை உருவாக்க வேண்டும். இதுவே இந்த செயல்திட்டத்தின் பெரிய ஒரு படி. இதை நீங்கள் மனது வைத்து செய்துவிட்டால் அதன் பின் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பது ஒன்றும் பெரிய வேலையில்லை. சொட்டு நீர் பாசனம் செய்துவிட்டால் மரம் தானாக வளர்ந்து விடும். 'சரி! இதை ஏன் நான் செய்ய வேண்டும்? இதனால் எனக்கென்ன பயன்?' இந்தக் கேள்வி எழுவதை இந்த இடத்தில் தவிர்க்க முடியாது.

உங்கள் நிலத்தில் நிலத்தடி நீர் இல்லையென்றாலும் கூட நிலத்தை சும்மா போட தேவையில்லை. வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை நட்டுவிடலாம்.

10 வருடங்கள் கழித்து வீடுகட்டலாம்; பிள்ளைகள் காலத்தில் அவர்களுக்கு உதவும்; சும்மா கிடக்கட்டும் பிறகாலத்தில் நல்ல விலைபோகும், இப்படி காரணங்களைச் சொல்லிக் கொண்டு எப்படியும் உங்கள் நிலங்களை சும்மா போட்டிருப்பதற்குப் பதிலாக, அந்த 10 வருடத்திற்குள் அல்லது அதற்கும் குறைவான வருடத்திற்குள்ளோ கூட பல லட்சங்களில் நீங்கள் வருமானம் பெற்று விடமுடியும்.

ஏட்டுச் சுரைக்காய் இல்லை இது!

'இதெல்லாம் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதாவது. நிலத்தில் தண்ணீர் இல்லையென்றால் என்ன செய்வது? கேட்பதற்கு நல்லாயிருக்கு, ஆனா நடைமுறையில சாத்தியமாகாது.' இதுபோன்ற எதிர்மறை சிந்தனைகள் உங்களுக்கு இருந்தால், அது தேவையில்லாதது. உங்கள் நிலத்தில் நிலத்தடி நீர் இல்லையென்றாலும் கூட நிலத்தை சும்மா போட தேவையில்லை. வறட்சியைத் தாங்கும் மரங்களான வேம்பு, நாட்டுவாகை, பூவரசு போன்ற மரங்களை நட்டுவிடலாம். தண்ணீர் வசதி இருக்கும் பட்சத்தில் அதற்கு ஏற்றாற் போல மலை வேம்பு, செஞ்சந்தனம், தேக்கு, போன்ற வகை மரக்கன்றுகளை நட்டு சில வருடங்களில் நல்ல வருமானம் பெறமுடியும்.


மரக்கன்றுகளோடு ஆலோசனைகளும் கிடைக்கும்

ஒரு வழியாக மரக்கன்றுகள் நட்டு விடலாம் என்ற முடிவுக்கு நீங்கள் வந்துவிட்டால், மரக்கன்றுகளை எங்கே பெறுவது என்பதுதான் அடுத்த கேள்வியாக இருக்கும். உங்கள் நிலத்திற்கு ஏற்ற மரக்கன்றுகளை ஈஷா பசுமைக் கரங்களின் நாற்றுப்பண்ணைகளிலிருந்து மிகக் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள முடியும்.
2
ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் மூலம், தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை உருவாக்கியுள்ளது. எளிதில் வளரக்கூடிய செண்பகம், மகிழம், மந்தாரை, ஜக்ரண்டா, அவலாண்டா, லகஸ்ட்ரோமியா போன்ற அழகிய வண்ணப்பூக்கள் பூக்கும் மரக்கன்றுகள் மற்றும் பலா, எலுமிச்சை, நாவல் போன்ற பழ மரக்கன்றுகளும் ஈஷா நாற்றுப்பண்ணைகளில் இதற்காகப் பிரத்யேகமாக தயார் செய்து தரப்படுகிறது. புங்கன், வாகை, தேக்கு, கல்தேக்கு, செஞ்சந்தனம் மற்றும் மலைவேம்பு போன்ற மரப்பயிர் வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவையனைத்தும் மிகக் குறைந்த விலையில் (ரூ.5) விநியோகம் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
3
உங்கள் ஊரின் அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், மரம் நடுதல் தொடர்பான வழிகாட்டுதல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். தொ. பே. 94425 90062

 
 
 
 
Login / to join the conversation1
 
 
4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

I am resident of Tirunelveli. Where can I get the seedlings? Please give the address of the nearest Nursery.

4 வருடங்கள் 5 மாதங்கள் க்கு முன்னர்

reach us through 94425 90062 mentioned mobile number