ஆப்பிரிக்க நாடுகளுக்கு பயணமாகியுள்ள சத்குரு, உகாண்டாவில் கலந்துகொண்ட கலந்துரையாடல் நிகழ்ச்சி குறித்தும், ஈஷாவில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு பயிற்சி வகுப்பு குறித்தும் சில வரிகள்!

உகாண்டாவில் சத்குரு

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆப்பிரிக்க நாடுகளில் ஈஷா வகுப்புகள் 2008 முதல் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 2011ல் முதல்முறையாக உகாண்டாவில் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பு நிகழ்ந்தது. இந்த ஆண்டு மாபெரும் ஈஷா அலை ஆப்பிரிக்க நாடுகளை அரவணைக்கும் விதமாக, சத்குரு நேரடியாக வழங்கும் இன்னர் இஞ்சினியரிங் வகுப்பும், ஞானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளும் அமையவிருக்கின்றன. ‘சத்குரு பள்ளி’ துவக்கவிழா மற்றும் நன்கொடை திரட்டுவதற்கான கோல்ஃப் விளையாட்டு என பல்வேறு நிகழ்ச்சிகளில் சத்குரு அவர்கள் கலந்துகொள்கிறார். ஜூன் 12ஆம் தேதியன்று உகாண்டாவிலுள்ள கம்பளாவில் சத்குரு அவர்கள் ஆலன் குசாஜா (Alan Kasujja, Kampala) அவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

BBC உலக சேவையின் நிகழ்ச்சி தொகுப்பாளரும் பத்திரிக்கையாளருமான ஆலன் குசாஜா அவர்கள் உகாண்டாவின் எதிர்காலம், மக்களின் எதிர்காலம், வணிக எதிகாலம் என பல்வேறு கோணங்களில் சத்குருவுடன் கலந்துரையாடினார்.

ஈஷாவில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

அரசுப்பள்ளி வகுப்பறைகளை மகிழ்ச்சியானதாகவும், செயல்திறன் மிக்கதாகவும், மாணவர்கள் விரும்பும் வகையில் அமைக்கும் நோக்கிலும் ஈஷா அறக்கட்டளை அரசுப் பள்ளிகளை தத்தெடுத்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பலவித சிறப்பு பயிற்சிகளை தொடர்ந்து வழங்கிவருகிறது.

இதன் ஒரு பகுதியாக அரசு ஆசிரியர்களுக்கான 5 நாள் சிறப்பு பயிற்சி வகுப்பு ஜூன் 7-11 வரை ஈஷா யோக மையத்தில் நடைப்பெற்றது. கற்பித்தலை ஒரு இனிய அனுபவமாக மாற்றும் நோக்கத்தோடு 32 மாவட்ட பள்ளி ஆசிரியர்களில் குறிப்பிட்ட, ஆர்வமுள்ள, தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க வாய்ப்பளிக்கப்பட்டார்கள். கோவை தலைமை கல்வி அலுவலர் திரு நா.ஆறுமுகம் இப்பயிற்சியினை துவக்கி வைத்தார், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.முத்து மாணிக்கம் வாழ்த்துரை வழங்கினார்.

இப்பயிற்சியில் பங்குபெற்ற ஒரு ஆசிரியரின் அனுபவம்!

"நான் இதுவரை கண்டிராத புதுமையான, வித்தியாசமான பயிற்சி. ஈஷா வித்யா பள்ளிக்கு சென்றபோது விதிகளை ஆசிரியர்கள் உருவாக்காமல் மாணவர்களே உருவாக்கி உள்ளதை கண்டேன், குழந்தை மைய கல்வி என்றால் என்ன என்பதை நேரடியாக உணர முடிந்தது" - பி. ராசன், தர்மபுரி மாவட்டம்