தமிழகம் முழுக்க உயிர்நோக்கம்...
சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்ற "ஈஷா உயிர்நோக்கம்" வகுப்பு இப்போது தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நிகழவுள்ளது. இந்நிகழ்ச்சி இதுவரை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...
 
 

சென்னை, கோவை மற்றும் திருச்சி மாநகரங்களில் பெரும் வரவேற்பை பெற்ற "ஈஷா உயிர்நோக்கம்" வகுப்பு இப்போது தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களில் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி நிகழவுள்ளது. இந்நிகழ்ச்சி இதுவரை ஏற்படுத்திய தாக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்...

சென்னையில்...

பூ மலர்ந்தது... கதிரவனின் கதகதப்பை உடல் உணர்ந்தது... தென்றல் தீண்டியது... மண் சுடுகின்றது... மழைத் துளி கண்டு மனம் மயங்குகிறது... "அட! இதுல என்னப்பா அதிசயம் பாத்துட்டீங்க? இது தினசரி நடக்கிறது தானே! இதெல்லாம் புதுசா கண்டுபிடிச்சதா என்ன?" என்று நீங்க யோசிக்கிறது புரியுதுங்க...

இது வேறெங்கையோ நடக்கல, சகமனுஷனோட முகம் கூடப் பாக்காம, அதிக வேலைப் பளுவுடன் இயங்கிகொண்டிருக்குற சென்னை மக்களோட இதயத்துலேயும் மனசுலேயும் நடந்த சின்ன மாற்றம் இது. என்ன ஒரே புதிரா இருக்கேனு பாக்குறீங்களா? இது சத்குரு அவங்களால ஜுலை மாசம் சென்னையில துவக்கப்பட்டு, ஆகஸ்ட் மாசம் தமிழகம் முழுக்க அர்ப்பணிக்கப்பட்ட "ஈஷா உயிர்நோக்கம்" யோகா கிளாஸோட தாக்கம்.

ஜூலை 18ம் தேதி, சென்னைல 14 நிகழ்ச்சிகளோடு தொடங்கி, அப்பார்ட்மென்ட், வீட்டுக் கூடங்கள், அலுவலகம்னு பல இடங்கள்ல இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டாச்சு. சென்னையில மட்டும், இதுவரை சுமார் 53 உயிர்நோக்கம் நிகழ்ச்சிகள் நடந்து முடிஞ்சிருக்கு. ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றிருக்காங்க.

எளிமையான பயிற்சிகள்தான், ஆனா இந்த க்ளாசுல சொல்லிக் கொடுக்கிற பல அம்சங்கள் மக்கள் மனசுல மாற்றத்தை ஏற்படுத்துது. ஆகாயமே பார்க்காமல் வீடு, கார், அடுக்குமாடி அலுவலகம்னு கண்ணாடிக்குள்ளேயே வாழ்ந்து வந்த சென்னை மக்கள், "ஈஷா உயிர்நோக்கம்" வகுப்புல சொல்லிக் கொடுத்த ஒரு பயிற்சிப்படி, மூன்றே நாட்கள்ல ஆகாயம் பார்த்து வணங்குறாங்க. மூன்றே நாட்கள்ல புதுசா பொறந்த மாதிரி இந்த உடம்பு இருக்குன்னு சொல்றாங்க.

அனுபவங்கள்...

இந்த க்ளாசுல பங்கு பெற்றவர்களோட அனுபவம்லாம் ஆச்சரியமா இருக்கு. "மூன்று நாட்கள்ல மூட்டுவலி பறந்து போச்சு, இது எப்படி நடந்ததுன்னே தெரியல" என்றும் "தீவிரமான செயல் செஞ்சாலும் மனசு நிதானமாவும் அமைதியாவும் இருக்குன்னு" இன்னொருத்தரும் சொன்னாங்க.

இதுமாதிரி ஆச்சரியமும் அதிசயமும் நிறைஞ்ச பல அனுபவங்கள் ஆயிரக்கணக்கான மக்களோட வாழ்க்கைல நடக்க ஆரம்பிச்சிருக்கு, அது பல லட்சம் மக்களோட வாழ்க்கைல தாக்கம் ஏற்படுத்தும்கிறதுல சந்தேகமே இல்லை.

உயிர்நோக்கத்தில் உருவாகியிருக்கும் ஆனந்தப் பேரலையோட தொடக்கம் மட்டுமே இது...


ஒவ்வொரு மனிதனும் தெய்வமாய் பரிணமிக்கும் யோக அறிவியலின் சாரலில் உருவாகியிருக்கிறது, ஈஷாவின் 3 நாள் "உயிர்நோக்கம்" வகுப்பு. இவ்வகுப்பில் மிக எளிய பயிற்சிகள் கற்றுத் தரப்படுகின்றன. நம் நகர வாழ்வின் பரபரப்பிலிருந்து சற்றே நம்மை ஆயாசப்படுத்திக் கொள்ள, உடல்நலன் பேண, மன அழுத்தத்திலிருந்து விடுபட, நல்வாழ்வு பெற... ஈஷா உயிர்நோக்கம் யோக வகுப்பு, உங்கள் வீட்டிற்கு அருகாமையில் நடைபெறுகிறது.

இப்பயிற்சி 3 நாட்களில், தினமும் வெறும் இரண்டே மணி நேரத்தில் சொல்லித் தரப்படுகிறது. உங்கள் சொந்தம்-பந்தம், உற்றார்-உறவினர், தெரிந்தவர்-தெரியாதவர் என அனைத்து தரப்பினரும் இதனை கற்றுக் கொள்ள வழி அமைத்துக் கொடுங்கள்.

சென்னை, கோவை, திருச்சி நகரங்களைத் தொடர்ந்து ஈஷாவின் வடக்கு மற்றும் தென் மண்டல நகரங்களில் ஆகஸ்ட் 29ம் தேதி கால்பதிக்கவிருக்கிறது உயிர்நோக்கம் வகுப்பு...

இடம் நேரம் தொடர்புக்கு
ஆரணி மாலை 6 மணி 9500256767
ஆற்காடு மாலை 3.30 மணி 7708368246
காஞ்சிபுரம் மாலை 6 மணி 9444438241
பாண்டிச்சேரி காலை 6.30, மாலை 6.30 மணி 9894780050
திருவண்ணாமலை மாலை 4 மணி, மாலை 7 மணி 9486946961
வேலூர் காலை 7 மணி, மாலை 3.30 மணி 9600836158
விழுப்புரம் காலை 6 மணி, மாலை 6 மணி 9976394409
திருநெல்வேலி மாலை 6 மணி 9965876005
நாகர்கோவில் காலை 6.30, மாலை 6.30 மணி 09446567856
தென்காசி மாலை 6 மணி 9443350924
தேனி மாலை 6 மணி 9942052222
மதுரை பிபி குளம் காலை 6.30, மாலை 6.30 மணி 9843258185
உடுமலை மாலை 6 மணி 9865553454
திண்டுக்கல் மாலை 6.30 மணி 9080784780
தூத்துக்குடி மாலை 6.30 மணி 9443326689
இராஜபாளையம் மாலை 6 மணி 9150422445
இராமநாதபுரம் மாலை 6 மணி 9940968571
வேலாயுதம்பாளையம் மாலை 6 மணி 9524155629
காரைக்குடி மாலை 6 மணி 9487895013
கரூர் மாலை 6 மணி 9361515151
சுரண்டை மாலை 7 மணி 9626346744
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1