இங்கே நாம் குறிப்பிடும் இந்த இளைஞரைப் போலவே ஒவ்வொரு இளைஞரும் முயன்றுவிட்டால், பின் பசுமையான இந்தியா என்பது வெறும் பேச்சாக மட்டும் இருக்காது, அது நிஜமாகிவிடும்! அந்த இளைஞர் மேற்கொண்ட முயற்சியைப் பற்றி நீங்களும் படித்து அறிந்துகொள்ளுங்கள்!

ஒரு ஸ்வீடன் வாழ் இளைஞராக இருந்த திரு.ஸ்ரீஹரி அம்புலுரி அவர்கள், ஹைதராபாத்திற்கு அருகிலுள்ள தனது கிராமத்தை வளமாக்கும் முனைப்புடன், ஸ்வீடனில் மேற்கொண்ட பொறியியல் பணியை புறந்தள்ளிவிட்டு இந்தியாவில் தற்போது குடியேறியுள்ளார்.

ஸ்ரீஹரி தனது கிராமத்தில் 600 மரக்கன்றுகளை நடும் திட்டத்தை செயல்படுத்த எண்ணினார். இந்த சவாலான பணியில், கிராம பெரியவரான ஸ்ரீஹரியின் மாமா திரு.பெத்த பாபு அவர்கள், கிராம மக்களுக்கு வழிகாட்டியாக இருந்து, அந்த மரம்நடும் கொண்டாட்டத்தில் அனைவரையும் ஈடுபடச்செய்தார்.

சென்னை மனப்பாக்கம் L&T வளாகத்தில் அமைந்துள்ள ஈஷா நாற்றுப் பண்ணையில்தான் அவர்கள் அதற்கான மரக்கன்றுகளைப் பெற்றுச் சென்றனர். சென்னை L&T நிறுவனத்தின் CSR தலைவர் திரு. ரமணன் அவர்கள் இதைப் பற்றி கூறுகையில், ‘உங்களால் இவ்வளவு எளிதாக ஒரு நிறுவன வளாகத்தில் எப்படி ஒரு நாற்றுப்பண்ணையை உருவாக்கிட முடிந்தது?’ என வியப்பாக என்னிடம் கேட்ட அந்த கிராம மக்களிடம் நான் சொன்னேன், ‘நாங்கள் ஈஷா பசுமைக் கரங்களிடம் கற்றுக்கொண்டோம்’ என்று!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.