சுவையும் சத்துமிக்க மரவள்ளிக்கிழங்கு அடை ரெசிபி!

நம்மூர்களில் பலராலும் பெரிதும் விரும்பப்படும் ஒரு கிழங்கு வகையான மரவள்ளிக்கிழங்கைக் கொண்டு அடை தோசை செய்யும் செய்முறை உங்களுக்காக!
 

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - 1/4 கிலோ
பச்சரிசி - 1/4 கிலோ
மரவள்ளிக்கிழங்கு - 1/2 கிலோ
வெல்லம் - 1/2 கிலோ
உப்பு - சிறிதளவு

செய்முறை: புழுங்கல் அரிசி, பச்சரிசி இரண்டையும் சேர்த்து ஊறவைத்து அரைக்கவும். அதில் மரவள்ளிக்கிழங்கையும் தோல் நீக்கி பொடியாக நறுக்கி போட்டு, உப்பு சேர்த்து அரைக்கவும். அந்த மாவில் வெல்லத்தை நுணுக்கி போட்டு நன்கு கலந்து தோசைக்கல்லில் வார்த்து எடுக்கவும்.