சுவையும் சத்தும் மிக்க சாலட் - சாப்பிட ரெடியா?!
பாலக் சாலட் மற்றும் வெள்ளரிக்காய் பயறு சாலட்
 
சுவையும் சத்தும் மிக்க சாலட் - சாப்பிட ரெடியா?!, Suvaiyum sathum mikka salad - sappida readya?
 

ஈஷா ருசி

பாலக் சாலட்

தேவையான பொருட்கள்:

பாலக் கீரை - 1 கட்டு (தண்டு நீக்கியது)
காளான் - 1 பாக்கெட்
வெள்ளரிக்காய் - 2
ஆப்பிள் - 2
தக்காளி - 2

டிரஸ்ஸிங் செய்வதற்கு

ஆலிவ் எண்ணெய் - 1 ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - சிறிதளவு
மிளகுத் தூள் - கால் டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

காளானை சிறு துண்டுகளாக நறுக்கி வெறும் வாணலியில் சிறிதுநேரம் வதக்கிக்கொள்ள வேண்டும். காய்கறி, பழம், கீரை, அனைத்தையும் கழுவி, சிறியதாக நறுக்கி, அனைத்தையும் ஒன்றாக கலந்துகொள்ள வேண்டும். ஆலிவ் எண்ணெய், எலுமிச்சைச்சாறு, மிளகுத்தூள், உப்பு அனைத்தையும் சேர்த்து நைசாக அரைத்து காய்கறி கலவையில் சேர்த்து நன்கு கலந்து பரிமாறவும்.

வெள்ளரிக்காய் பயறு சாலட்

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2
தட்டப்பயிறு - 50 கிராம்
ஆப்பிள் தக்காளி - 1
குடை மிளகாய் - 1
உப்பு - தேவைக்கேற்ப
மிளகு - தேவைக்கேற்ப
எலுமிச்சம்பழ சாறு - தேவைக்கேற்ப
தேங்காய்ப்பூ - சிறிதளவு

செய்முறை:

தட்டப்பயிரை வேகவைத்துக் கொள்ளவும். வெள்ளிரிக்காய், ஆப்பிள் தக்காளி, குடை மிளகாய் இவற்றை சிறியதாக, சதுரமாக வெட்டிக் கொள்ளவும். வேகவைத்த பயிறுடன், நறுக்கிய வெள்ளரி, தக்காளி, குடை மிளகாய், தேங்காய்ப்பூ ஆகியவற்றுடன் உப்பு, மிளகு தூள், எலுமிச்சம்பழ சாற்றை சேர்த்து கலந்து பரிமாறலாம்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1