சுவையான பிரெட் கட்லெட்... செய்வது எப்படி?
கட்லெட் பிரியர்களின் பட்டியலில் சத்தும் சுவையும் மிக்க இந்த ‘பிரெட் கட்லெட்’ நிச்சயம் இடம்பிடிக்கும்! படித்துப் பாருங்கள், செய்து சுவையுங்கள்!
 
 

ஈஷா ருசி

கட்லெட் பிரியர்களின் பட்டியலில் சத்தும் சுவையும் மிக்க இந்த ‘பிரெட் கட்லெட்’ நிச்சயம் இடம்பிடிக்கும்! படித்துப் பாருங்கள், செய்து சுவையுங்கள்!

பிரெட் கட்லெட்

தேவையான பொருட்கள்:

பிரட் - 4 துண்டு
தயிர் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2
கொத்தமல்லி தழை - சிறிதளவு
வெந்தைய கீரை - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
வறுத்த கடலை - 1 கைப்பிடி
கார்ன்பிளவர் மாவு - 3 ஸ்பூன்
பட்டர் (அ) சீஸ் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை:

பிரட்டை தயிரில் ஊறவைக்க வேண்டும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ள வேண்டும். அதில் பிரட்டை சேர்த்து பிசைய வேண்டும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை, வெந்தையக் கீரை, இஞ்சி, மிளகாய்த்தூள், தனியாத்தூள், வறுத்த கடலை, கார்ன்பிளவர் மாவு, பட்டர் (அ) சீஸ், உப்பு அனைத்தையும் சேர்த்து கிளறி கட்லெட் வடிவத்தில் தட்டிப் பொரித்து எடுக்க வேண்டும்.

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1