சுவை மிகுந்த பணியார வகைகள்...
நம் வீடுகளில் "பணியாரம்" என்ற உணவிற்கு ஒரு தனி இடமுண்டு. அந்தப் பணியாரத்தை இன்னும் விதவிதமாகவும், சுவையாகவும் நீங்கள் தயாரித்து உண்பதற்காக இதோ 3 வகையான பணியாரங்கள் இங்கே உங்களுக்காக...
ஈஷா ருசி
நம் வீடுகளில் "பணியாரம்" என்ற உணவிற்கு ஒரு தனி இடமுண்டு. அந்தப் பணியாரத்தை இன்னும் விதவிதமாகவும், சுவையாகவும் நீங்கள் தயாரித்து உண்பதற்காக இதோ 3 வகையான பணியாரங்கள் இங்கே உங்களுக்காக...
சோள பணியாரம்
Subscribe
சோள அரிசி - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்
செய்முறை: முதல் நாள் இரவு சோள அரிசி, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து + வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.
வெஜிடபுள் பணியாரம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 1 கிலோ
உளுந்து - 1/4 கிலோ
கேரட் - 1 கப்
தேங்காய் - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
முட்டைக்கோஸ் - 1 கப்
கருவேப்பிலை, கொத்தமல்லி, புதினா - 1 கப் (சிறியதாக கட் செய்தது)
தாளிதம் : கடுகு, உளுந்தப்பருப்பு
செய்முறை: பச்சரிசியில் வெந்தயம் போட்டு ஊற வைத்து அரைக்கவும். பிறகு உளுந்தப்பருப்பையும் அரைத்து இரண்டையும் உப்பு போட்டு கரைத்து வைத்துக் கொள்ளவும். மறுநாள் காலை கேரட், முட்டைக்கோஸ், தேங்காய் மற்றும் தாளிதம் போட்டு கரைத்து பணியாரமாக ஊற்றலாம்.
பாசிப்பயிறு பணியாரம்
தேவையான பொருட்கள்:
பாசி பயிறு - 200 கிராம்
புழுங்கல் அரிசி - 50 கிராம்
உளுந்து, வெந்தயம் - 25 கிராம்
செய்முறை: முதல் நாள் இரவு பாசி பயிறு, புழுங்கல் அரிசி, மற்றும் உளுந்து+வெந்தயம் தனித்தனியாக இம்மூன்றையும் ஊற வைத்துக் கொள்ளவும். காலையில் தனித்தனியாக கரகரப்பாக அரைத்து ஒன்றாக கலக்கி பணியாரமாக ஊற்றி எடுக்கலாம்.