சிதார் இசைக்கருவியின் இன்னிசையில் மூழ்கிய ஐந்தாம் நாள் யக்ஷா திருவிழாத் தருணங்களின் தொகுப்பு இங்கே!

மாலைநேர ராகமான 'ஜீன் ஜோட்டி' ராகத்துடன் நிகழ்ச்சியைத் தொடங்கிய திரு.குஷால்தாஸ் அவர்கள் தொடர்ந்து பல மனதை மயக்கும் ராகங்களில் சிதார் நரம்புகளை மீட்டினார். ஹிந்துஸ்தானி இசையை, ராகங்களின் பெயர்களைக் கூறிவிட்டு, சிதார் கம்பிகளை குஷால்தாஸ் அவர்கள் மீட்ட மீட்ட, அங்கிருந்த அனைவரின் இதயங்களும் கூடவே மீட்டப்பட்டது. கோட்டோர் இதயத்தை இசையால் நிறைத்த அந்த அருமையான சிதார் இசைநிகழ்ச்சியைத் தொடர்ந்து, லிங்கபைரவி தேவி உற்சவ மூர்த்தியின் ஊர்வலம் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

நிகழ்ச்சியின் நிறைவில் இசைக்குழுவினருக்கு சத்குரு அவர்கள் மலர் கொடுத்து ஆசி வழங்கினார்.

யக்ஷாவைப் பற்றி அறிய

திரு. குஷால்தாஸ் அவர்களின் சிறப்புகள்

குஷால் ஏழு வயதில் இருந்தே தனது இசைப் பயணத்தை தொடங்கினார். இவர் புகழ் பெற்ற சிதார் மேஸ்ட்ரோ சஞ்சய் பாண்டோபாத்யாய் அவர்களின் கீழ் தீவிர சிதார் இசைப் பயிற்சி பெற்று, சிதார் இசைக் கலைகளின் நுட்பங்களில் தேர்ந்தார். தனது தேர்ந்த இசை நுட்பங்களின் வாயிலாக இசையமைக்கும் கலையை கைவரப்பெற்றார். இவர் பெரிய இசை மேதைகளான பண்டிட் மானாஸ் சக்ரவர்த்தி, பண்டிட் ராமகிருஷ்ண பாஸ் மற்றும் மறைந்த பண்டிட் அஜோய் சின்ஹாராய் ஆகியோரிடமிருந்து இசை பயின்ற பெருமைக்கு உரியவர். இசை குறித்த இவரது ஆழமான புரிதல் மற்றும் ராகங்களில் இவர் கொண்டுள்ள ஆழமான அறிவு ஆகிய அம்சங்கள் இவரை பாரம்பாரிய இசைக்கருவிகள் இசைக்கும் தலைசிறந்த கலைஞர்களில் ஒருவராக நிலைநிறுத்தியுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.