சிங்கப்பூரில் சத்குரு நிகழ்ச்சிகள்
கடந்த வாரத்தில் நிகழ்ந்த ஈஷா நிகழ்வுகளின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே!
 
சிங்கப்பூரில் சத்குரு நிகழ்ச்சிகள், Singaporil sadhguru nigazhchigal
 

கடந்த வாரத்தில் நிகழ்ந்த ஈஷா நிகழ்வுகளின் சில சுவாரஸ்ய துளிகள் இங்கே!

சிங்கப்பூரில் சத்குரு நிகழ்ச்சிகள்

சிங்கப்பூரில் நிகழ்ந்த IIMpact-Talk என்ற உரையாடல் நிகழ்ச்சியில் சத்குரு கலந்துகொண்டு சிறப்பித்தார். மேலும், சிங்கப்பூரில் ஷாம்பவி மஹாமுத்ரா வகுப்பிற்கான தீட்சையை நூற்றுக்கணக்கானோருக்கு நேரடியாக வழங்கினார்.

சீன வர்த்தக தலைவர்கள் உரையாடல்

சீனர்களை வெகுவாக ஈர்த்துவரும் ஈஷா யோகா வகுப்புகளில் மொழிபெயர்ப்புக்கென பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சமீபத்தில் சீன வர்த்தக தலைவர்களுடன்(Chinese Business Leaders) சத்குரு கலந்துரையாடினார்.

ஞானியுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி

பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா, திரு.ராகேஷ் ஓம் பிரகாஷ், திரு.சஞ்சீவ் சன்யால் ஆகியோர் ‘ஞானியுடன் கலந்துரையாடல்’ (Inconversation with the Mystic) என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, வெவ்வேறு தலைப்புகளில் சத்குருவுடன் கலந்துரையாடினர். வெகு சுவாரஸ்யமாக அமைந்த இந்த நிகழ்ச்சிகளை பலர் கண்டுகளித்தனர்.

சத்குருவுடன் ஒரு மாலைப்பொழுது

சத்குருவுடன் ஒரு மாலைப்பொழுது (An Evening with the Mystic) நிகழ்ச்சி சூரத் மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கானோர் சத்குருவின் உரையைக் கேட்க ஆர்வமுடன் கலந்துகொண்டதோடு, சத்குருவின் அருள்பெற்றுச் சென்றனர்.

ஈஷா வித்யாவில் புதிய வகுப்பறைகள் திறப்பு

ஈஷா வித்யாவில் புதிய வகுப்பறைகள் திறப்பு

ஈஷா வித்யாவில் புதிய வகுப்பறைகள் திறப்பு

ஏசியன் பெயின்ட்ஸ் (Asian Paints) நிறுவனத்தின் நன்கொடையின் பேரில், புதிதாகக் கட்டப்பட்ட இரண்டு புதிய வகுப்பறைகள் கடலூர் ஈஷா வித்யாவில் திறக்கப்பட்டன. ஏசியன் பெயின்ட்ஸின் பொதுமேலாளர் திரு. துளசீதரன் நாயர் அவர்கள் ஏப்ரல் 13ஆம் தேதியன்று வகுப்பறைகளைத் திறந்து வைத்து சிறப்பித்தார்.

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1