ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் சத்குரு

இந்திய ஆட்சிப் பணியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சத்குருவுடன் இணையம் வாயிலாகத் தொடர்புகொண்டு, துறையில் தாங்கள் எதிர்கொள்ளும் சிக்கலான சூழல்கள் முதல், தேசத்தைக் கட்டமைப்பதில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பங்கு என்ன என்பது வரை, பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர்.

ஒருமித்த கருத்துகொண்ட உலகளாவிய மருத்துவ குழுவுடன் சத்குரு

கடந்த ஜூன் முதல் வாரத்தில் Global Medical Fraternity with Sadhguru in Challenging Times என்ற தலைப்பில், ஒருமித்த கருத்துகொண்ட உலகளாவிய மருத்துவ குழுவில் உலகெங்கும் இருக்கும் மூத்த மருத்துவ நிபுணர்கள், கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் சமூகத்தில் நிலவும் உளவியல் ரீதியான சிக்கல்கள், அச்சங்கள் மற்றும் மருத்துவத்துறையில் சந்திக்கும் சவால்கள் போன்றவை குறித்து சத்குருவுடன் ஆன்லைனில் கலந்துரையாடினர்.

ஜலசக்தி துறையின் மத்திய அமைச்சருடன் சத்குரு

ஜூன் 5ம் தேதியன்று உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இணையத்தில் நேரலையில் இணைந்த ஜலசக்தி துறையின் மாண்புமிகு மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் சேகாவத் அவர்கள் சத்குருவுடன் கலந்துரையாடினார். சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து பல்வேறு பார்வைகள் இதில் விவாதிக்கப்பட்டன.

கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் சத்குரு…

'ஞானியுடன் கலந்துரையாடல்' நிகழ்ச்சிக்காக சமீபத்தில் சத்குருவுடன் இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் அவர்கள் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் பல்வேறு சுவாரஸ்ய கேள்விகளை அஸ்வின் சுழல் பந்தாய் வீச, ஆழமும் தெளிவும் கொண்டு சுவைபட அமைந்தது சத்குருவின் பதில்கள்.

ஈஷா யோகா வகுப்பு குறித்து ஆராய்ச்சியாளர் பகிர்வு

இண்டியானா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சித்துறை துணைத் தலைவர் டாக்டர்.செந்தில் சதாசிவம் மற்றும் வர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்புத் துறையின் ஆராய்ச்சியாளர் டாக்டர்.சுவாமிநாதன் சுதாராமன் ஆகியோர் 4 நாள் மற்றும் 8 நாள் ஈஷா யோகா பயிற்சி மேற்கொண்ட தியான அன்பர்களிடத்தில் தாங்கள் மேற்கொண்ட ஆய்வுகளிலிருந்து கண்டறிந்தவற்றை பகிர்ந்துகொண்டனர்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கண்ணுக்குத் தெரியாத எதிரியான வைரஸை எதிர்த்து முன்னணியில் நின்று களப்பணியாற்றும் சுகாதார - மருத்துவ பணியாளர்கள் மற்றும் காவல்துறையினருக்கு இலவசமாக ஈஷா யோகா ஆன்லைன் நிகழ்ச்சி வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பொதுமக்கள் அனைவருக்கும் 50% சலுகை கட்டணத்தில் இந்நிகழ்ச்சி வழங்கப்படுகிறது.

IYO-Blog-Mid-Banner

உலக பேட்மிண்டன் வீராங்கனையுடன் சத்குரு…

ஆரோக்கியமான ஒரு கலந்துரையாடலாகவும், அதேசமயம் கலகலப்பாகவும் அமைந்த இந்நிகழ்வில், உலக பேட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து அவர்கள் ஆன்லைன் சந்திப்பின் மூலம் சத்குருவிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தார்.

தேசத்தைக் கட்டமைக்கும் புதிய பார்வைகளுடன்…

“சவாலான இந்நேரத்தில் சத்குருவுடன்” தொடர் கலந்துரையாடலில் ஒரு பகுதியாக, கடந்த மே 22ம் தேதி "தேசத்தை புதிதாய் கட்டமைத்தல் மற்றும் ரியல் எஸ்டேட்டுக்கான புதிய சாத்தியங்கள்” என்ற தலைப்பில், CREDAI-MCHI and NAREDCO ஆகிய கூட்டமைப்புகளுடன் சத்குரு கலந்துரையாடினார்.

F1 சாம்பியனுடன் சத்குரு

கொரோனா தொற்றுநோய் அபாயத்தை மக்கள் எவ்விதத்தில் சமாளிக்க முடியும் என்பது குறித்து, முன்னணி தொழில்முனைவோரும் F1 பந்தயத்தில் உலக சாம்பியனுமான நிகோ ரோஸ்பெர்க்குடன் கடந்த மே மாதம் சத்குரு ஆன்லைனில் உரையாடினார்.

சவாலான இந்நேரத்தில் படைப்பாற்றல்

"சவாலான இந்நேரத்தில் படைப்பாற்றல்" என்ற தலைப்பில் கவிஞரும் எழுத்தாளரும், திரைத்துறை பிரபலமுமான பிரசூன் ஜோஷி அவர்களுடன், கடந்த மே மாதம் சத்குரு உரையாடினார். இந்நிகழ்வில், கவிதைகள் ஓவியங்கள் போன்ற கலைகளின் தனித்துவமான நுட்பங்கள் குறித்தும், நமக்குள்ள கலைத் திறமைகளை மெருகேற்றிக் கொள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன.

பைரவாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் சத்குருவின் ஓவியம்

ஈஷா யோக மையத்தில் வெகுகாலமாக வாழ்ந்து, கொரோனா ஊரடங்கு சமயத்தில் உயிரிழந்த காளை பைரவாவிற்கு நினைவஞ்சலி செலுத்தும் விதமாக, சத்குரு ஒரு ஓவியத்தை வரைந்துள்ளார். மாட்டுச் சாணம் மற்றும் பிற இயற்கை பொருட்களைக் கொண்டு வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த ஏலத்தொகை கொரோனா நிவாரண பணிகளுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

லாக்டவுன் நேரத்திலும் காவேரிக்காக உழைக்கும் கரங்கள்

காவேரி நதியை மீட்டெடுப்பதற்காக சத்குரு அவர்களால் முன்னெடுக்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கத்தின் தன்னார்வத் தொண்டர்கள், இந்த லாக் டவுன் நேரத்திலும் தொடர்ந்து தங்களது பணிகளை தடையில்லாமல் சிறப்பாக செய்துவருகின்றனர். இதுகுறித்து சத்குரு தனது ட்விட்டர் பதிவில் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

காவேரி கூக்குரலுக்கு ஹோம் ஸ்கூல் மாணவர்களின் முயற்சி

காவேரி கூக்குரல் இயக்கத்திற்காக 10000 மரக்கன்றுகளை வளர்ப்பதற்கு ஈஷா ஹோம் ஸ்கூல் மாணவர்கள் கடுமையாக செயல்செய்து வருகின்றனர். பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மாணவர்கள் தங்கள் முயற்சியால் ஏற்கனவே 5250 மரக்கன்றுகளை உருவாக்கி காவேரி கூக்குரல் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

கிராமப்புற மக்களைக் காக்கும் பணிகள்

கோவை தொண்டாமுத்தூர் பகுதிக்குட்பட்ட பஞ்சாயத்துகளிலுள்ள கிராமங்களில், நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் அனைத்து மக்களுக்கும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதோடு, நுரையீரல் திறனை அதிகரிக்கும் சக்திவாய்ந்த ஒரு எளிய பயிற்சியான 'சிம்ம கிரியா' -வை இலவசமாக ஈஷா தன்னார்வலர்களால் வழங்கப்பட்டு வருகிறது.
ஈஷாவின் முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய: Isha.co/BeatTheVirus