சத்தான கீரையுடன் சுவையான சப்பாத்தி ரெசிபி!

பெரும்பாலானோருக்கு சப்பாத்தி பிடித்தமான ஒரு பதார்த்தமாக மாறியுள்ளது! கீரை மற்றும் பலவித சத்தான பொருட்களைக் கொண்டு சப்பாத்தியில் ஒரு புது ரெசிபி உங்களுக்காக!
 

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 1 கப்
கடலை மாவு - 1 டேபுள் ஸ்பூன்
கம்பு மாவு - 1 டேபுள் ஸ்பூன்
அரிசி மாவு - 1 டேபுள் ஸ்பூன்
ராகி மாவு - 1 டேபுள் ஸ்பூன்
சோயாபீன் மாவு - 1 டேபுள் ஸ்பூன்
பாலக்கீரை - ½ கப்
வெந்தயக் கீரை - ½ கப்
தயிர் - ½ கப்
எண்ணெய் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகம் - சிறிதளவு
ஓமம் - சிறிதளவு
எள்ளு - சிறிதளவு
இஞ்சி விழுது - சிறிதளவு

செய்முறை:
பாலக்கீரை மற்றும் வெந்தயக் கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். எல்லாவகையான மாவினையும் அதில் சேர்த்து, தயிர், எண்ணெய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகம், ஓமம், எள்ளு, இஞ்சி விழுது அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து, அரைமணி நேரம் ஊறியதும் சப்பாத்தி செய்தால் மிருதுவாகவும், மிகவும் சுவையாகவும் இருக்கும்.


மேலும் பல சத்தான சுவையான ரெசிபிகளுக்கு ஈஷா ருசி பக்கம் பார்க்கவும்