மஹாசிவராத்திரி, இது ஈஷாவின் மிகப் பெரிய கொண்டாட்டம். பல லட்சம் மக்களை ஒன்றிணைக்கும் இந்நன்னாளில், தன் வீட்டிற்கு சத்குரு யந்திரத்தை பெற்றுச் சென்று அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட மாற்றத்தை நம்முடன் மனம் திறக்கிறார் ஐடி கம்பெனிப் பணியில் இருக்கும் இளைஞர் ஆகாஷ்...

ஆகாஷ்:

மஹாசிவராத்திரி திருவிழா முடிந்தது... திளைத்திருந்தோம் ஆனந்தத்தில்! இரவு முழுவதுமான கொண்டாட்டங்களுக்குப் பிறகு, அந்த காலைப் பொழுதில் வீட்டிற்குப் புறப்படும்போது உடன் கொண்டு செல்ல தயாராக இருந்தது அந்தப் பொக்கிஷம். பொக்கிஷத்தை வீட்டிற்குக் கொண்டு வரும் ஆனந்தத்தைக் கேட்கவா வேண்டும்? வீட்டில் கொண்டு வந்து வைத்ததும் மனத்தில் அத்தனை நிறைவு.

சத்குருவின் சந்நிதியை பூஜைக்குரிய இடத்தில் அமர்த்தி விளக்கேற்றிய போது ஏற்பட்ட அந்த உணர்வு ஆழமானது. சத்குருவை முதன் முதலில் பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு.

ஒருசில நாட்களுக்குப் பிறகு என் அலைபேசி மணி அடித்தது. அழைத்தவர், "இருபதாம் தேதி பூஜையை வைத்துக் கொள்ளலாமா?" என்று கேட்க, "அவ்வளவு தாமதம் வேண்டாம், விரைவாக வைத்துக் கொள்ளலாம், எங்களால் காத்திருக்க இயலாது..." என்று நான் கூற, 13ம் தேதி பூஜை நாளாக குறிக்கப்பட்டது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தெரிந்த நண்பர்களையும், உறவினர்களையும் அழைக்க ஆரம்பிதோம். அன்றிலிருந்து பூஜை நாள் வரை எங்கள் இல்லமே ஒரு திருமண வீடு போல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. போகிப் பண்டிகைக்குச் சுத்தம் செய்வது போல் வீட்டைச் சுத்தம் செய்வதும், வீட்டை எப்படி அலங்காரம் செய்வது என்றும், என்னென்ன உணவு செய்யலாம் என்றும் பட்டியல் நீண்ட வண்ணம் இருந்தது.

பூஜை நாளும் வந்தது. வீட்டில் மாக்கோலம், தோரணம் என வீடே விழாக்கோலம் பூண்டது. தியான அன்பர்களும், நண்பர்களும் மதியமே வந்து பூக்களால் வீட்டை அலங்காரம் செய்யத் தொடங்கினர். அன்று காலை முதல் இல்லமே ஒருவித தீவிரத்துடன் பொங்கி வழிவதை உணர முடிந்தது.

நேரம் ஓடியதே தெரியவில்லை. சட்டென்று மாலை 5:30 மணி ஆகி விட்டது. அந்த சூழ்நிலையே தெய்வீகமாக மாறிய போது எங்கள் இல்லமே கோவில் போல் தான் எல்லோர் உணர்விலும் இருந்தது. இவ்வளவு நேரம் நடந்த செயல்கள் யாவும் குருவின் வருகைக்காகத் தான்.

ஆம்! மஹாசிவராத்திரி திருவிழாவில் நாங்கள் பெற்ற அந்தப் பொக்கிஷம், சத்குருவின் பாத யந்திரம். இத்தனை நேரம் நான் குறிப்பிட்ட அந்தப் பூஜை, எங்கள் வீட்டின் சத்குரு சந்நிதியின் பிரதிஷ்டைக்கான பூஜைதான்.

சத்குருவின் சந்நிதியை பூஜைக்குரிய இடத்தில் அமர்த்தி விளக்கேற்றிய போது ஏற்பட்ட அந்த உணர்வு ஆழமானது. சத்குருவை முதன் முதலில் பார்த்த போது ஏற்பட்ட அதே உணர்வு.

வாசலில் பூக்கோலமும் விளக்குகளும் அனைவரையும் வரவேற்க, பூஜையும் தொடங்கியது. சில நொடிகளிலேயே சக்தியான அதிர்வுகளை உணர முடிந்தது. அதன் பின், இன்னும் சில நிமிடங்களில், என்னவென்று சொல்ல இயலாத ஆனந்தம் நெஞ்சில் நிறைந்திருந்தது. சத்குருவின் தன்மை தீவிரமாகப் பரவி, அனைவரும் ஆனந்த கண்ணீருடன் வெடித்தனர் என்று தான் சொல்ல வேண்டும்.

குறிப்பாக சில அனுபவங்களைச் சொல்ல வேண்டுமென்றால், என் தந்தை இதுவரை ஈஷா யோக மையம் வந்ததில்லை. சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைப்பெற்ற சத்குருவுடன் ஈஷா யோகாவில் மட்டுமே கலந்து கொண்டவர். அன்று பூஜை முடிந்து சந்நிதியை வணங்கும் போது, தன்னை அறியாமல் உடல் நடுங்கி கண்ணீரில் கரைந்தார். "நான் உடைந்து விட்டேன் சத்குருவின் அருளால்..." என்று பக்தியுடன் கூறினார்.

"உங்கள் வீடே தெரியாது. தோராயமாக வரும் போது, என்னை அவர் (சத்குரு) கட்டி இழுத்து வந்தார்" என்றார் நண்பர் ஒருவர். "தேரில் தூக்கிக் கொண்டு வந்து வைத்தது போல் காட்சியளிக்கிறார்" என்று ஒருவரும், "அருள் நிறைந்திருந்தது. வெடித்துப் போனேன். என்னை அழைத்ததற்கு நன்றி" என்று மற்றொருவரும் கூறிச் சென்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன் வீட்டு மாடியைச் சுத்தம் செய்யும் போது படியில் தவறி விழுந்து முகத்தில் காயம் கொண்ட என் அம்மாவின் முகம் பூஜையின் போது அத்தனை பிராகசத்துடன் மலர்ந்து இருந்தது வியப்பில் ஆழ்த்தியது. எங்கள் இல்லமே சக்தியுடன், அருள் நிறைந்து புது பொலிவு கொண்டுள்ளது, சத்குருவின் அருளால்.

சரணடைந்தேன் உன் சந்நிதியில்....., Saranadainthaen un sannidhiyil...

சத்குரு சந்நிதி பற்றி மேலும் தகவல்களுக்கு:

தொ.பே: 94890 00333
மின்னஞ்சல்: sadhgurusannidhi@ishafoundation.org