ஈஷாவில் 3ம் நாள் நவராத்திரி கொண்டாட்டம்...

ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா 9 நாட்கள் (அக்டோபர் 10 முதல் 18 வரை) விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பாரம்பரிய இசை, பரதநாட்டியம் மட்டுமின்றி நாட்டுப்புற கலை வடிவங்களும் அரங்கேறுகின்றன. 9 நாட்கள் திருவிழாவில், நேற்றைய மூன்றாம் நாள் கொண்டாட்டத்தில்  சம்ஸ்கிருதி மாணவர்களின் வாய்ப்பாட்டு கச்சேரி நடைபெற்றது.

மாலை 6:45 மணியளவில் ஈஷா யோகா மையத்திலுள்ள சூரியகுண்டம் முன்பாக துவங்கிய இந்நிகழ்ச்சியை நூற்றுக்கணக்கான மக்கள் கண்டுகளித்தனர்.

கர்நாடக இசையில் பார்வையாளர்களை கட்டிப்போட்ட அனுகிரஹா!

navarathri2018-day3-ishayogacenter-tamilblog-subjectimg

ஈஷாவில் மூன்றாம் நாள் நவராத்திரி கொண்டாட்டங்கள், கர்நாடக இசையில் வளர்ந்துவரும் இளம் பாடகரான திரு.அனுகிரஹா லக்ஷ்மணன் அவர்களின் குரலிசைக் கச்சேரியுடன் வெகு சிறப்பாக நிகழ்ந்தேறின.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஈஷா யோகா மையத்தில் ஆசிரமவாசிகள் மற்றும் ஈஷா சம்ஸ்கிருதி குழந்தைகள் பங்களிப்புடன் நேற்றைய மூன்றாம் நாள் நவராத்திரி கலைநிகழ்ச்சி தனிச் சிறப்புமிக்கதாக அமைந்தது.

ஈஷா சமஸ்கிருதி பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றும் திரு.அனுகிரஹா லக்ஷ்மணன் அவர்களின் கர்நாடக வாய்ப்பட்டு நிகழ்ச்சி சூரியகுண்டம் முன்பாக மாலையில் அரங்கேறியது. திருமதி.ஜெயஸ்ரீ அரவிந்த் அவர்களிடத்தில் கர்நாடக இசை பயின்ற இவர், பல்வேறு பெருமைமிகு சபாக்களிலும் கலாசார விழாக்களிலும் தனது இசை நிகழ்ச்சியை வழங்கி உள்ளார்.

anugrah-lakshmananin-vaipaattudan-3amnaal-navarathri-kondatam-shradharavindranviolinist

இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகைதரும் தலைசிறந்த கலைஞர்களின் கலைநிகழ்ச்சிக்கு மத்தியில், அனுகிரஹா அவர்களின் இசைநிகழ்ச்சி ஈஷா யோக மையத்தில் அரங்கேறியது ஈஷா சம்ஸ்கிருதிக்கு பெருமையான தருணமாக அமைந்தது. அவருடன் இணைந்து மேடையில் மிருதங்கம் மற்றும் கஞ்சிரா வாத்தியங்களை சம்ஸ்கிருதி மாணவர்கள் வசித்தனர்.

ஆல் இந்தியா ரேடியோவின் A-Grade கலைஞரான திருமதி.ஷ்ரதா ரவீந்திரன் அவர்கள் வயலின் இசையை வழங்கினார்.

மொத்தத்தில் இந்த கலைஞர் குழுவினர் அனைவரும் இணைந்து, பார்வையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் ஒரு இசை விருந்து படைத்தனர் என்றே சொல்ல வேண்டும்!

இன்று…

நான்காம் நாள் விழாவான இன்று (அக்டோபர் 13 ) குமாரி. ரேஷிகா அவர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி அரங்கேறவுள்ளது.

நாளை...

ஐந்தாம் நாள் விழாவான நாளை (அக்டோபர் 14 ) கலை தாமரை குழுவினரின் காவடி மற்றும் கரகாட்டம் நிகழவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு லிங்க பைரவி முகநூல் பக்கத்தில் இணைந்திடுங்கள்! தேவியின் அருள் மழையில் நனைந்திடுங்கள் !