சத்குருவுடன் ஒரு நாள்
கணங்கள் பல சேர்ந்ததே ஒரு நிமிடம்; நிமிடங்கள் சேர்ந்து மணிகளாகின்றன. 24 மணிநேரங்கள் சேர்ந்து ஒரு நாளாக ஆகிறது. நம் வாழ்க்கைப் பாதையில், இந்த ஒவ்வொரு நாளையும் எப்படி-யாருடன் பயணிக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையாக மாற்றுகிறது. ஒருநாள் முழுக்க சத்குருவுடன் இருக்க நேர்ந்தால் என்னாகும்?! அந்த அற்புத நாளைக் (டிச-4) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
 
 

கணங்கள் பல சேர்ந்ததே ஒரு நிமிடம்; நிமிடங்கள் சேர்ந்து மணிகளாகின்றன. 24 மணி நேரங்கள் சேர்ந்து ஒரு நாளாகிறது. நம் வாழ்க்கைப் பாதையில், இந்த ஒவ்வொரு நாளையும் எப்படி, யாருடன் பயணிக்கிறோம் என்பதே நம் வாழ்க்கையாக மாறுகிறது. ஒருநாள் முழுக்க சத்குருவுடன் இருக்க நேர்ந்தால் என்னாகும்?! அந்த அற்புத நாளைக் (டிச-4) குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!

முதன்முதலில் யோக ஆசிரியராக, யோக வகுப்பை சத்குரு துவங்கியபோது வெறும் 7 பேர் மட்டுமே அவரிடம் கற்றுக்கொள்ள வந்தனர். தானே வீதி வீதியாய் சென்று, சாலையில் போகிறவர்களிடத்தில் எல்லாம் யோகாவைப் பற்றி எடுத்துரைத்து, இந்த 7 பேரை யோக வகுப்பிற்கு தான் வரவழைத்ததை சத்குரு பகிர்வதுண்டு.

சத்குருவால் ஆழமாக தொடப்பட்ட இந்த 7 பேர், சிலரிடம் கெஞ்சலுடனும், வேறு சிலரிடம் அன்பாகவும் பேசி, ஒவ்வொருவராக சத்குருவின் வகுப்பில் சேர வைத்தது, இன்று ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் என்னும் மாபெரும் சமுத்திரமாய் உருவெடுத்து நிற்கிறது.

ஆனால் இப்போது, ஈஷா யோகாவிற்கோ சத்குருவிற்கோ எந்த அறிமுகமும் தேவையில்லை. 'சத்குருவே வகுப்பு எடுக்க வருகிறாரா...?!' என்ற ஆச்சரியக் குறியுடன் விரியும் கண்கள்தான் இங்கு ஏராளம். அதிலும், ஸ்பாட் ரெஜிஸ்ட்ரேஷன் செய்துகொள்ளலாம் என்ற எண்ணத்தில் வகுப்பு துவங்கும் நாளன்று வருபவர்களுக்கு இடம் கிடைக்காமல், ஏமாற்றமே மிஞ்சுகிறது. மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி, சென்னை, ஆதியோகி ஆலயம் என சத்குரு வகுப்புகள் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அரங்கம் மக்களால் நிறைக்கப்பட்டது நாம் அறிந்ததே!

மக்கள், யோகாவைப் பற்றிய தேவையான விழிப்புணர்வு பெற்றிருப்பதையும், தங்கள் வாழ்வில் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டுமென்ற, அவர்களின் ஆர்வத்தையுமே இந்த நிகழ்வுகள் காட்டுகின்றன. அந்த வகையில், மக்களுக்கு இன்னும் எளிமையாய் யோகாவை வழங்க, சத்குரு டிசம்பர் 4 ஆம் தேதியன்று ஆதியோகி ஆலயத்தில் காத்திருக்கிறார்.

டிசம்பர் 4ல் ஒரு புதுத் துவக்கம்!

வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று 'சத்குருவுடன் ஒரு நாள்' என்ற யோக வகுப்பு நடைபெறவுள்ளது. சத்குருவே நேரடியாக வழங்கும் இந்த யோக வகுப்பில், ஈஷா கிரியா, ஆசனங்கள் போன்றவற்றோடு உபயோகா போன்ற புதிதான யோக வடிவங்களும் சத்குருவால் வழங்கப்படவுள்ளன.

13 நாட்கள் யோக வகுப்பாக இருந்ததை 7 நாட்களாக குறைத்து, ஷாம்பவி மஹாமுத்ரா என்னும் தொன்மையான யோக அறிவியலை அறிமுகப்படுத்திய சத்குரு, அதையும் மூன்றே நாட்களில், தானே நேரில் வந்து முக்கிய நகரங்களில் வழங்கி வருகிறார்.

இப்போது, இந்த ஒரு நாள் யோக வகுப்பு இன்னும் புதுமையாய், இன்னும் எளிமையாய், தமிழ் மக்கள் அனைவரையும் முதன்முதலாகத் தொடவுள்ளது. டிசம்பர் 4 ஆம் தேதியன்று காலை 8 மணி முதல் இரவு 7 மணிவரை நடைபெற உள்ள இந்த வகுப்பில் கலந்து கொள்வதற்கு முன்பதிவு அவசியம்.

நிகழ்ச்சி நிறைவுக்குப்பின் பங்கேற்பாளர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. முன்பதிவு குறித்தும் நிகழ்ச்சி குறித்தும் மேலும் விபரங்கள் பெற கீழ்க்கண்ட தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

வடக்கு மண்டலம்: 83000 11000 (சென்னை மற்றும் அதைச்
சுற்றியுள்ள ஊர்கள்)
தெற்கு மண்டலம்: 83000 66000 (மதுரை மற்றும் அதைச்
சுற்றியுள்ள ஊர்கள்)
கிழக்கு மண்டலம்: 94425 04687 (திருச்சி மற்றும் அதைச்
சுற்றியுள்ள ஊர்கள்)
மேற்கு மண்டலம்: 83000 52000 (கோவை மற்றும் அதைச்
சுற்றியுள்ள ஊர்கள்)

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1