சத்குருவுடன் கூட்டு சேரும் வாய்ப்பு - ஈஷாங்கா 7%
பொருள்-தொழில் சார்ந்த வாழ்க்கையில் உங்கள் அறிவு, ஆற்றல், சிந்தனை மற்றும் செயல்பாடுகளோடு சத்குருவின் அருளும் ஒன்றிணையும்போது, வெற்றி என்பது தேடி வரக்கூடிய ஒன்றாகிவிடுமல்லவா?! இத்தகைய வாய்ப்பு இப்போது ‘நன்மை உருவம்’ மூலமாக அனைவருக்கும் காத்திருக்கிறது! ‘சத்குருவுடன் 7% கூட்டு’ பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!
 
 

பொருள்-தொழில் சார்ந்த வாழ்க்கையில் உங்கள் அறிவு, ஆற்றல், சிந்தனை மற்றும் செயல்பாடுகளோடு சத்குருவின் அருளும் ஒன்றிணையும்போது, வெற்றி என்பது தேடி வரக்கூடிய ஒன்றாகிவிடுமல்லவா?! இத்தகைய வாய்ப்பு இப்போது ‘நன்மை உருவம்’ மூலமாக அனைவருக்கும் காத்திருக்கிறது! ‘சத்குருவுடன் 7% கூட்டு’ பற்றி மேலும் அறிய தொடர்ந்து படியுங்கள்!

 

"7% கூட்டு என்பது பணத்தை பற்றியது அல்ல. ஒருவர் "என்னுடையது" என்பதிலிருந்து ஒரு 7% குறைத்தால், அந்த இடத்தை மிகப்பெரிய சாத்தியத்தால் நிரப்ப வாய்ப்பு இருக்கிறது. உங்கள் வாழ்வின் 7% என்னுடையது." - சத்குரு

ஈஷாங்கா என்றால் "ஈஷாவின் அங்கம்." "ஈஷாங்கா 7%" என்பது சத்குருவுடன் கூட்டு சேர்வது. உங்கள் வாழ்வில் சத்குருவின் அருள் மழை பொழிந்து அதன்மூலம், நீங்கள் உச்சபட்ச நல்வாழ்வினை அடைய முடியும்.

"ஈஷாங்கா 7%" என்பது சத்குருவுடன் கூட்டு சேர்வது. உங்கள் வாழ்வில் சத்குருவின் அருள் மழை பொழிந்து அதன்மூலம், நீங்கள் உச்சபட்ச நல்வாழ்வினை அடைய முடியும்.

ஈஷாங்கா 7% கூட்டில் இரு வகைகள் உள்ளன. முதல் வகை தனிநபர்களுக்கானது. மாத ஊதியம் பெறுபவர்கள் அல்லது சுயதொழில் செய்பவர்கள் தங்களது மாத வருமானத்தில் 7% ஈஷாவுக்கு வழங்கலாம்.

இரண்டாவது வகையில், வியாபார நிறுவனங்கள் மற்றும் கூட்டு வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக லாபத்தில் 7% ஈஷாவுக்கு வழங்க முடியும்.

நன்மை உருவம்

சத்குருவுடன் 7% கூட்டு வைத்துள்ள ஈஷாங்காக்களின் இல்லங்களில் சக்திவாய்ந்த அதிர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக சத்குரு அவர்கள் “நன்மை உருவத்தை" உருவாக்கியுள்ளார்கள். சத்குருவிடமிருந்து இந்த "நன்மை உருவத்தை" பெறும் அளப்பரிய வாய்ப்பு இந்த கூட்டின் மூலம் ஈஷாங்காக்களுக்கு கிடைக்கும். இவ்வருடம், "நன்மை உருவம்" வைபவம் ஜூலை 9, 2017 (குருபௌர்ணமி) அன்று நடைபெறவிருக்கிறது.

பகிர்தல்:

"சத்குருவை ஒரு கூட்டாளியாக வைத்துக் கொள்ளும் வாய்ப்பு நம்ப முடியாததாக இருக்கிறது. இந்த 7% கூட்டுக்கு நான் கையெழுத்திட்ட நாள் முதலாக, நான் செய்யும் அத்தனை செயல்களிலும் சத்குருவின் கருணையும், ஆசிகளும் என்னுள் படர்ந்து பரவுவதை நான் உணர்கிறேன். பணி நிமித்தமாக இருந்தாலும், மற்ற வேலையாக இருந்தாலும், உறவுமுறைகளிலும், என் ஆன்மீகத் தேடலிலும் சத்குருவின் ஆசிகள் என்னுடன் இருக்கின்றன. எனக்குள் புதிய பரிமாணங்களும், வாய்ப்புகளும் திறந்து கொண்டே இருக்கின்றன. என் கூட்டாளி என் வாழ்வை ஒவ்வொரு வகையிலும் மிகப் பெரிய அனுபவமாக மாற்றிவிட்டார்..."

-கல்பனா மனியர், தலைவர், வியாபார மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை

மேலும் விவரங்களுக்கு:

தொலைபேசி: 94425 04655, 94878 95872
மின்னஞ்சல்: 7percent@ishafoundation.org
இணையதளம்: isha.co/ishanga

online-registration

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1