ஜூன் 12ஆம் தேதியிலிருந்து ஜூன் 19ஆம் தேதி வரை சத்குரு அவர்கள் ஆப்பிரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். இதில், சத்குரு அவர்கள் யோகா வகுப்புகள் மற்றும் பல்வேறு மக்கள் நலப் பணிகளை துவக்கி வைத்தார். வறுமை மற்றும் உள்நாட்டு போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உகாண்டாவில் முதன்முறையாக மிகப் பெரியளவில் யோக வகுப்புகளுடன் கல்வி பணிகளையும் துவக்கினார்.

ஆப்பிரிக்க மக்களிடையே யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு பத்திரிக்கை மற்றும் அரசியல் பிரமுகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் சத்குரு பங்கு கொண்டார். "விதியை நாம் இயக்குவோம்" என்ற தலைப்பில் பி.பி.சி யின் உலக சேவை தொகுப்பாளரும், விருது பெற்ற பத்திரிக்கையாளருமான திரு. அலன் கசூஜா அவர்களுடனும், மார்டின் லூதர் கிங் "பெருந்தன்மைக்கு தலைவணங்குகிறோம்," விருது பெற்றவரும், கென்ய ஒளிபரப்புத் துறையில் செய்தி வாசிப்பாளராகவும் இருக்கும், திருமதி. ஜூலி கிச்சிறு அவர்களுடன், "பெண்மையின் எதிர்காலம்," என்ற தலைப்பில் சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆப்பிரிக்காவை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர்.

சத்குரு அவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஆப்பிரிக்க கிராம குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக, "சத்குரு பள்ளிகள்" துவங்கப்பட்டது. "சத்குரு பள்ளி"களின் நோக்கம் கிராமப்புற ஆப்பிரிக்க குழந்தைகளின் வாழ்வை உயிர்ப்பித்து, மாற்றம் பெறச் செய்து, அவர்களே மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும், தாங்கள் வசிக்கும் உலகமும் சமூகமும் மேம்பட பாடுபடுபவர்களாகவும் உருவாக்குவதாகும்.

சத்குரு அவர்களின் இந்தப் பயணத்தின் முக்கிய அம்சமாக, ஆப்பிரிக்க கிராம குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக, "சத்குரு பள்ளிகள்" துவங்கப்பட்டது. "சத்குரு பள்ளி"களின் நோக்கம் கிராமப்புற ஆப்பிரிக்க குழந்தைகளின் வாழ்வை உயிர்ப்பித்து, மாற்றம் பெறச் செய்து, அவர்களே மாற்றத்தை ஏற்படுத்துபவர்களாகவும், தாங்கள் வசிக்கும் உலகமும் சமூகமும் மேம்பட பாடுபடுபவர்களாகவும் உருவாக்குவதாகும்.

கல்வி கற்க இயலாத கிராமப்புற குழந்தைகளுக்கு சிறந்த தரமான, செயல்பாடு அடிப்படையில் அமைந்த ஆங்கில வழிக்கல்வியை சிறு பள்ளிகளின் இணைப்பு மூலம் வழங்குவதே சத்குருவின் நோக்கமாகும். இந்தப் பள்ளிகளிலிருந்து வெளிவரும் மாணவர்கள் தத்தமது துறைகளில் மிளிர்வதற்கான அத்தனை அத்தியாவசிய அம்சங்களும் இப்பள்ளியில் அமைக்கப்பட்டிருக்கும். இதனால் விவசாய, பொருளாதார, சுற்றுசூழல் மற்றும் படைப்பாற்றலின் வளர்ச்சி மையமாக இச்சமூகம் உயிர்ப்பித்து வளரும்.

மேற்கு உகாண்டாவில் உள்ள போர்ட் போர்டல் என்ற இடத்தின் அருகில் முதல் சத்குரு பள்ளி துவங்கப்பட்டது. திரு. ஜூலிட் நம்முடு நம்பி அவர்களுடன் ஒரு சிறப்பு கலந்தாய்வு நிகழ்ச்சியோடு ஜூன் 16ஆம் தேதி அன்று "சத்குரு பள்ளி" துவங்கப்பட்டது. "சத்குரு பள்ளி"களுக்கு நிதி திரட்டும் விதமாக ஆப்பிரிக்காவின் பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் சத்குருவுடன் ஒரு கோல்ப் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது .

மேலும், உகாண்டாவில் சத்குருவின் முன்னிலையில் நடைபெற்ற சிறப்பு யோகா வகுப்பில் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆப்பிரிக்காவில் உள்ள சீன சமூகத்தவரும், இந்தியர்களும் இதில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.