திருமதி. புஷ்பவள்ளியை கைதேர்ந்த ஈஷா வித்யா அலுவலராய் சத்குருவின் தீவிரமான பக்தராய் அவரைச் சுற்றியுள்ளோர் அறிவார்கள். ஆனால், தனது மகளுக்கு தன் கண் முன்னே நிகழ்ந்த அந்த பெருவிபத்திலிருந்து அவளை சத்குரு காப்பாற்றிய மெய்சிலிர்க்கும் அனுபவத்தை பற்றி பலருக்கும் தெரியாது. இங்கு நமக்காக மனம் திறக்கிறார்...

திருமதி.புஷ்பவள்ளி :

நான் 2008-ல் ஈஷா யோகா வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். என் கணவர் ஏற்கனவே வகுப்பு முடித்திருந்தார். நான் என் வகுப்பை முடித்தவுடன் தன்னார்வத் தொண்டு செய்ய ஆரம்பித்தேன். டிசம்பர் மாதத்தில் கடலூரில் ஈஷா வித்யா பள்ளியின் பூமி பூஜை நடந்தபோது அதற்கும் சென்றேன். அப்போது ஈஷா வித்யா திட்டத்திற்கு பொறுப்பாக இருந்த வெங்கட் அண்ணா ‘நீங்கள் இப்பள்ளியின் நிர்வாகப் பொறுப்பு எடுத்துக்கொள்ள முடியுமா’ என்று என்னிடம் கேட்டார். எனக்கு அந்தளவுக்கு வேலை அனுபவம் கிடையாது, எனவே நான் தயங்கியபோது, வெங்கட் அண்ணா, “எல்லோருமே கற்றுக்கொண்டு வருவது கிடையாது, உங்களால் நிச்சயமாக முடியும், சத்குரு உங்களுடன் இருப்பார்கள்” என்று சொன்னார். 2009ல் நான் ஈஷா வித்யா பள்ளிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.

என்னதான் இங்கே இருக்கிறது என்று பார்க்கலாமே என்று வந்தேன், அந்த சக்தி இவர்தானா என்று சத்குரு போட்டோவையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அட்மிசன் சம்பந்தப்பட்ட வேலைகள், கட்டிடம் சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாமே எனக்கு புதிதாக இருந்தன. ஆனால் ஒவ்வொரு நிலையிலும் சத்குரு எங்களுக்கு உறுதுணையாக இருந்தார். பள்ளியின் துவக்க காலம் என்பதால் அரசாங்கத்தில் இருந்து நிறைய சான்றிதழ்களும் வாங்க வேண்டி இருந்தது. கட்டிட உரிமம் குறித்து எதுவுமே எனக்கு அனுபவம் கிடையாது. ஆனால் சத்குரு என்னை கையைப் பிடித்து அழைத்துச் சென்று ஒவ்வொன்றையும் அறிமுகப்படுத்தி வைத்து, அதை எப்படி செய்வது என்று கற்றுக்கொடுத்தது போலவே இருக்கும். மெதுவாக ஒவ்வொரு சான்றிதழாக என் கைகளுக்கு வர ஆரம்பித்தது. அந்த செயல்கள் எல்லாம் உண்மையாக எப்படி நடந்தது என்றே எனக்கு தெரியாது.

ஒருமுறை, தாசில்தார் இந்த செயலை பண்ணவேமாட்டார், கட்டிட உரிமம் பெறுவது ரொம்ப சிரமமாக இருக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்தோம். எல்லா சான்றிதழ்களும் பெற்று குறிப்பிட்ட நாட்களுக்குள் பள்ளியின் அனுமதிக்காக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பள்ளிக்கு மிகவும் பிரச்சினை வரும் என்ற சூழ்நிலை இருந்தது. எனவே, ‘சத்குரு என்னால் முடியவில்லை, எனக்கு அந்த பில்டிங் லைசன்ஸ் எப்படியாவது கிடைக்குமாறு செய்யுங்கள்’ என்று வேண்டிக் கொண்டபோது, என்னதான் நடந்தது என்று தெரியவில்லை, பில்டிங் லைசன்ஸ் என் கைக்கே வந்துவிட்டது. அரசு அலுவலகங்களுக்குப் போகும்போது இப்படித்தான் வேண்டிக் கொண்டு போவேன். எப்படியோ வேலை முடிந்துவிடும். பிறகு அந்த அலுவலகத்தில், ‘என்னம்மா உங்களைப் பார்த்தாலே உங்களுக்கு வேலை முடித்துக் கொடுக்கத் தோன்றுகிறது’ என்பார்கள்.

அதேபோல, தொலைபேசி இணைப்பு என்று பார்த்தால் பள்ளிக்கு, பிராட்பேண்ட் இணைப்பு கேட்டிருந்தோம், பள்ளி மிகவும் தொலைவாக இருப்பதால் கொடுக்கவே முடியாது என்று BSNL ஆபிஸில் சொன்னார்கள். அதன்பிறகு ஒருநாள், BSNL ஆபிஸில் இருந்து அவர்களாகவே வந்தார்கள். வந்த அதிகாரி ஒரு முஸ்லிம். ஈஷாவிற்கு அவர் பரிச்சயம் இல்லை. வந்தவர் சத்குரு போட்டோவையே பார்த்தார், இங்கே நான் 15 நிமிடம் உட்கார்ந்து போகலாமா என்று கேட்டார். பிறகு சொன்னார், “நீங்கள் விண்ணப்பம் கொடுத்திருந்தீர்கள், இங்கே கேபிள் போடுவதற்கு நிறைய செலவு ஆகும். எனவே தரமுடியாது என்று மறுத்திருந்தோம். ஆனால் எங்களால் ஆபிஸில் உட்காரவே முடியவில்லை, போ போ என்று ஒரு சக்தி சொல்லிக்கொண்டே இருப்பதுபோல இருந்தது. என்னதான் இங்கே இருக்கிறது என்று பார்க்கலாமே என்று வந்தேன், அந்த சக்தி இவர்தானா என்று சத்குரு போட்டோவையே பார்த்துக் கொண்டு இருந்தார். என்னால் நம்பவே முடியவில்லை, ‘என்ன சத்குரு, நீங்கள் எல்லோரிடமும் போகிறீர்களா?’ என்று அழுதேவிட்டேன். மறுநாளே சேங்சன் ஆர்டரில் கையெழுத்திட்டு, கேபிள் வேலைகள் எல்லாமே பண்ண ஆரம்பித்துவிட்டார்கள். அதிகப்படியான செலவு எதுவுமே நாங்கள் செய்யவில்லை.

பள்ளிக்கு அங்கீகாரம் பெறுவதில் நான் மும்முரமாக இருந்தபோது, என் மகளுக்கு ஒரு விபத்து நடந்துவிட்டது. அப்போது அவளுக்கு 11 வயது. சிறுவர்களுக்கான யோகா வகுப்பு எங்கள் பள்ளியில் நடந்தது. பரத் அண்ணாதான் யோகா வகுப்பை நடத்தினார். யோகா வகுப்பு முடிந்தவுடன் நாங்கள் இருவரும், பள்ளி வேனில் வீட்டிற்குத் திரும்பும்போது, என் குழந்தைகளை அழைத்துக் கொள்வதற்காக அவர்களது பள்ளிக்கு சென்றோம். அந்த ரோடில் நிறைய ட்ராபிக் இருக்கும். பள்ளி வேன் நிறுத்திவிட்டு அவர்களை அழைக்க சென்றேன். அப்பொழுது எனக்கு ஒரு போன் வந்தது. அதனால் பரத் அண்ணா, ‘நான் போய் அழைத்து வருகிறேன்’ என்று இறங்கி சென்று என் பையனை அழைத்து வந்துவிட்டார். என் மகள் அவரிடம் ‘கடைக்குப் போய்விட்டு வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு பிறகு பின்னாலேயே வரும்பொழுது ரோட்டில் ஒரு ஆட்டோ லோடு வண்டி 50 மூட்டை சிமெண்ட் ஏற்றி வந்து கொண்டிருந்திருக்கிறது. அதை அவள் கவனிக்காமல் வந்து கொண்டிருந்திருக்கிறாள். அப்போது பரத் அண்ணா சத்தம் போட, போன் பேசுவதை நிறுத்திவிட்டு திரும்பிப் பார்த்தால் வண்டி அவள் மீது மோதி முதலில் கை மீது ஏறி பிறகு அவள் இடுப்பின் மீது 3 சக்கரங்களும் ஏறியது. கதறியபடியே அருகில் ஓடினேன், என்ன செய்வது என்று புரியவில்லை.

எங்கள் வாழ்க்கை இன்று எல்லாவிதத்திலும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னால், காரணம் சத்குருதான்!’’

அந்த அவசரத்திலும், லோடு ஆட்டோ டிரைவரை ஒன்றும் செய்துவிடாதீர்கள், என்று அங்கு கூடியவர்களிடம் கூறிவிட்டு, அருகில் இருந்தவர்களின் உதவியுடன் ஒரு ஆட்டோவில் ஏறி மருத்துவமனை சென்றுவிட்டோம். குழந்தைக்கு நிறைய ரத்தம் வெளியேறியது. வலிப்பு வந்தது, மயக்கமாகிவிட்டாள். அப்போதே, ‘என்ன சத்குரு இப்படி ஆகிவிட்டதே’ என்றேன். அப்பொழுது ஆட்டோ டிரைவர் ‘கவலைப்படாதீர்கள் ஒன்றும் ஆகாது’ என்று சொன்னார். நாங்கள் அரசு மருத்துவமனைக்கு தகவல் கொடுத்துவிட்டு, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு சென்றோம். அங்கே போனவுடன் பார்த்தால், நாங்கள் போன நேரத்தில் எப்பொழுதும் சீப்டாக்டர் இருக்கமாட்டார்களாம், ஆனால் அன்றைக்கு இருந்தார். உடனே குழந்தையை ICU வுக்கு எடுத்து சென்றார்கள். குழந்தையின் நிலை சீரியசாக இருக்கிறது என்று சொன்னார்கள். சத்குருவைத்தான் வேண்டிக் கொண்டிருந்தேன்.

ICU வில் அவள் சத்குரு... சத்குரு... என்றே முனகிக் கொண்டிருந்திருக்கிறாள். வெளியே வந்த நர்ஸ்தான் இதைப் பற்றி சொல்லிவிட்டு, கவலைப்படாதீர்கள், அவள் தேறிவிடுவாள் என்று சொன்னார்கள். ஆசிரமத்தில் இருந்து ஒரு ஸ்வாமி போன் செய்து, கவலைப்படாதீங்க அக்கா, ஒன்றும் ஆகாது என்று சொன்னார்கள். எல்லோருக்கும் உடனே எப்படித்தான் செய்தி போனது என்றே தெரியவில்லை, என் பெற்றோர்களுக்குக் கூடத் தெரியாது, அவர்கள் யாரும் எனக்கு போன் செய்வதற்கு முன்னால், அமெரிக்காவில் இருந்து வெங்கட் அண்ணா போன் செய்து, “கவலைப்படாதீர்கள் ஒன்றும் ஆகாது, நான் சத்குருவிற்கு செய்தி அனுப்பி விட்டேன், சத்குரு பார்த்துக்கொள்வார்” என்று சொன்னார். எனக்கு அந்த வார்த்தைகள் அந்த நேரத்தில் மிகவும் பலத்தைக் கொடுத்தது. டாக்டர்களும், “என்னம்மா, உங்களுக்கு எங்கெங்கிருந்தோ போன் வருகிறது, விசிட்டர்ஸ் இவ்வளவு பேர் வருகிறார்கள்” என்றார்கள். ‘பார்ப்பதற்கு மிகவும் சாதாரணமாகதான் இருக்கிறார்கள், இவ்வளவு பேர் வருகிறார்கள்’ என்று மற்றவர்களிடம் கேட்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு ஈஷாவிலிருந்து பலரும் போன் மூலமாகவும் நேரிலும் நிறைய உதவிகள் செய்தார்கள்.

‘பெண்ணுக்கு ஒன்றும் இல்லை, கையில் மட்டும் எலும்பு முறிவு இருக்கிறது. அதுவும் சிறிய வயது என்பதால் பிரச்சினை இல்லை. உடலில் உள்ளே எந்த தொந்தரவும் இல்லை, எல்லாம் நார்மலாக இருக்கிறது. மருத்துவரீதியாக இது ஒரு அதிசயம் என்று டாக்டர் மிகவும் ஆச்சரியப்பட்டார். அந்த 50 மூட்டை சிமெண்ட் பாரத்தையும் சத்குருதான் தாங்கிக்கொண்டிருக்கிறார். 11 வயது குழந்தையால் நிச்சயமாக அதைத் தாங்கவே முடியாது. இது என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத ஒரு சம்பவம். அதேசமயத்தில் பள்ளிக்கு அங்கீகார சான்றிதழ் பெற வேண்டியிருந்ததால் என் கணவர் சொன்னார், “நம் குழந்தை உடல் சரியாகிவிட்டது, ஒன்றும் பிரச்சினை இல்லை, நீ போய் அந்த வேலையை பார்” என்று சொன்னார். எனவே நான் மறுநாளே சான்றிதழுக்காக IMS ஆபிஸ்க்கு போக ஆரம்பித்து விட்டேன். பள்ளிக்கு அந்த ஆர்டரும் நல்லமுறையில் கிடைத்தது. IMS ஆபிஸில் நமது பள்ளியை பார்த்துவிட்டு மிகவும் பாராட்டினார்கள். அவர்கள் மற்ற தனியார் பள்ளிகளுக்கு செல்லும்போது, ‘எல்லோரும் போய் ஒருமுறை ஈஷா வித்யாவை பார்த்து விட்டு வாருங்கள்’ என்று சொல்வார்கள். இப்பொழுது நம் பள்ளிக்கு எந்த ஒரு உதவி தேவை என்றாலும் அரசாங்கம் நல்ல முறையில் உதவி செய்கிறது.

சத்குரு எனக்கு அளித்த வரம்!, Sadhguru enakku alitha varam!

சென்ற ஆண்டு சத்குரு பள்ளிக்கு வந்திருந்தார். குழந்தைகளுடனும் ஆசிரியர்களுடனும் பேசினார். இறுதியாக நான் அவரிடம் பேசினேன். ‘பள்ளி சம்பந்தமாக எந்த வேலையானாலும் நடக்குமா? நடக்காதா? என்ற சூழ்நிலை இருக்கும் பொழுது உங்களை நினைத்தாலே போதும் சத்குரு, அடுத்த நிமிடம் அந்த வேலை எப்படி நடக்கிறது என்றே தெரியாது சத்குரு’ என்று சொன்னவுடனே, சத்குரு என்னை பார்த்தார்கள். அவர் கண்களில் ஒரே கண்ணீர், எனக்கு அதைவிட கண்ணீர்.

எங்கள் வாழ்க்கை இன்று எல்லாவிதத்திலும் சந்தோஷமாக இருக்கிறது என்று சொன்னால், காரணம் சத்குருதான்!’’