ஈஷா ருசி

நமக்கு கோதுமை அல்வா தெரியும், திருநெல்வேலி அல்வா தெரியும் ஆனா அதென்ன ரஸ்க் அல்வா, ட்ரை பண்ணிப் பாருங்க! பசிக்கு ஈஸியான ருசியான அல்வா...

ரஸ்க் அல்வா:

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தேவையான பொருட்கள்

ரஸ்க் - 250 கிராம்
சர்க்கரை - அரை கிலோ
நெய் - 100 கிராம்
முந்திரி - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு

செய்முறை

ரஸ்க்கை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ளவும். ஒரு வாணலியில் சர்க்கரையை போட்டு சிறிது தண்ணீர் விட்டு சர்க்கரை கரையும் வரை கொதிக்கவிடவும். சர்க்கரை கரைந்தவுடன் ரஸ்க் பவுடரை சிறிது சிறிதாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும். அதில் நெய் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளறி அல்வா பக்குவம் வந்தவுடன் முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து அதில் சேர்த்து கிளறி இறக்கவும்.

உருளைக்கிழங்கு அல்வா:

1

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1 கப் (வேகவைத்து, மிக்ஸியில் அரைத்தது)
சர்க்கரை - 1 கப்
பால் - கால் கப்
நெய் - 2 ஸ்பூன்
முந்திரி, உலர்ந்த திராட்சை - தேவையான அளவு

செய்முறை

பாலை நன்கு காய்ச்சி, கொதித்தவுடன் சர்க்கரையைச் சேர்க்கவும். கரைந்தவுடன் மிக்ஸியில் அரைத்த உருளைக்கிழங்கைப் போட்டுக் கிளற வேண்டும். அல்வா பதம் வந்தவுடன், நெய் மற்றும் உலர்ந்த திராட்சை, வறுத்த முந்திரி போட்டு இறக்கிப் பரிமாறலாம்!