“நதிகளை மீட்போம்” பேரணியின் ஒருமாத கால பயணத்திற்கு பிறகு சத்குரு அவர்கள் “நதிகளை மீட்போம்” இயக்கம் பரிந்துரைக்கும் சட்ட வரைவு அறிக்கையை அரசாங்கத்திடம் ஒப்படைத்தார். இந்த முயற்சியானது இந்திய நதிகளை மீட்பதில் எந்த விதத்தில் செயல்படும் என்பதை அறிந்துகொள்ள விருப்பமா? அந்த அறிக்கையிலுள்ள சில முக்கியமான பகுதிகளை தொகுத்து இங்கே உங்களுக்காக வழங்குகிறோம். பகுதி 3ல் நதிகளை மீட்பதற்கான பிரதான தீர்வாக உள்ள மரம் நடும் திட்டத்தில் வல்லுநர்களின் பங்களிப்பு மற்றும் செயல்படுத்தப்பட வேண்டிய தன்மைகள் ஆகியவை ஆராயப்படுகிறது!

இந்த தேசத்தில், தலைமுறை தலைமுறையாக வந்த அனுபவப்பூர்வ புரிதலின் அடிப்படையில் நமக்கும் நதிகளுக்கும் இடையே உள்ள உறவானது, கலாச்சாரத்தை உருவாக்கி வழங்கிய ஓர் உயிருள்ள தன்மையாக இருந்துவருகிறது! இந்த உன்னதமான பாரம்பரியம் மறக்கப்பட்டு, இன்று தவறான திசையை நோக்கி சூழல் சென்றுகொண்டு இருக்கிறது. இன்றும் கூட நாம் ஆற்றங்கரை ஓரங்களில் ஆன்மீக சடங்குகளை மேற்கொள்கிறோம். ஆனால் அதே வேளையில் நாம் நதிகளிலேயே நேரடியாக கழிவுநீரையும் கலக்கிறோம். இது நம் முன்னோர்கள் ஆறுகளுடன் கொண்டிருந்த ஆழமான உறவினை நாம் மறந்துவிட்டதைக் காட்டுகிறது!

நம் தேசத்தின் நதிகள் மடிந்துகொண்டிருக்கின்றன. அனைத்து நதிகளுமே இத்தகைய அபாய நிலையில்தான் உள்ளது. அடுத்த 15-20 வருடங்களில் வற்றாத ஜீவ நதிகளாக இருந்தவை பருவகால நதிகளாக மாறிவிடும். இப்போது நாம் இதற்கான எதிர்வினை புரியவில்லையெனில், இந்த தேசம் கற்பனைக்கெட்டாத அளவிலான பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். குறிப்பாக 130 கோடி மக்களுக்கு தேவையான குடிநீர் இருக்காது!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நமது நதிகள் மீண்டும் அதே அழகுடன் செழித்து ஓட வேண்டுமென நாம் விரும்பினால், நதிகள் ஏன் வறண்டு வருகின்றன என்பதை புரிந்துகொள்ள வேண்டிய, அதற்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டிய தருணமிது! பெரும்பான்மையான நமது நதிகள் காடுகளினால் செழிக்கிறது என்பதால் நாம் காடுகளை வளர்ப்பதன் மூலமே நதிகளை மீட்டெடுக்க முடியும். இதன்படி, சத்குரு அவர்களால் “நதிகளை மீட்போம்” பேரணி துவங்கப்பட்டு நாடு முழுக்க நதிகளை மீட்பதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு தளங்களிலிருந்தும் அமைப்புகளிலிருந்தும் இதற்கான ஒருங்கிணைந்த தீவிரமான முன்னெடுப்புகள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும். இது 20-25 வருட காலத்திற்கு செல்லும் நீண்டகால முன்னெடுப்பாகும். நாம் இதை நோக்கி செயல்பட இப்போது தவறிவிட்டோம் எனில், எதிர்காலத்தில் நமது நதிகளை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடும்போது இதைவிட பல மடங்கு கூடுதலான சிரத்தை தேவைப்படும். அரசியல் தலைமைகள் மத்தியில் இப்போது சிறப்பான ஒத்துழைப்பு கிடைத்துள்ளது. 16 மாநில முதல்வர்களும் முதல்முறையாக கட்சி பாகுபாடுகள் இன்றி ஒரு நோக்கத்தில் நதிகளை காப்பதற்காக ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர்.

நதிகளை மீட்டெடுப்பதற்கு முதன்மையான தீர்வாக நதிக்கரைகளின் இருபுறமும் மரங்களை நடும் திட்டம் பரிந்துரைக்கப்படுகிறது! நதிகளுக்கு அருகாமையிலுள்ள பொது நிலங்களில், நிலம் முழுக்க நாட்டு மர வகைகளுடன் கூடிய காடுகளாக மாற்றப்பட வேண்டும். நதிக்கரைகளில் 1 கிமீ அகலத்திற்கு உள்ள விவசாய நிலங்களில் பல்வகை மரக்கன்றுகள் இருக்கும் வகையில் மரப்பயிர் வேளாண்மை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இந்த தீர்வை முன்னெடுப்பதற்கு தேவைப்படுவது: குடிமக்களிடையே இப்பிரச்சனை குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு; நதிகளை மீட்பதற்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விரிவான சட்டங்கள்; இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல்.

சட்ட உருவாக்கம், ஹைட்ரோஜியாலஜி, வனத்துறை, இயற்கை வள மேலாண்மை, மண் அறிவியல், தோட்டக் கலைத்துறை, நுண்-நீர்ப்பாசனம், கால்நடை அறிவியல், விவசாய உற்பத்தி சங்கங்கள், வேளாண்-வர்த்தகம், வேளாண்-சந்தைப்படுத்துதல், உயர்மட்ட நிர்வாகம், திட்ட செலவினம், சமூக செயல்பாடுகள், விவசாய கூட்டுறவு தலைமை, ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களிடமிருந்து தொழிநுட்ப ஆலோசனைகள் கேட்கப்பட்டு மிக வலுவான செயல்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தளங்களிலிருந்து அவர்கள் வழங்கிய பின்னூட்டத்தின் அடிப்படையில் செய்ல்திட்டமானது தொகுக்கப்பட்டுள்ளது. இந்த மரம் நடும் திட்டம் சிறப்பாகவும் திறம் மிக்கதாகவும் விளங்குகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த தீர்வை முன்னெடுப்பதற்கு தேவைப்படுவது: குடிமக்களிடையே இப்பிரச்சனை குறித்த பெரிய அளவிலான விழிப்புணர்வு; நதிகளை மீட்பதற்கான தேசிய மற்றும் மாநில அளவிலான விரிவான சட்டங்கள்; இந்த சட்டங்களை நடைமுறைப்படுத்துதல். இப்புத்தகத்தில் நதிகளை தொழிற்நுட்ப ரீதியாகவும் நடைமுறையிலும் எப்படி மீட்பது என்பது விளக்கப்பட்டுள்ளது. மேலும், விரிவான செயலாக்க திட்ட வடிவமைப்புகளை வழங்குகிறது.

இந்த புத்தகம் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதோடு கூடவே பல வல்லுநர்களின் பங்களிப்புகள் மற்றும் அறிக்கைகள் இதில் கூடுதல் இணைப்பாக இடம்பெற்றுள்ளன. இந்த புத்தகத்தில் உள்ள மையக் கருக்கள் மரம் நடுதல் குறித்த அனுபவங்களையும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது குறித்தும் மற்றும் வல்லுநர்களின் பகிர்தல்களையும் (கூடுதல் இணைப்பில் வழங்கப்பட்ட சில பகுதிகள்) கொண்டுள்ளது. 1ம் பாகத்தில் பிரச்சனைகளை வரையறுத்தல் மற்றும் அதன் வேர்களை ஆராய்தல்; 2ம் பாகத்தில் தொழிற்நுட்ப பலத்தின் மதிப்பீடு மற்றும் பொருத்தமான தகுந்த தீர்வுகள், அதாவது மரம் நடுதல் மற்றும் திறன்மிகு நீர்ப்பாசனம்; 3ம் பாகத்தில் பொது இடங்களிலும் விவசாய நிலங்களிலும் விரிவான தொழிற்நுட்ப-பொருளாதார ரீதியிலான மரம்நடும் திட்டம் மற்றும் தேவையான சட்ட உதவிக்கான கட்டமைப்பு; இறுதியான 4ம் பாகத்தில் இந்த தீர்வை நடைமுறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு, மாசு கட்டுப்பாடு மற்றும் தவறான பயன்பாடு ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கான கட்டமைப்பு என இந்த புத்தகத்தில் நான்கு பாகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது!

ஆசிரியர் குறிப்பு: மேலுள்ள பகுதிகள் “நதிகளை மீட்போம்” சட்ட வரைவு அறிக்கையிலிருந்து தொகுக்கப்பட்டது. நீங்களும் இந்தியாவின் நதிகளை மீட்கும் இந்த முயற்சியில் பங்குபெற விரும்பினால் அதற்கான எளிய வழி, 80009 80009 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பது! நதிகளை மீட்பதில், மிஸ்டு கால் கொடுப்பதால் என்ன நிகழும் என்பதை அறிய க்ளிக் செய்யுங்கள்!