புத்தாண்டைக் கொண்டாடப் பல காரணங்கள் காத்திருக்கின்றன. விடுமுறை தினம், வேலையில் ஒவர்டைம் பார்த்து ஓய்ந்தவர்கள் விடியவிடிய தூங்கி விடிந்தபின்பும் தூங்கலாம். நள்ளிரவில் புதுவருடம் வர, நண்பர்கள் ஒன்றுசேர்ந்து பார்ட்டியுடன் பட்டையைக் கிளப்பி, அடுத்தநாள் சுருண்டு படுத்துக்கொள்ளலாம். பாழாய்ப்போன பவர்கட் இல்லாமலிருந்தால் தொலைக்காட்சியில் விளம்பரங்களுக்கு ஊடே அவ்வப்போது எட்டிப்பார்க்கும் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம்.

இப்படி இத்தனை விதமான கொண்டாட்டங்களையும் புறக்கணித்துவிட்டு, புத்தாண்டு தினத்தன்று சென்னையின் முக்கியப் பகுதியான R.A புரத்தில் உள்ள Image அரங்கத்தை ஒரு உற்சாகமான கூட்டம் நிரப்பியிருந்தது. இங்கே கூடியிருந்த 1500 பேரின் நோக்கம், 'ஈஷா கிரியா' கற்றுக்கொள்வதன் மூலம் புத்தாண்டை வரவேற்பதுதான்! இங்கே பொங்கிய உற்சாக வெள்ளம் வித்தியாசமானது, வேறெங்கும் காணக் கிடைக்காதது.

அரங்கம் அதிர அனைவரையும் நடனமாட வைத்த ஈஷாவின் இசை முழக்கம் (Sounds of Isha) குறிப்பிடத்தக்கது. ஈஷா அன்பர்கள் Sounds of Isha வின் இசைக்கு ஆடுவதும் ஆனந்தத்தில் குதிப்பதும் புதிதல்ல. ஆனால் அரங்கத்திலிருந்த பெரும்பான்மையானவர்களுக்கு அன்றுதான் ஈஷா அறிமுகம்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பரவசத்தில் பிரகாசிக்கும் முகங்களுடன் ஆடிப்பாடி, ஒவ்வொரு பாடலுக்கும் அவர்கள் கால்கள் மெட்டுப்போட்டு, கைகள் கரகோஷமிட்டன. ஈஷா கிரியா தீட்சை அனுபவம் மற்ற ஈஷா வகுப்புகளுக்குக் குறைந்ததல்ல என்பதை அங்கே அவர்களின் கண்ணீரால் நனைக்கப்பட்டக் கன்னங்களும் அமைதியுடன் கண்மூடியிருந்த முகங்களும் உணரச்செய்தன.

ஒரு சொட்டு ஆன்மீகமாக ஆரம்பித்து, ஆனந்த அலையாக உருவெடுத்த ஈஷா கிரியா தீட்சை வழங்கும் நிகழ்ச்சி, 15 மையங்களில் இதே நாளில் நடைபெற்றது. இதில் மொத்தம் 2000 புதிதாக தீட்சைப் பெற்றனர்.

பங்கேற்பாளர்கள் தியானத்தை உணர்ந்து சென்ற விதத்தையும், அனுபவித்த ஆனந்தத்தையும் பார்த்த ஈஷா தன்னார்வத் தொண்டர்கள், இதுபோல் ஆயிரம் நிகழ்ச்சிகள் நடத்துமளவிற்கு உற்சாகத்தோடும் சக்தியோடும் தயாராகிவிட்டார்கள்.

புத்தாண்டிற்கு இதைவிடச் சிறப்பான ஒரு துவக்கமும் இருக்க முடியுமா?

பல மேடைகளில் நமக்கு இசை விருந்து படைத்த Sounds of Isha, 2008ல் பல லட்சம் மக்களை தன் இசையால் திளைக்க செய்த ஒரு சிலிர்ப்பூட்டும் வீடியோ உங்களுக்காக...